இலங்கை இனக்கொலை அரசு ஊடகவியளார்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்- சிங்கள ஊடகவியாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். புலானாய்வுப் படைகளின் காலடியில் வாழும் யாழ். குடாநாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 25ம் திகதி ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ்.ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்றி செய்தமை உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடக்கு தெற்கு ஊடக கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக நண்பகல் 12 மணி முதல் போராட்டம் நடைபெறும்.
கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மேற்படி போராட்டத்திற்கான ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஏற்பாட்டாளர்கள், குறித்த போராட்டத்தில் வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
UNLESS THE LONG SANDING STATE TERRORISM IS BROUGHT TO THE NOTICE OF ALL NATIONS INCLUDING CHINA/RUSSIA/PAKISTAN -AS MUSLIMS ARE DEPRIVED OF THEIR BUSINESS- NO PRESIDENT OF THE MISRULE WILL LOOK INTO THE SUFFERINGS OF INNOCENT WOMEN AND CHILDREN.UN CARES ONLY HE MUSLIMS AFFECTED IN THE MIDDLE-EAST. NO USE OF THEM SINCE THE BIG FIVE ARE SHUTTING THEIR EYES TO THE BUTCHERING BY THE SINHALESE ARMY.