நேபாளத்தில் எதிர்வரும் செய்வ்வாய் – 19.112013 – பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது. இத்தேர்தலில் மாவோயிச சிறுபான்மை சந்தர்ப்பவாதத் தலைவரான பிரசண்டாவின் கட்சி மற்றும் இந்து அடிப்படை வாதக் கட்சி உடப்ட 100 கட்சிகள் வரை 240 ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றன. இந்திய, சீன அரசுகளதும் ஏகாதிபத்திய அரசுகளின் தலையீடுகளும் நேபாளத்தின் புரட்சியைத் தற்காலிகமாகப் பின்னடையச் செய்தன. நாற்பத்து ஐந்தாயிரம் அன்னிய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் நேபாளத்தில் மூலைமுடுக்குகள் எல்லாம் முளைத்து மக்களைப் அன்னிய நிதி மூலதனத்தின் பிச்சைக்காரர்களாக மாற்றியுள்ளன.
இந்த நிலையில் நேபாளத்தின் மன்னராட்சியை வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டுவந்த மாவோயிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையினர் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) (CPN(M))தேர்தலை நிராகரிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகின்றது. பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் பிரச்சார நடவடிக்கைகள் பெரும் வரவேற்பைப் பெற்றறுள்ளது.
இதனால் பலர் கட்சி உறுப்பினர்கள் அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள்னர். பிரசன்டா, பாபுராம்ம் போன்ற புரட்சியை நடத்திய தலைவர்களும் காட்டிக்கொடுப்பாளர்களாக மாறியுள்ள நிலையில் நேபாள அரச படைகள் தேர்தலை நிராகரிக்கக் கோரும் அனைவரையும் கைது செய்து சிறையில்டைத்து வருகின்றது.
Nepal should seek advice and trainning from the from the Sri Lanka Army.