இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ குறைந்த பட்சம் ‘தேசிய சக்திகள்’ என்ற எல்லைக்குளாவது செயற்பட எல்லா வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன. தேசியம் என்பதன் அடிப்படையைக் கூட அவர்கள் விளங்கிக்கொள்ளாமல் அன்னிய அதிகாரசக்திகளின் அரசியல் போட்டிக்குள்ளும் ஏகாதிபத்தியக் காய் நகர்த்தல்களுக்குள்ளும் தம்மை அமிழ்த்திக்கொள்கின்றனர்.
இன்று ஜனாதிபதி ஆணைக்குழு என்ற மகிந்த அரச பாசிசத்தின் போலி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் மக்கள் கூறுகின்ற சாட்சியங்களால் யாருக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. ஆனால் சாட்சி கூறுபவர்களின் மன உறுதியும் துணிவும் வியக்கவைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் எல்லாவற்றையும் இழந்தாயிற்று. இனிமேல் இழப்பதற்கு உயிரைத்தவிர எதுவும் இல்லை என்ற அளவிற்குத் துணிந்திருக்கிறார்கள்.
ராஜபக்ச,ஏகாதிபத்திய நாடுகள்,தமிழ்த் தேசிய பாராளுமன்றக் கட்சிகள், தமிழ் நாட்டின் தமிழ் உணர்வாளர்கள், புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் என்ற தமக்குள் முரண்பட்ட, உடன்பட்ட அரசியல் சக்திகளிடையேயான போலி நாடகம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் பலி கடாக்கள் தான் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனம்.
பலர் இந்த நாடகத்தின் உட்கூறுகளைப் அறியாதவர்கள். சிலர் அலட்சியமாகப் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் தெரிந்துகொண்டும் தமது வர்க்கம் சார்ந்த அரசியல் சதியை நடத்துகிறார்கள்.
வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற பின்னர் இப்போது மூன்றவது தடவையாக ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப் போவதாக அமெரிக்க-பிரித்தானிய அரசுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அன்றி இலங்கையில் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகின்ற வேறு எவருமோ, தீர்மானம் குறித்த வரலாற்றுப் பின்னணி பற்றியோ அன்றி அதன் சாதக பாதக அம்சங்கள் பற்றியோ இதுவரை மக்களுக்குப் தெரிவிக்கவில்லை. முழுமையான ஆய்வு ஒன்றை எப்போதும் முன்வைத்துப் பழக்கப்படாத இவர்கள் குறைந்த பட்சம் வழமையான ஊடக அறிக்கை மாதிரியைப் பின்பற்றிக் கூட எதுவும் வெளியிடவில்லை.
அதி உச்சபட்சமாக இலங்கை அரசை விசாரணை செய்வதற்காக ஒரு ஆணைக்குழுவை ஜெனீவாவில் நியமிக்கக் கோரும் தீர்மானத்தை மட்டுமே அமெரிக்க , பிரித்தானிய நிறைவேற்ற இயலும். இலங்கை அரசு தன்னுடைய போர்க்குற்றங்களைத் தானே விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்ற குறித்த கால அவகாசத்தோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.
இவ்வாறான பிற்போடும் காலப்பகுதியில் இலங்கை அரசு, தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பௌத்த சிங்கள மயமாக்குவதுடன் முழு இலங்கையையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்து முடித்திருக்கும்.
பல சந்தர்ப்பங்களில் நான் தெரிவித்த இக்கருத்துகளையே சனல் 4 ஆவணப்படத் தயாரிப்பாளர் கலம் மக்ரே பிரான்சில் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாட்டில் கடந்தவாரம் தெரிவித்திருக்கிறார்.
ஜெனிவா திருவிழாவில் காவடி எடுக்க முற்படும் அரசியல் சக்திகளை இலகுவாக வகைப்படுத்தலாம்.
1. இலங்கை அரசாங்கம்.
