எமது மக்கள் தமது நிலங்கைளையே கேட்கின்றனர் அதற்காகவே போராட்டங்களையும் நடத்துகின்றனர் எங்களுடைய போராட்டம் நியாயமானது. எமது போராட்டம் யாழில் நடைபெற்றது. தற்போது திருமுறிகண்டியில் நடைபெறப் போகின்றது. இப்போராட்டங்களை தடுப்பதற்கும் ஒடுக்குவதற்கும் சிங்கள இராணுவமும் அரச புலனாய்வுப் படையினரும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருவெளிப்பாடே வலி.வடக்கில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான தாக்குதலாகும். இவற்றுக்கு எல்லாம் பயந்து போகும் இனம் எமது இனமல்ல.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறிகண்டியில் நடைபெறவிருக்கும் போராட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு முஸ்லீம் காங்கிரசிம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அனைத்து முற்போக்கு ஜனநாயக் சக்திகளும் இந்தப் போராட்டங்களை ஆதரிக்கும் அதே வேளை வடக்கு முஸ்லீம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம் நிழல் உலக அரசியல் நடத்தியவர்கள் மௌனம் சாதிக்கின்றனர்.
நிலப் பறிப்பு என்பது உலகளாவிய பிரச்சனையாக இன்று முன்னெழுந்துள்ளது. திட்டமிட்ட அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறன்றெனின் இது குறுகிய வட்டத்தினுள் முடகப்பட்டு அழிக்கப்படும் அபாயம் உருவாகும். முள்ளிவாய்க்காலில் அப்பாவி மக்களைப் பாதுகாக்க முடியாது போன அதே போராட்ட வழிமுறைகளை கைவிடவேண்டும். சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தமது சுயலாபத்திற்காக ஒவ்வொரு போராட்டங்களையும் எதிரியிடமே ஒப்படைக்கின்றனர்.
நிலப் பறிப்பு என்பது உலகளாவிய பிரச்சனையாக இன்று முன்னெழுந்துள்ளது.
நிலா பறிப்பு என்பது உலகை ஆழுகிறவர் பிரச்சனையாகவும் இன்று முன்னெழுந்துள்ளது.
சொந்த நிலத்தை பிடுங்கி இன்னொருவரிடம் கையளிப்பது, அவர்கள் அவ் நிலத்தில் தொழில் நிறுவம் அமைத்து அதில் உங்களை நிரந்தர கூலிகளாக வைத்து அதற்க்கு பக்கத்தில் சேரிகள் அமைத்து தருவார்கள்.
பெரியமட்டத்தில் பேரங்கள் சரியானால் ஆடுகள் கைவிடப்படும்.
Karuna is now saying, North and East. He is also right about confrontational politics.
http://www.avaaz.org/en/petition/Stop_Sri_Lankan_Tamils_Land_Grab_by_Sri_Lankan_forces_and_Buddhist_monks/
We should not think that security matters are political football. All Brigade Head Quarters have a Civilian Affairs Officer. We must know how to work the system through our elected representatives. We should not make ourselves anything less than a first class citizen.