நேபாளத்தில் விரைவில் நடக்கவுள்ள இந்து திருவிழா ஒன்றின்போது பல்லாயிரக்கணக்கான விலங்குகள் பலிகொடுக்கப்படுவதை நேபாள அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸின் முன்னாள் சினிமா நட்சத்திரமும் மிருக வதைத் தடுப்பு ஆர்வலருமான பிரிஜீத் பார்தோ வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற காதி மாய் துர்க்கை அம்மன் திருவிழாவிற்காக நேபாளத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவின் சில இடங்களிலிருந்தும் கூடுகின்ற பக்தர்கள், 5 லட்சம் வரையிலான கால்நடைகளையும் விலங்குகளையும் பலி கொடுக்கவிருப்பதாகத் தெரிகிறது.
இந்த மிருக பலி சடங்கை எதிர்த்து மிருக உரிமைகள் மற்றும் புத்த மத குழுக்கள் ஏற்கனவே அழுத்தம் தந்துவரும் நிலையில், இந்த திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். துர்க்கை அம்மனின் ஒரு வடிவமான காதி மாய் என்ற பெண் தெய்வத்தை திருப்திப்படுத்துவதற்காக லட்சக்கணக்கான மிருகங்கள் பலிகொடுக்கப்படுகின்றன.
மிருகங்களை பலி கொடுத்தல் என்பது, தீங்குகள் நீங்கி வளம் பெருக உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் இது காட்டுமிராண்டித்தமான, காலத்துக்கு ஒவ்வாத செயல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இப்பொழுதே சென்னைக்கு நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் வர ஆரம்பித்துள்ளன, அவையும் பலி கொடுப்பதற்காகத்தான்! கூட ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளும் சேரும். அதையும் தடைசெய்யச் சொல்வீரா?