இந்த தசாப்தத்தின் அதிபயங்கர கிரிமினல்களின் கூட்டு இந்த அரசு. அமெரிக்கா,பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற ஏகாதிபத்தியங்களால் நேரடியாகக் கையாளப்படுபவர்கள். டேவிட் கமரனின் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கமான, மாக்ரட் தட்சருக்கு ஊடக ஆலோசனைகளை வழங்கிய பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனதின் ஆலோசனையோடு செயற்படும் ராஜபக்ச அரசு மிகவும் நுண்ணியமாகச் செயற்படுகிறது. போர் முடிந்த பின்னர் ராஜபக்ச ஜ.நாவில் ஆற்றிய உரை பிரித்தானியாவிற்கும் அமெரிக்க அரசிற்கும் எதிரானதாக அமைந்திருந்தது. அந்த உரையைத் தயாரித்தவர்கள் பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனமே. அதனை அவர்களே தெரிவித்திருக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு ராஜபக்ச நிகழ்த்திய இந்த உரை அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்கு எதிரான லத்தீன் அமெரிக்க நாடுகளை ராஜபக்ச சார்புடையதாக மாற்றியது.
இதன் மறுபக்கத்தில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தலைமைகளுக்கு எதிரானதாக மாற்றியது. ஆக, ராஜபக்சவைப் போன்றே அவர்களும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக மாற்றப்பட்டார்கள்.
2. புலம் பெயர் அமைப்புக்கள்
ராஜபக்ச இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து அதிகாரம் படைத்த ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும் போது நேரடியாக ஏகாதிபத்தியங்களால் கையாளப்படும் மிகக் கோரமானவர். தமக்கு எதிரன பேச்சுக்களைக் கூட ஏகாதிபத்தியங்கள் தாமே தயாரித்துக்கொடுத்தன. வெளி உலகத்தைப் பொறுத்தவரை ராஜபக்ச ஏகாதிபத்திய எதிர்பாளர். புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள். இதனால் போராடும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும், தமிழ் அமைப்புக்களுக்கும் இடையே இரும்புத் திரை ஒன்று போடப்பட்டது.இதுவே அதிகாரவர்க்கதிற்குக் கிடைத்த போருக்குப் பின்னான வெற்றி.
இந்த இரும்புத் திரை புலம் பெயர் தமிழ்த் தலைமைகளின் வர்க்க இருப்பிற்கும், இனவாத அரசியலுக்கும் வசதியாக அமைந்தது. புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைமையைத் தக்கவைத்துக்கொண்டவர்களுக்கும் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமது இருப்பிற்காகவும், வர்த்தக நலன்களுக்காகவும், தமது வாழ்கையை ஏகாதிபத்திய நலன்களோடு பின்னிக் கொண்டவர்கள். தாம் வாழும் நாடுகளின் மந்திரிகளோடும், உளவு நிறுவனங்களோம் விருந்துண்ணும் இவர்கள், ராஜபக்ச ஏகாதிபத்தியத்தின் அடியாள் என்று தெரிந்துகொண்டாலும் தாம் ஏகாதிபத்திய சார்பான அரசியல் நடத்துவதற்குப் புதிய நியாயங்களைத் தேடிக்கொள்வார்கள்.
3. தமிழ் நாட்டில் ஈழ அரசியல் ஆர்வலர்கள்.
இலங்கையில் காலனி ஆதிக்கத்தின் பின்னரும் கட்டிக்காக்கப்பட்டு வந்த இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்ற அழிக்கப்படும் போது அவற்றை ஆதாரமாகக் கொண்ட தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற அடிப்படைக் காரணமாகவிருந்த உயர்கல்வியை ஐ,எம்,எப் உம், பிரித்தானிய அரசும் அழிக்க முற்படும் போது உணர்ச்சியற்று மரத்துப் போன தமிழ் உணர்வாளர்கள், டேவிட் கமரன் இலங்கை சென்ற போது குதூகலித்தார்கள். வெறுமனே உணர்ச்சி