உரைத்துப் பார்த்தலுக்கான சில கருத்துக்கள்.
இனவாத அரசினது ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் இலங்கைச் சிறுபான்மை மக்களது உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.
இந்த ஈனத்தனத்தை எல்லாக் காரியவாதத் தமிழர்களும்திறம்படச் செய்துமுடிக்கிறார்கள்.
நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்கள் குறியீடாகிய தருணம் என்ன?
அவர்களுக்குப் பின்னே கட்டியமைக்கப்பட முனையும் கோரிக்கைகளது அரசியல் என்ன?
அந்த அரசியலின் வழி நலமடையமுனையும் வர்க்கம் எது?
இவை கேள்விகள்.
பதில்களுக்கு இன்னுஞ் சிலகாலம் பொறுத்திருந்தே தீரவேண்டும்.எனினும்,சில குறிப்புகளை இங்ஙனமும் பார்த்தே ஆகவேண்டும்.இவர்களது விபரீத அரசியலை பரவலாக அறிக்கைகள் மூலம் புலத்தில் பிளவுண்ட இடதுசாரி முகாங்கள் அறிவித்திருக் கின்றன.இந்த விபரீத அரசியலைப் பற்றிய புரிதலுக்கான நிபந்தனைகள்,இலங்கையினது இனவாத அரசியலுக்குள் தொடர்ந்து வியூகமிடும் அந்நியப் பிராந்திய நலன்களைக் குறித்துப் புரிந்துகொள்வதைக் கோருவதேயாகும்.அந்தக் கோரிக்கையானது பிராந்திய நலனுள் பின்னப்பட்ட தமிழ்பேசும் மக்களதும்,ஏனைய இலங்கைச் சிறுபான்மை மக்களதும் அரசியல் தலைவிதியைக் குறித்துப் பேசுவதற்கானவொரு வெளியைத் தேடிக்கொள்வதன் பொருட்டு மேலும் சில குறிப்புகளைக் குறித்துக்கொள்வதென்று…
„…இரவு மட்டுமல்ல
இந்த மண்ணின் இருப்பும்
அச்சத்தைத் தருகிறது
கிழட்டுப் பலாமரத்தில்
பச்சோந்தியொன்று.
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடிக்கின்றன…“ -செழியன்.
முள்ளிவாய்க்கால்வரை இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம் இன்று!
80 களில் ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.
முள்ளி வாய்க்காலில் பல பத்தாயிரம் மக்கள் புலிகளோடு சேர்த்துக்கொல்லப்பட்டார்கள்.அப்போது,கொல்லப்படும் மக்களைப் புலிகளைக் காப்பதற்காக தேசியவாதிகள் எவருமே கண்டுகொள்ளவில்லை!இந்தக் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிய இலங்கை அரசு,மக்களைக்கொன்று குவித்து அவர்களுக்குள் மறைந்திருந்த புலிகளைப் பூண்டோடு வேட்டையாடியது.
இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புத்திசீவிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் 71 பேர்கள் அடங்கிய கையெழுத்து அறிக்கை என்பதும்- ஆலோசனைகள் என்பதும், அதுசார்ந்த நிர்வாக அலுகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.
புலியை அழித்து முடித்துவிட்ட-இப்போதைய-நிலைமைகளில், இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போது, இந்திய ரோவினது ஆலோசனைக்கொப்பப் புலிகளால்துரத்தப்பட்ட இஸ்லாமிய மக்களை வைத்து எழுதப்படும் கோரிக்கைகள் இலங்கை அரசிடமே விடப்படவேண்டிய நிலையில் நாடு இருக்கும்போது,அதைத் தமிழ் தரப்பை நோக்கி எறிவதென்பதும் சாணாக்கியத்தனமானதுதாம்.
இப்போதும் நாம் சொல்வது, தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,சிங்கள அரசுக்கெதிரான- இனவொடுக்குமுறைக் கெதிரான தமிழ்பேசும் மக்களின்போராட்டத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்திய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.
யுத்தம் செய்தும்-இராணுவ ஆட்சியைக் கட்டமைக்கும் எந்தவொரு சமுதாயமும் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை . இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் „எந்தச் சுயாண்மையும்“ நிலவ முடியாது.
இதுதாம் இன்றைய இலங்கையில் நிலவுகின்ற அரசியற்சூழல்.
இந்தச் சூழலைத் தகவமைக்கும் புறதேசங்களது அரசியல் ஆர்வங்களானது, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையைத் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்க விரும்புகின்றன.இதன் உச்சக்கட்டமாகவே,இப்போது இனங்களுக்கிடையில் பிளவுவாதத்தையும்-வரலாற்றுப்பழியையும் மீளவுருப்போட்டு நகர்த்தப்படும் அரசியலாக இந்த 71 நபர்களது பெயரோடு உலாவரும் கோரிக்க்குப்பின் நிலவும் அரசியல்“யாழ்பாணியம்-தேசியம்,தமிழர்கள்“ என்று குறியீடுகளுக்குள் உந்தித்தள்ளப்பட்டு,அங்கே பிரதேச வாதம் மூப்படைய வைக்கப்படுகிறது.
