வெள்ளை நிறத்தில்
’பென்டர்’ மட்டுமாய்
பெரும் கிணறொன்றைத் தாண்டுவதாய்
ஒரு உருவம்
நினைவில் நிற்கிறது
அவ்வுருவம்
எங்கேயும் எப்போதும்
யாருக்காகவும் நின்றதில்லை
உயர் மதில்களையும் வேலிகளையும்
தாண்டியும் குதித்தும்
பனைமரங்களிடை சுற்றியும்
இன்றைய என் நினைவுகளிலும்
ஓடிக்கொண்டே இருக்க்கிறது
நெடிய உருவம்
முகம் நினைவில்லை
கண்ணில் சிவப்பு
எப்போதும் தீவிரம்
அடுத்தது ஓட்டம்
ஈரம் சொட்டச் சொட்ட
அரைக்குளியலுடன்
யார் யாரோ துரத்த
ஓடிய ஒருநாள்…
பின்கோடி மதிற்சுவரை
தாண்டிய பின்
தகவல் ஏதுமில்லை…
மாரியாய் குண்டுகள்
கொட்டித்தீர்த்த பின்னும்
இடியாத மதிற்சுவரும்
இரு துவாரங்களும் பார்க்கையில்
ஆழ்மனதில் துமிக்கிறது
ஒன்று உனக்கு
இரண்டாவது
பக்கித்தில் நின்றதற்கு
அன்றுன்னைத் தேடிப்போன
மூத்தவனுக்கான துவாராம்
எந்த மதில் சுவரில் படிந்திருக்கும்?
எந்த ஒரு மதிலையும்
பழஞ்சுவறென்று இடித்துவிடாதீர்
அத்துவாரங்களினூடு பார்க்க வேண்டும்
ஏதாவது தகவல் வரலாம்…
………………
போராளி சிவனேஸ்வரனுக்கு (1954 – 1983) சமர்ப்பணம்
குறிப்பு(இனியொரு) : புளட் இயக்கப் போராளியும் அதன் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவருமான சிவனேஸ்வரன் அந்த இயக்கத்தின் உள்முரண்பாடுகளால் கொலைசெய்யப்பட்டார். சிவனேஸ்வரனைத் தேடிச்சென்ற அவரின் சகோதரரும் கவிதாவின் தந்தையுமான விக்னேஸ்வரனும் அதே இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கபடுகிறது. சிவனேஸ்வரனின் மற்றொரு சகோதரர், சிவனேஸ்வரனைக் குறிவைத்த இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிப்போனார்.
சிவனேஸ்வரனை நேரில் சந்தித்திருக்கிறேன். இருபத்து நாலு மணி நேரமும் போரட்டத்தைப் பற்றிச் சிந்தித்தவர்களில் அவரும் ஒருவர். 27 வருடம் கடந்து போனபோது அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை தந்த கவிதாவுக்கு எனது நன்றி.
இலங்கை எனும் அழகிய வீடு இனவாதத்தால் இடிந்து நொருங்கிய போது அனைத்து அடக்குமுறகளயும் உடைக்கப் புறப்பட்ட இளயோர்,சூறாவளீக் காற்றீல் சிக்குணட படகு போல காணாமல் போயினர்.இன்றூ வரை அவர்கள் உயிரோடு வரமாட்டார்களா? என ஏங்கும் பெற்ற மன்ங்கள் காணாமல் போன தமது பிள்ளகள தேடிக் கொண்டிருக்கிறார்கள்.சிவனேஸ்வரன் சுட்டவனும் அவனைச் சுடச் சொன்னவனும் இன்றீருப்பார்களோ தெரியாது ஆனால் சிவனேஸ்வரன் குரல் நம் எல்லோரதும் குரலாய் ஒலித்துக் கொண்டெ இருக்கும்.
I show him after 1983. He has been murderd in later part of the 1985 or begining of 1986. TBC Ramrajan may help you to find the time frame, becaseu when he murderd Parnthan Rajan in PLO. Nad Santhathiyar ( Vasanthan) issues was inhigh peek wihtin PLOTE. Sulipuram Ravi in Canada. Mouku MOrthy in Europe or India as Pastor for re-born christian. Aachi Rajan passed away in India. – Kaka (Sivaneswaran) always repected by rank and file PLOTE memebers. He is freindlly and kind person. He always particiapte and be a roll modeal for every activities. It’s supreise some one caught him – he was so much aleard and carfull person around him and us.. He is the last one takes the meal while we were friends. – Still i missed all careness from him and his family. Thanks for this moment to make me write some aboout unforgetable persons. We love U buddy. God Bless U.