அரசியலையே தமது இருப்பிற்கு ஆதரமாகக் கொண்டுள்ள தமிழக அரசியல்வாதிகளை இந்திய அரசும் ஏகாதிபத்தியங்களும் நேரடியாகக் கையாள வேண்டிய அவசியமில்லை. இவர்களது உணர்ச்சி அரசியலைக் கையாள புலம் பெயர் ஏகாதிபத்திய சார்பு அமைப்புக்களே போதுமானவை. இன்னொரு புறத்தில் இவர்கள் புலம் பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அளவிற்குப் பிற்போக்கனவர்கள் அல்ல. சீமானோ, திருமுருகன் காந்தியோ வெளிப்படையாகப் பாரதீய ஜனதா போன்ற மதவாதிகளுடன் இணைந்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற முடியாத அளவிற்கு திராவிடப் பாரம்பரியம் தமிழ் நாட்டில் இன்னும் அழிந்துவிடவில்லை. இந்த அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் இவர்களின் அரசியலில் இழையோடுகிறது. ஈழத்தின் புறச் சூழல் குறித்தோ, அங்குள்ள சமூக அரசியல் நிலைமைகள் குறித்தோ வாசிப்பு அறிவு கூட இல்லாத இவர்களின் ஏகாதிபத்திய எதிர்பு வலுவற்றது
4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்
விக்னேஸ்வரன் என்ற இந்து மதவாதியின் ‘அகிம்சை’ அவரின் முன்னரேயே ஆர்.சம்பந்தனின் அதிகார வர்க்கம் சார்ந்த அரசியலோடு ஒத்துப்போனது. இதன் பின்னர், புலிகளின் அரசியல் தவறுகளையும், வழிமுறைகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இலங்கை அரசின் இருதயத்தில் கால்களால் உதைப்பது போன்ற கருத்துக்களை முன்வைத்தாலும் இவர்களின் ஆதார சக்திகள் ஏகாதிபத்தியம் சார்ந்த புலம் பெயர் தமிழ் அமைப்புக்களே.
தேசியக் கூட்டமைப்பு பாரம்பரியமாக ஏகாதிபத்தியம் சார்ந்த அமைப்பு. மக்கள் மீதும் போராட்டங்கள் மீதும் எப்போதுமே நம்பிக்கைகொண்டவர்கள் அல்ல. தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி இலங்கையின் எல்லைக்குள் உணர்ச்சிவயப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது. மக்களை அணிதிரட்டுவது, மக்கள் யுத்ததை ஒழுங்கமைப்பது, போராட்ட சக்திகளை இனம்கண்டுகொள்வது போன்ற அடிப்படையான ஜனநாயக வேலைகளைக் கூட இவர்கள் முன்னெடுப்பதில்லை, அதற்கான அரசியல்திட்டம் கூட அவர்களிடமில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலம்பெயர் சார்ந்த பதிப்பான இவர்கள் ஜெனிவா தீர்மானம் குறித்த குறைந்தபட்ட அரசியலைகூட மக்கள் முன் வைத்ததில்லை.. ஜெனிவா தீர்மானம் போன்ற உடனடியான அரசியல் நாடகங்கள் குறித்துக்கூட மக்களிடம் இவர்கள் கூறுவது கிடையாது.
இவை அனைத்துக்கும் அப்பால், இலங்கை அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவது போன்று தோற்றமளிக்கும் நிலாந்தன், கருணாகரன் போன்றோரின் அரசியல் கருத்துக்கள் மக்களை மையப்படுத்துவதில்லை. நிலாந்தன் கலம் மக்ரே அளவிற்குக் கூட தான் வாழும் மண்ணின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதில்லை.
அவ்வப்போது நிலந்தன் போன்றோர் நடத்தும் கவனியீர்ப்பு எழுத்து நடவடிக்கைகள் மேற்குறித்த எந்த அரசியல் சக்திகளிலிருந்தும் வேறுபட்டதல்ல. இப்போது ஜெனிவாவில் எல்லாத் தமிழர்களும் ஒற்றுமையாகை வேண்டியதைப் பெற வேண்டும் என்கிறார். யார் என்ன தருகிறார்கள் பெற்றுக்கொள்வதற்கு? ஜெனிவா தீர்மானம் குறித்துக் கட்டமைக்கப்படும் மாயை தமிழ் மக்களை எவ்வாறு பாதிக்கும்? போன்ற அடிப்படையான மக்கள் மத்தியிலிருந்து எழும் விசாரணைகளைக் கூட இவர்களின் எழுத்துக்கள் முன்வைப்பதில்லை.
