Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நிறைவேற்றதிகாரமுடைய “சனாதிபதி”க்கான தேர்தல்:2015 :ப.வி.ஶ்ரீரங்கன்

இனியொரு... by இனியொரு...
01/03/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

இந்த 2015 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள் நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

kathulapooஇது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள் வரும் சனாதிபதித் தேர்தலையொட்டிப் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள், புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச் ” சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது – உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?”அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!;இந்தச் சனாதிபதித் தேர்தலில் இது [[ // ஆள்வோரையும் – ஆள விரும்புவோரையும் வாக்களித்து தெரிவு செய்வதானது, எங்களை நாங்கள் தோற்கடிப்பதாகும். இதற்கு மாறாக அவர்களை தோற்கடிக்குமாறு இடது முன்னணி கோருகின்றது. தோற்கடிப்பது என்பது இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை வாக்குகள் மூலம் வெல்ல வைப்பதல்ல, மாறாக நாம் ஒவ்வொருவரும் ஆள்வோரையும் – ஆளவிரும்புவோரையும் அரசியல்ரீதியாக தோற்கடித்து வெல்லுவதாகும். வாக்கு எண்ணிக்கையை வைத்து வெற்றி தோல்வியை தீர்மானிப்பதல்ல, மாறாக எமது அரசியல் என்ன என்பது தான், வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கின்றது.// : http://ndpfront.com/index.php/175-porattam/2015-01-01-18-21-20/2730-2015-01-02-20-39-14 ]] போட்டியிடுகிறாதாம் -நமது காதுகளில் பூ வைத்தபடி!

வரும் சனாதிபதித் தேர்தல் குறித்து நிறையப் பேசியாகி விட்டது.இந்நிலையில் மீளவுஞ் சொல்வது என்னவெனில், “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி” அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு[ The political legitimacy of a system of government and rule ] மீளவுருவாகுமென்பது சுத்த மோசடியான அரசியற் கருத்தாக்கமாகும்.இது, புதிய -உலகு தழுவிய வர்த்தக -பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும் ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல இன்று சட்டவாத அரசுள் வகிக்கும் பாத்திரத்தையும் [Trading away privacy TTIP, TiSA and European data protection .Read more… : http://www.eurozine.com/articles/2014-12-19-bendrath-en.html ] மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில் மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் முன் எழுந்துள்ளது.

இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை வரும் சனாதிபதித் தேர்தலின் பரப்புரைகளது வியூகத்துள் இப்போது உய்துணர முடியும். [ இதையும் வாசிக்கவும் : https://www.facebook.com/suseenthiran/posts/10152527694685373 ]

Elam1இலட்சக் கணக்கான மக்களை”தமிழீழப்போராட்டம்”செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருக்கின்றனர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும், முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடிக்கின்றனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- இடதுசாரிய முன்னணி ; புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.இப்போது ஓட்டுக்கட்சிகளது வியாபித்த ஆதிக்கத்தைத் தமது பக்கஞ்சார்ந்து இயக்கிவரும் அந்நியச் சக்திகள் இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை மிக மென்மையான முறையில் ஏற்படுத்தும் வியூகத்துள் மக்களை வீழ்த்தியுன்னர்.

maythreeஇதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் சுயாதிபத்திய அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-முன்னாள் ஆயுத இந்நாள் ஒட்டரசியற் குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இத்தனை கட்சிகள் -குழுக்கள் ஒரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில் நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் ;மக்கள் உரிமை பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.

இதற்குத் தோதாகச் சொல்லப்படும் >>தேர்தல் வாக்கைப் பெற்று ஆட்சியில் அமருவதற்காகவோ, பேரம் பேசுவதற்காகவோ இடது முன்னணி தன்னை முன்னிறுத்தவில்லை. மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் வராது என்பதை சொல்லவும், அவர்களை அணிதிரட்டவுமே தேர்தலில் நிற்கின்றது. இதன் மூலம் உண்மையான மாற்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும், சொந்த வழியைக் காட்ட முனைகின்றது. -இரயாகரன் குழு . << என்பதெல்லாம் மீளவும் அதே அந்நியத் தேசங்களது நலனுக்காகக் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இருசிய மற்றும் இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் “ஏமாற்றி அழிக்கப்பட்ட” தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் usglobeகடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.இதைப் புரிந்து, தக்கப்படி காய் நகர்த்தும் அந்நியச் சக்திகள் தமிழ்த் தலைமைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பின் அணி திரட்டியுள்ளனர்.இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்பதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு “தமிழ் மக்கள் உரிமைசார்” கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச ஏகாதிபத்தியத் தேசங்களை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு “எதிர்ப்பு -மாற்று” அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது. இங்குதாம் இலங்கையின் இரண்டு பிரதானக் கட்சிகளும் தமிழ்க் குறுங்குழுக்களை மிக நேர்த்தியாகத் தகவமைக்கின்றன;கையாளுக்கின்றன!

இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் இனங்களைப் பிரித்தாளுவதே!

இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் “புரட்சி”க்காக இடதுசாரிய மாற்றீடுகாவும் [ இது சீன -இந்திய மற்றும் இலங்கை வியூகம்] ,இன்னொரு பக்கம் சனநாயகத்தை உண்டு பண்ணுவதற்காக “நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி முறையை “அகற்றுதல் என்று [இது மேற்குலக வியூகம்] பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது, புலத்துப் பணப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிற தென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். இந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.

இந்த நிலைமையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்டுரைவரைந்த குழுவின் கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் ஆசிய -மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து // அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைக் கூட மறுத்து வருகின்ற அமைப்பு முறையாகிவிட்டது // என்று இலங்கைக்குள் கொட்டாவி விடுகின்றனர்.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் மாபியாக் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த”புரட்சிக் குழுக்களின்”குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் கட்டுரைகள் – தேர்தல் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த “தார்ப்பார்களை” உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.

nirj_deva_ranilஇலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய அரசியல் யதார்த்தம். எனவே, இந்த சனாதிபதித் தேர்தல் மோசடியை நிராகரித்து மக்கள் தம் எதிர்பைத் தேர்தலன்று கருப்புக்கொடி ஊர்வலமாக எடுத்தாகவேண்டும்.

மோசடி ஆட்சி மாற்றம் மற்றும் அந்நிய நலன்களது வியூகத்துக்கொதிராக வீதிக்கு இறங்க வேண்டும்.இதுவே குறைந்தபட்சம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைச் சர்வதிகாரத்துக்கெதிராகவும் ;அந்நியத் தேசங்களது தரகர்களாக -அடியாளாகவிருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவும் அணி திரள்வதையும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியலை முதற்கண் புரிவதற்குமான வழியாகும்.இதைவிட்டு மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துகு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!

ப.வி.ஶ்ரீரங்கன்
யேர்மனி,
04.01.2015

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்க்கவியின் ஊழிக்காலம் – சிறு குறிப்பு : பென் டேமியன்

தமிழ்க்கவியின் ஊழிக்காலம் - சிறு குறிப்பு : பென் டேமியன்

Comments 1

  1. a voter says:
    11 years ago

    சிறிரங்கன்:  “மோசடி ஆட்சி மாற்றம் மற்றும் அந்நிய நலன்களது வியூகத்துக்கொதிராக வீதிக்கு இறங்க வேண்டும்.”

    பகிடி விடுகிறீர்களா? 2010 வரை ஓட்டுப்போடவே பயம். இப்போது இதற்கும் மறுபடி மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் யேர்மனியில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் எங்களை வீதிக்கு இறங்கச் சொல்கிறீர்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...