மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் என்னும் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை ஏற்று தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார். அன்று முதல் தமிழ்நாட்டில் பல்லாயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வருகிற 12-ஆம் தேதி 198 மையங்களில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வர்கள் www.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் உச்சநீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம். ஒரு சிலருக்காக நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்லி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு (GOI) கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது. நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கட்டும்.” என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.