நிலாந்தன் புலிகளிலிருந்து வெளியேறியிருந்த 80 களின் நடுப்பகுதியில் அவரை அவரது ஈச்சமோட்டை வீட்டில் சந்தித்தேன். தீவுப்பகுதிக்கான புலிகளின் பொறுப்பாளராகவிருந்து முரண்பாடு காரணமாக வெளியேறியிருந்தார். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, ஏற்கனவே ஆரம்பித்திருந்த தலைமறைவுக் கட்சி ஒன்றைக் குறித்துப் பேசுவதற்கான பாசறை நண்பர்களுடன் அங்கு சென்றிருந்தேன். என்னுடன் வந்திருந்தவர்களே அதிகமாகப் பேசினார்கள். தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அதற்கான ஒடுக்கப்பட்ட மக்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதையும் அவர்களின் விடுதலை தேசிய விடுதலைப் போராட்டத்தோடு சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீண்ட நேரம் பேசினோம். அவர் விரக்தியடைந்திருந்தார். உலகம் முழுவதும் அதன் குறிப்பான சூழலுக்கு அமையப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமைக்கான உதாரணங்கள் காணப்படுகின்றன என்று என்னுடன் வந்திருந்தவர் ஆறுதல் கூறினார்.
என்னுடைய மத்தியதர வர்க்க உணர்வு போராட்டத்தில்ருந்து அன்னிய தேசத்தின் பொருளாதாரச் சிறக்குள் என்னைத் துரத்த நிலாந்த மீண்டும் புலிகளுடன் இணைந்திருந்தார்.
இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து உரையாடலை ஆரம்பிப்பதற்கான அனைத்துத் தேவைகளும் உள்ளன. இன்றைய இளைய சமூகத்திடம் எமது வர்க்க சுபாவம் குறித்து சுய விமர்சனம் செய்துகொள்வதும் எதிர்காலத்தைப் பற்றி ஆராய்வதும் இன்று அவசரமான அவசியம்.
“நிலாந்தன் கலம் மக்ரே அளவிற்குக் கூட தான் வாழும் மண்ணின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதில்லை”.
நிலாந்தனின் எழுத்துக்கள் உடுக்கை அடிப்பவனின் வாயில் இருந்து வரும் வசனங்கள் போன்றே இருக்கும். ஆத்தா வந்திட்டா…. கெட்டது செய்தவன் தண்டிக்கப் படுவான்……. ஆத்தா மடை படையல் கேட்கிறா ….. (காசு, நகை) இது புலிகள் இருந்த காலத்தில் நிலாந்தன் அடித்த பறை அல்லது அளப்பறை. இப்படி அடித்து அடித்து பிரபாகரனையும் புலிகளையும் கவிழ்த்துவிட்ட பல தொண்டரடி போடிகளில் நிலாந்தனும் ஒருவர். இப்போதும் குறி சொல்கிறார் நிலாந்தன் அது புலிகளற்ற சூழலில் உள்ள வெற்றிடத்தில் போதிய நம்பிக்கையற்ற படிமானங்களில் பிடிமானத்தை தேடும் போதனைகளை மக்கள் மத்தியில் பரப்பும் இவர் எந்த காத்திரமான பொறிமுறைகளும் வழிமுறைகளுமற்ற பயணப் பாதையில் மக்களை பயணிக்க தூண்டுகிறார். தாம் வாழ்ந்த சொந்த சமூகத்தில் எந்த முயற்சிகளையும் எதிர் புரட்ச்சிகரமாக பார்க்கும் கட்டமைப்பில் இருந்து வந்தவர்களிடம். மக்கள் சார்ந்த புரட்சிகர கோட்பாட்டு வறுமை இருப்பதில் வியப்பில்லை. ஒரு பத்திரிக்கையாளன் இன்றைய ஒடுக்கப்படும் தமிழ் சமூக சூழலினை கையாள்வது என்பது அச் சமூகத்தின் ஒடுக்கு முறைக்கு எதிரான மக்கள் திரளை உருவாக்குவதிலும் அதற்கான மக்கள் தலைமையை இனங்காட்டுவதிலும் கொண்டிருக்கக் கூடிய வெற்றிகரனான பொறிமுறை சார் திறன் ஆகும். அதுதான் அவனின் காலத்தின் கட்டாயமும் ஆகும்.
## ஒரு ஊடகவியலாளன் ஒடுக்கபடும் தமிழ் சூழலை கையாள்வதென்பது அச்சமூகத்தின் ஒடுக்கு முறைகெதிரான மக்கள் திரளை உருவாக்குவதிலும் அதற்கான மக்கள் தலைமையை இனம் காட்டுவதிலுமாகும் ##
ஊடகவியலாளர் நிலாந்தனாவது தாயகத்தில் இருந்து கொண்டு ஊடக பணியினை மேற்கொள்கிறார் .
