நீங்கள் அடிக்கடி இவ்வாறு போராட்டமென தலையிடி கொடுப்பீர்களானால் நான் பொறுமையிழந்து விடுவேனென எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இன்றைய தினம் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர்களது போராட்ட முடிவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நான் உங்களது நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி வருகின்றேன்.அவரும் உறுதி வழங்கியுள்ளார். இதை குழப்பும் வகையில் நீங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளீர்கள்.இவ்வாறான சீண்டல்கள் என்னை பொறுமையிழக்கச் செய்துவிடும் இதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அரசை நீங்கள் மிரட்டி எதனையும் செய்ய முடியாது.அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.இங்கு ஊடகவியலாளர்களும் நிற்கிறார்கள்.எனக்கு எது சரியென படுகின்றதோ அதனையே நான் செய்வேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.அவருடன் வடக்கின் ஆளுநர் சந்திரசிறி மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளென பலரும் கலந்து கொண்டனர்
பேசாம ஆச்சிரமத்தில் சேருங்கோ…
புக்கையும் தின்னலாம்,மணியும் அடிக்கலாம்…..
அதைவிடுத்து சாமியாரை எதிர்த்தால்…???…!!!!…..
குறிப்பு:தொண்டரடிப்புராணம் ஆறாம் பக்கம் மூன்றாம் பந்தி.
He survived Welikada Magazine Prison in July 1983. He said it right. We must grab what ever we can and keep going forward.
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு. சிலர் பக்குவமாக இறங்கி வருவார்கள். சிலர் தலைகுப்புற விழுவார்கள்.
That is also true Mr. Mahendra. I think the President will complete his second term. I am no sure about the government. A new UNP government will throw all these guys out.
உங்கள் கருத்து புரிந்துகொள்ளக்கூடியது நம்பிக்கைக்கும் அப்பால் நிகழந்த சம்பவங்கள் இதற்கு வலுவூட்டுகின்றது. 1977ம் ஆண்டு அநுராதபுரத்தில் என்னை என் குடும்பத்தோடு யமனின் வாசல்படிவரை சிங்களக் காடையர்கள் துரத்திவந்தபோது எங்களைக் காப்பாற்றிக் கதிரேசன் கோவிலிலும், சிற்றம்பலம் தியேட்டரிலும் 18மணித்தியாலங்கள் பாதுகாத்து வைத்திருந்து, இன்று நாங்கள் உயிரோடு இருப்பதற்கு காரணமானவர்களும் அதே சிங்களச் சமூகத்தில் இருக்கும் சிங்களவர்கள்தான்.
You are right Mahendra. They are not a homogenous society. The past thirty years had been a traumatic experience for them as well. I am happy that you mentioned your ordeal in 1977 here. Family friend Sivasamboo the Medical Technologist at the Anuradhapura Hospital lost his life. He is from Karainagar in the North.