நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் பரதன் யாதவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நேபாளத்தில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஜனாதிபதி இவராவர். மன்னராட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த மாவோயிஸ்ட்டுகளுக்கு இது ஒரு பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
அவர்களால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளரான ராம்ராஜா பிரசாத் சிங் ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தலில் இரண்டாவது இடத்தையே பெற்றார்.
நேபாளத்தின் ஜனாதிபதி பதவி என்பது ஒரு சம்பிரதாயமான அலங்காரப் பதவிதான் என்றாலும், அங்கு அமையவுள்ள புதிய அமைச்சரவை தெரிவுக்கு இந்த ஜனாதிபதி; தேர்தல் ஒரு முக்கிய முன்நகர்வாகப் பார்க்கப்படுகிறது.