ஆனால் சபாவும் , ராகவனும் அவர்களுக்கு பிடிக்காத ஏகாதிபத்திய கூட்டு கிரிமினல்களான மேற்குலக நாடுகளான கனடாவிலும் , பிரித்தானியாவிலும் இருந்து கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி , திரள் போராட்டம் , தலமை என வாயால் வெட்டி கிழித்துக்கொண்டிருக்கிறார்கள் …
புரட்சிகர கோட்பாடு ,வர்க்கப்போராட்டம் , மக்கள் திரள் போராட்டம் , அதனூடான தலைமை அதன் பின் எல்லாம் சுபம் என்று பறை அடிப்பதும் ” ஆத்தா வந்துட்டா , ஒடுக்கப்படவனுக்கு நல்லகாலம் பொறந்துடிச்சு , ஏகாதிபத்தியவாதிக்கு கெட்ட காலம் பொறந்துடிச்சு ஏய் சாரயாம் கொண்டு வா ” என்று குறி சொல்வதும், உடுக்கை அடிப்பவனின் வாயிலிருந்து வரும் சொற்களாகத்தான் பார்க்கப்படும்
## இலங்கை அரசு , பிரித்தானியா , அமெரிக்கா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியன அதிபயங்கர கிரிமினல்களின் கூட்டு##
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு மேற்படி நாடுகளை விட அதிகமாக உதவி செய்த நாடுகள் ரஷ்யாவும் சீனமும் .
அது மட்டுமல்ல இன்று வரை இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணை வளையத்துக்குள் வர விடாமல் செய்வதற்கு முழு ஆதரவையும் அந்த இரு நாடுகளுமே வழங்கி வருகின்றன .
நிலைமை அவ்வாறிருக்க கட்டுரையாளர் எல்ல பழிகளையும் மேற்குலக நாடுகள் மீது ஏகாதிபத்தியம் , கிரிமினல் அது இது என்று போட்டு விட்டு ரஷ்யாவையும் சீனத்தையும் நைசாக விட்டு விட்டார்.அல்லது நல்ல பிள்ளைக்கு வைத்து கொண்டு விட்டார்.
ரஷ்யாவுக்கும் , சீனாவுக்கும் ராஜபக்ச நல்ல பிள்ளை.
அப்படியானால் , ரஷ்யாவையும் சீனாவையும் வால் பிடித்து , மேற்குலகை திட்டி தீர்க்கும் கட்டுரையாளர் ராஜ பக்சவிற்கு விசுவாசியா ?
‘ராஜபக்சவின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது. அவரின் ஏகதிபத்திய எதிப்புப் பேச்சுகளைத் தயார்செய்து கொடுப்பதே பெல் பொட்டிங்டர் என்ற பிரித்தானிய நிறுவனம். இவர்கள் டேவிட் கமரனின் கட்சியான கொன்சர்வேட்டிவின் முன்னை நாள் பிரதமர் மார்க்ரட் தட்சருக்கு நெருக்கமானவர்கள். ஜெனீவா மாநாட்டில் ராஜபக்ச தண்டிக்கப்பட மாட்டார்.’ இந்தக் கருத்துக்களைக் கூறியவர் சனல் 4 ஆவணப்படத் தயாரிப்பாளரான கலம் மக்ரே. பிரன்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மக்ரே பின்வரும் தகவல்களைத் தெரிவித்தார்.
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையின் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்த இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும் என நினைக்கின்றேன்.
இலங்கை தனது தீர்வான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இன்னும் கால அவகாசத்தை ஏற்கனவே கோரியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகளை தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பினால் முடியாது போனது. தற்பொழுது என்ன நடக்கின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தற்பொழுது செய்வதற்கு ஒன்றுமில்லை. இறுதிக்கட்ட போரில் மேற்குலக நாடுகள், அமெரிக்கா, சீனா, ஈரான், இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் ராஜபக்ஷவுக்கு உதவின.
போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய திறமையான உரை குறித்து கவனம் செலுத்துங்கள். இலங்கை பயங்கரவாத்தை எதிர்க்கொண்டு இதனை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் நாடுகளின் உள்விவகாரங்களில் பலமிக்க நாடுகள் தலையிடக் கூடாது எனவும் அவர் அமெரிக்காவை மறைமுக சுட்டிக்காட்டி கூறியிருந்தார்.
இது வேடிக்கையான மற்றும் பொய்யான ஏகாதிபத்திய எதிர்ப்பு. இந்த கதையினை ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் நம்பின.
https://inioru.com/?p=39253
அப்போ கலம் மக்ரே ராஜபக்ச விசுவாசியா…
நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ராஜபக்ச விசுவாசியா:
http://tamilnet.com/img/publish/2010/01/Dublin_Permanent_Peoples_Tribunal_Final__Report.pdf
## ராஜபக்சவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போலியானது ##
சரி அப்படியே இருக்கட்டும் .
ராஜபக்சவின் ரஷ்யா , சீனாவின் ஆதரவு எத்தைகயது ?
அல்லது சீனா , ரஷ்யா இன்று வரை இலங்கை அரசையும் , ராஜபக்ச குடும்பத்தையும் தத்தெடுத்ததை ப்போல் முண்டு கொடுத்து ஆதரித்து பாராட்டி சீராட்டி வருவதன் மர்மம் என்ன ?
மேற்படி இரு தரப்பினதும் பரஸ்பர ஆதரவும் கூட போலியானதா ?
சரியா வரலையே ?
நிறைய இடிக்குதே ??
நண்பரே கட்டுரை நாடுகளுக்கு இடையேயான சண்டை பற்றிப் பேசவில்லை. அமெரிக்காவிற்கு அதிகமாகக் கடன்கொடுப்பது சீனா தான். சைப்பிரஸ் போன்ற நாடுகளில் ரஷ்ய மாபிய அரசின் துணையோடு அப்பாவி மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டுரை பேசுவது அதுவல்ல. ஏகாதிபத்திய நாடுகள் ரஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களை அழித்தன இன்றும் அழித்து வருகின்றன. இதனால் இந்த நாடுகளை நம்பியிராமல் மக்க்கள் போராட்டத்தை தோற்றுவிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் அதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட வேண்டும் என்பதே. இந்த உண்மையை சொல்லும் போது உங்களுக்கு இடிக்காமல் இருக்க வேண்டுமாயின் கட்டுரையை இன்னும் ஒரு தடவை வாசியுங்கள்.
நானும் நாடுகளுக்கிடையிலான சண்டை பற்றி பேசவில்லை.
னாடுகளுக்கிடையிலான ஆதரவு நிலை அதன் உண்மை த்தன்மை , போலித்தன்மை பற்றியே குறிப்பிருந்தேன் .
அதுவும் கூட உங்களது கருத்துதான் . அதற்கு பதில் கருத்துதான் தெரிவித்திருந்தேன்.
கட்டுரையை யும் , தங்களது பின்னூட்டத்தையும் நன்றாக வாசித்த பின்பே பின்னூட்டமிட்டேன்.
கட்டுரையிலும் சரி தங்களது பின்னூட்டத்திலும் சரி ஏகாதிபத்தியா நாடுகள் என்று கூறி மேற்குலக நாடுகளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டு சீனாவையும் , ரஷ்யாவையும் தொடாமல் நல்ல பிள்ளைக்கு விட்டு விட்டீர்கள் .
தங்களது கடைசி பின்னூட்டத்தில் மட்டும் வேறு வழியில்லாமல் , போனால் போகிறதேயென்று சீனாவையும் , ரஷ்யாவையும் சேர்த்துள்ளீர்கள் ..
