தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்புக்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு சரியான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தற்போதைய பிரதம நீதியரசர் பக்கச்சார்பற்ற நிலையிலும், சுயாதீனமாகவும் செயற்படுவாரா என்பது சந்தேகமே என கொழும்பைச் சேர்ந்த மனித உரிமைச் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாகவிக்கிலீக்ஸ் ஆவணங்களை ஆதாரம்காட்டி கொழும்பு டெலிகிராப் தகவல் வெளியிட்டுள்ளது.