நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தமிழக அரசு செய்து வரும் நிலையில் நீட் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
மருத்துவக் கல்வியில் இள நிலை படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை ( NTA ) இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு 198 -நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் உருவாகும் பாதிப்புகள் தொடர்பாக ஆராய ராஜன் தலைமையிலான கமிட்டியை தமிழக அரசு அமைத்திருக்கும் நிலையில் இப்போது நீட் தேர்வை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.