உங்கள் தகவல்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
மன்னிக்கவும்,,,,,
இணையத்தளம் ஒன்று இடம் தருகிறதென்பதால் கவிதை என்றபெயரில் எதை வேண்டுனென்றாலும் எழுதவேண்டியதுதானா. கீழே குறிப்பு எழுதப்படாவிட்டால் நகைப்புக்கிடமாகியிருக்கும், தயவுசெய்து கண்ணதாசன் பாரதியார் பாடல்களை பார்த்து கருத்துச்செறிவுடன் கவிநயத்துடனும் கவிதையாக எழுதுங்கள் .ஒருசில பத்துப்பேருக்கு குறிப்பிட்ட கவிஞர் பற்றியும் அவரது சுற்றம் சூழல் பரீச்சியமானதாக இருக்கலாம், பல
ஆயிரக்கணக்கானவர்களுக்கு எரிச்சலூட்டும், மரணக்கல்வெட்டானாலும் வரலாறு முன்னே புலம்பப்படுகிறது,
http://www.vaarppu.com/poet/290/
இந்த இணைப்பில் கவிதாவின் சில புதுக்கவிதைகள் நீங்கள் படிக்கலாம். படித்துவிட்டு கவிஞருக்குரிய விமர்சனங்களை வையுங்கள். வெறுமனே பிதற்றுவதைவிட்டு.
முந்திய கருத்து பின்னூட்டம் கவிஞர், உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் வருந்துகின்றேன் உடன்பிறப்புக்களின் இழப்புக்கள் நானும் அறிந்து அனுபவித்தவை. அதுபற்றிய கருத்து எதையும் பின்னூட்டம் குறிக்கவில்லை) நான் குறிப்பிட்ட அனைத்தும் கவிதையின் அமைப்பு சம்பந்தப்பட்டவையே,
தயவு செய்து மொட்டையாக இப்படி விமர்சிப்பதை விட்டு, நீங்கள் காணும் குறைகளைக் குறிப்பாகவும் ஒவ்வொன்றாகவும் எடுத்துரைத்தால் கவிஞர் உட்பட எல்லாருக்கும் பயன் கிடைக்கும்.
முதலில் கோபித்து பிறகு வருந்துவது சைக்கோத்தனமானது……..மாரியாய் குண்டுகள் கொட்டித் தீர்த்த பின்னும்……..இடியாத மதிற் சுவரும்……இரு துவாரங்களூம் பார்க்கையில்………..அடி மனதில் துமிக்கிறது………கவிதை என்பது அனுபவிப்பது அது தெரியாத போது படைப்பாளீ மீது ஏறீப்பாய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
உங்களுக்கும் இவ்விதமாய் குடும்ப உறுப்பினரை இழந்த அனுபவம் உண்டா? கவிதைக்கு யார் எப்போது வரம்பு கட்டினார்கள்?
ஓ,,,,, அப்படியா? கவிதைக்கு பொய்யழகென்றுபார்த்தால் எந்த வரையறையும் தேவையில்லையா ?,,ஓ தெரியாமல்ப்போச்சு!
எந்த மதிலையும் பழஜ்சுவரென்றூ இடித்து விடாதீர்………….இங் கே தான் வலியின் ஆழம்……………சாவு வீட்டுக்கு வந்து அலங்காரம் சரியில்லை என்பதாய் பேய்க்கதை கதைப்பதுதான் பண்பாடோ/////////////////////
தெரிந் துகொள்ளுங்கள், கவிதா புதுக்கவிதை எழுதுகிறார் பழயவை பற்றி.
இந்த கவிதையில் பாரதிக்குஞ்சு சொன்னது போல சிரிப்பிற்கிடம் எங்கே இருக்கிறது என்று புரியவில்லை. அழகியல் மட்டும் கவிதையல்ல. சிவனேஸ்வரன்(காகா) என்பவருக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அரைப்பற்றிய ஒரு விவாத்தைத் தொடங்கிய கவிஞர் கவிதாவுக்கு நன்றி. பாரதி கண்ணதாசன் தவிர்ந்த தற்போதய கவிஞர்களின் கவிதைகளையும் கொஞ்சம் படியுங்கள் பாரதிகுஞ்சு. இப்போதெல்லாம் கவிதைக்கு மெய்தான் அழகாக இருக்கிறது என்பது புரியும்.
சிவசேகரம் ஈறாக கவிதா உட்பட பல மக்கள் கவிஞர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே! அவர்களை அன்னியமாக்கி விடாதீர்கள். உறவுகள் மீது கூட அரசியல் பார்வையை முன்வைக்கும் கவிதா போன்ற ஒரு சில கவிஞர்கள் இன்று எமக்குத் தேவை!
அருமையான கவிதை. ஈழப் போராட்டத்தில் உள் முரண்பாடுகளால் கொல்லப்பட்ட சகல உறவுகளுக்கும் இக்கவிதை சமர்ப்பணம். அருமை நண்பர்களே! “வங்கம் தந்த பாடம்” மற்றும் “புதியதோர் உலகம்” போன்ற நாவல்களை எங்கு பெற முடியும்?
//“வங்கம் தந்த பாடம்” மற்றும் “புதியதோர் உலகம்” போன்ற நாவல்களை எங்கு பெற முடியும்?//
படிப்பகம் இணையத்தளத்தில் இவை உட்பட பல அரிய விடயங்களை வாசிக்கலாம். http://www.padippakam.com/