Lala, நீங்கள் உங்கள் கொல்லைப் புறத்தை விட்டு வெளியேறப் பழகுங்கள். தமிழன் என்றதும் ஆபிரிக்கனும் தமிழன், சீனாக்காரனும் தமிழன் என்று சிலித்தனமாக வரலாற்றுக் கனவில் ஈடுபட கட்டியிருந்த கோவணமும் களவாடப்படும் நிலையே உருவானது. இதையே நீங்கள் பெருமை பேசாமல் அமைதியாகப் போராடும் இந்தியப் பழங்குடி மக்களிடம் சொன்னால் உங்களை விசித்திரப் பிறவியாகத் தான் பார்ப்பார்கள். லட்சம் லட்சமாய் மக்களை அழிக்கும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிர்ந்து விட்டு பெருமை வேறா பேச வேண்டும்? யூகோஸ்லாவியாவில், கிரேக்கத்தில், அமெரிக்காவில், இந்தியாவில், கச்மீரில், குர்திஷ்தானில், கொலம்பியாவில், ஸ்பானியாவில், என்று குட்டிக்குட்டி நாடுகளில் எல்லாம் மக்களின் போராட்டங்கள் தோல்வியடையவில்லை. வெற்றியை நோக்கித் தான் செல்கின்றது. நீங்கள் தான் ஏகாதிபத்தியங்களின் கிடிகிப் பிடிக்குள் சிக்குக்கொண்டு சீனாவையும் ரஷ்யாவையும் நோக்கிச் சுட்டுவிரலை நீட்டுகிறீர்கள். சீனா இந்தியாவின் மிகப்பெரிய வியாபாரப் பங்காளில், அமெரிக்காவிற்குக் கடன்வழங்கும் மிகப்பெரிய நாடு. வியாபார வெறியர்களால் ஆளப்படும் இந்த இரு நாடுகளும் யாரோடு வேண்டுமானாலும் வியாபாரம் செய்வார்கள். அதனைக் காட்டிக்கொண்டு ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாகவும் உளவாளிகளாகவும் மக்களைக் காட்டிக்கொடுக்காதீர்கள்.
முன்னய யூக்கோஸ்லாவிய நாடுகள் பிரிந்து செல்வதற்கும் மிலோசவிச் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படுவதற்கும் என்ன இலாபத்திற்காக செய்தார்களோ தெரியவில்லை ஆனால் நேட்டோ படைகள் குண்டுகள் வீசியே சேர்பியாவை அடக்கி ஏனய நாடுகள் சுதந்திரம் பெற்றன இதற்கும் ரஸ்ஷியா எதிர்ப்பாகவே இருந்தது.
இருதரப்பு வா்த்தகம் என்பது எதிரி நாடுகள்கூட சாதாரணமாக செய்து கொள்ளும் விடயம். சீனாவிடமிருந்து அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்காவாகும் இங்கே அமெரிக்காவை நம்பியே ஏறக்குறய சீனப்பொருளாதாரம் இப்போதைக்கு உள்ளது இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய நிலுவையே பெரிய கடனாக உள்ளது.
மேற்கத்தய நாட்டு தனியார் நிறுவனங்கள் ஏனய உலக நாட்டு அரசுகளுடனோ அல்லது தனியார் நிறுவனங்களுடனோ உடன்பாடு வைத்துக்கொள்வது ஒரு சாதாரண விடயம் அதில் ஒன்றே பெல் பொட்டிங்டா், தேவை ஏற்படும் போது அரசுகள் இப்படிப்பட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்தக்கூடும் ஆனால் இவா்கள் தமது தேசிய நலனை அடிப்படையாக கொண்டே இயங்குகின்றன.
இஸ்ரேல் இலங்கை அரசிற்கு யு படகும் அதை அழிப்பதற்கு புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்ததை நாம் மறக்கமுடியாது. யாவுமே வியாபாரம் அதில் இலாபம் இல்லாமல் யாருமே இயங்குவதில்லை, மனிதஉரிமை,மனிதநேயம் என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம்.
