2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நீட் என்ற நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. அன்று முதல் திமுக அந்த தேர்வுக்கு எதிராக போராடி வருகிறது. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இது தொடர்பாக தமிழக எம்.பிக்கள் சந்திக்க சென்ற போது அமித்ஷா சந்திக்க மறுத்து விட்டார். இது தொடர்பாக பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு “அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா எங்களை சந்திக்க மறுக்கிறார். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலயில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “எந்தவொரு நுழைவுத் தேர்வாக இருந்தாலும் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால்தான் நுழைவுத் தேர்வு இல்லாமல், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், கல்லூரி சேர்க்கை நடத்துவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும். நீட் விலக்கு மசோதா குறித்து தமிழ்நாட்டு எம்.பிக்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை நீட் தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடைபெறும்.” என்றார்.