“இஸ்ரேல் இலங்கை அரசிற்கு யுத்த படகும் அதை அழிப்பதற்கு புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்ததை நாம் மறக்கமுடியாது. யாவுமே வியாபாரம் அதில் இலாபம் இல்லாமல் யாருமே இயங்குவதில்லை, மனிதஉரிமை, மனிதநேயம் என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம்” correct…
All are world politics… we are in the middle…
சில இடதுசாரி சிந்தனைப் போக்கு எழுத்தாளர்கள் வர்க்கம், ஏகாதிபத்தியம் என்ற பழைய பாடங்களையே மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் ஒப்படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தொண்ணூறு முற்பகுதியில் சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பின்னர் இப்படியான வார்த்தைப் பயன்பாடு பொருள் அற்றதாகப் போய்விட்டன. அமெரிக்காதான் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்த 15 நாடுகளும் அதில் இருந்து விடுபட உதவியது.. யூகோசிலேவியாவிலும் அதுதான் நடந்தது. மேற்கு நாடுகளில் முன்னரைப் போல் வர்க்க பேதம் இல்லை. இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி ஆக மாறிவிடுகிறார். அது மட்டுமல்ல தேர்தல்களில் தொழிலாள “வர்க்கத்தை” சேர்ந்வர்கள் முதலாளி சார்புடைய கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவில் ஒரு அரசியல் கைதி இல்லை. ஒரு ஊடகக்காரன் சிறையில் இல்லை. சோசலீச நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் உருசியா மற்றும் சீனாவில் கணக்கற்ற அரசு எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். வர்க்கம் பற்றி பேசுவோர் கனவுலகில் இருந்து இந்தப் பூமிக்கு வரவேண்டும்.
-நீங்கள் சொல்கிற நாடுகளில் மக்கள் எப்படி சிந்த்திக்கிறார்கள் என்பதற்கு இதோ ஒரு சிறிய உதரணம்,
அண்மைய கருத்துக்கணிப்புக்களின் படி ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் வர்க்கங்கள் பற்றிப்பேசும் தத்துவமே முனைப்புப் பெற்றுள்ளது. பல்கலைக் கழகங்களில் கார்ல் மார்க்ஸ் சிறந்த்த கல்வியாளர் என தெரிவாகியுள்ளார். 2011 ஆம் ஆண்டு ஜேர்மனியில் அதிகம் விற்பனையான நுல் டாஸ் கபிடல். பாப்பரசர் கூட மார்க்சொன்னது தான் சரி என்று சொல்லியே தனது அதிகாரத்தைத் தக்கவைக்கும் நிலைக்குத் தள்ளபட்டுள்ளார். உங்களைப் போன்ற பிந்தங்கிய சிந்த்தனைக்குள் ஆட்பட்ட ஒரு சில முன்றாமுலக நாட்டுக்காரர்கள் மட்டுமே ஆட்பட்டுள்ளார்கள்.. இதற்கான காரணம் நீங்கள் இன்னும் பிந்தங்கிய பழமை வாதச் சிந்னைக்குள் இருந்த்து சொற்ப அளவாவது வெளியேறவில்லை.
ஒரு சிறு கூட்டமே உலக பொருளாதாரத்தை ஆழ்பவா்களாகவும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவா்களாகவும் உள்ளனா் இவா்களின் பிடியில் மாட்டிக்கொண்ட பெரும்பான்மை உலக மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் வாழ்க்கைச்செலவீனங்களை சமாளிக்க முடியாது திணறுவதன் எதிரொலியே புரட்சிவேண்டும் என்ற அழைப்பாகும். இங்கே புரட்சி என்றவுடன் இடதுசாரிகள் நேரடியாக பழய புரட்சிகளின் கனவுகளிலேயே மிதக்க தொடங்கிவிடுகின்றார்கள் மூலதனத்தை விரும்பிப்படிப்பவா்களெல்லாம் புரட்சிவேண்டும் என்றா நிற்கப்போகின்றார்கள் அல்லது முன்பு கிழக்கு ஐரோப்பாவில் யாருமே அதைப்படிக்கவில்லையா ??
முதலாளித்துவத்தின் கோரப்பிடியை தளா்த்துவதே அத்தனை அரசுகளும் செய்யவேண்டிய முதல் விடயமாகும் சீனாவும், ரஸ்ஷியாவும் முதலாளித்துவத்தை நோக்கி வேகமாக நகரும்போது மேற்குலகில் புரட்சி நடப்பது எந்த அளவு சாத்தியமாகுமோ தெரியவில்லை.
Only in the Western system one can openly discuss, admire, agree and disagree on thoughts like socialism, capitalism etc. Simply because Marx is admired as great thinker, and his book is sold in numbers in Germany doesn’t mean that that his thoughts are the solution to every ill in the world. If the Pope agrees with KM’s thoughts that tells that he is free to express his views not that he wants to hold on to his position using KM as pillar. From where the hell you derive your conclusions like this ? There was another joker here who said once that a scientist from Russia was refused his parent claim for something that he invented and concluded that the West rejects all the patent claims from the socialist countries. Give me a break will you?