இந்தத் தகவமைப்புக்கு உந்துதலாக இருப்பதும் இந்திய அரசியல் ஆர்வமென்பதுதாம் உண்மையாகும்.
இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.
இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிக்கத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு“உலகின் பாரிய ஜனநாயக நாடு“என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே முள்ளி வாய்க்காலுக்குப்பின் பலரிடம் அரசியல் கருத்தாக வருகிறது.
இந்தியாவைப் பகைக்காமல்தமிழ் மக்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவின் உதவியோடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டுமென்பதும் ஒரு திசைவழியில் 71 பேர்கள் அடக்கமுறும் கோரிக்கையென்பதும் ஏதோவொரு சிலரின் விருப்புக்குட்பட்ட பார்வைகள் அல்ல.
அவை,பிராந்திய நலன்களது நீண்டகால நோக்கின் ஒரு பகுதி வியூகமாகும்.
உதாரணமாக: புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.இந்தச் சூழலை மிக நுணுக்கமாக இனம்கண்ட இந்தியப் பிராந்திய நலனானது தன்னைத்தொடர்ந்து நாம் பின்தொடரும் காரியத்தில் கனாக் காணும் அரசியலது தொடரே இப்போது தமிழ்பேசும் மக்களக்குள் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு“விடிவு“குறித்து வகுப்பெடுக்கிறது.இது,ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் அரசியலது அடுத்த கட்டத்தைக் குழப்பிக்கொள்வதையும்-குட்டையைக் குழப்பி பிடிக்க முனையும் மீனையும் இனங்கண்டாக வேண்டும்.
இலங்கையின் அரசமைப்பில், இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 300.000.அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.
இன்றுவரையும், இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய கொடிய இராணுவ ஒடுக்குமுறையால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறதென்பதைத் தட்டிக்கழித்து விட்டு, இந்த 71 நபர்கள் செய்யும் மோடி வித்தையானது பெருத்த சந்தேகத்துக்குரியது.இதற்குப் பின் நகர்த்தப்படும் அரசியலது வீரியம் என்னவென்பது குறித்து நீண்ட ஆய்வுகள் தேவையாகிறது.
இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.
இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்று அன்று கூறியவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?
எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை, முழுமொத்த இலங்கை மக்களது நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?
இந்தியாவினதும்,இலங்கையினதும் ஆளும் வர்க்கங்களது அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய இந்த 71 நபர்களும்,அரசியல் சாக்கடைகள்-மக்கள் விரோதிகள்! மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படைச் சேவைக்காக நிர்வாகப் பலத்தைத் தேடுவது முஸ்லீம்மக்களின் உரிமையல்லவே.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.01.2012
சிறீரங்கன்,
இக்கோரிக்கையில் நான் கையெழுத்திடும் போது மிகவும் யோசித்த பின்னரே கையெழுத்திட்டேன். தமிழ் மக்களது மனவடு காரணமாக தமிழ்த்தேசிய அரசியல் செல்லும் பாதை மேலும் மேலும் வெளியொதுக்கல் நிறைந்ததாக மாறிவருகின்றது. இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது. அந்நிய அரசியல் சக்திகள் பயன்படுத்தக்கூடிய அரசியல் வெளிகளிலே இன்னும் நீண்ட காலம் இயங்க வேண்டியிருக்கும்.
தமிழ்த்தேசிய அரசியல் ‘வெளியொதுக்கலுக்கு’ மாறாக ‘உள்வாங்கல்’ களுடன் கூடிய தன்மையையும் ‘ஜனநாயகபூர்வமான’ தமிழ்த்தேசிய அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ‘விடயம்’ சார்ந்தே கையெழுத்திட்டேன். இது போன்று வேறு பார்வைகள் அதில் கையெழுத்திட்ட வேறு சிலருக்கு இருந்திருக்கக்கூடும். பொதுமைப்படுத்தி அணுகுவது எவ்வளவு தூரம் பொருத்தமானதோ தெரியவில்லை.
உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி தமிழ் அங்கு தமிழ் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் கூடிய சுற்றுநிருபத்திற்கும் கையொப்பமிட்டிருப்பேன். அக்கோரிக்கையை ஏன் அரசை நோக்கி மேற்குறித்தவர்கள் முன் வைக்கவில்லை என்ற கேள்வியும் முக்கியமானதுதான்.
இவ்விடயம் சார்ந்து விரிவான பதிவொன்றை விரைவில் எழுத முயற்சிக்கின்றேன்.“
ஜயா , தமிழர்களாகிய எங்களிடத்தில் எதுவும் இருந்தால்தானே மற்றவர்களிற்கு கொடுப்பதற்கு. 60 வருடத்திற்கு மேலான அகிம்சை, ஆயுதப் போராட்டத்தில் தோல்வி அடைந்து , உயிர் இழந்து ,உடமை இழந்து ,எல்லாம் இழந்துநடு வீதியில் நாம் தமிழர்நிற்கும் போது, எங்களிடத்தில் வந்து முஸ்லீம்களிற்கு அதைக்கொடு, இதைக்கொடு, அதிகாரம் கொடு என்றால் ,நாங்கள் எதை ஜயா கொடுப்பது.முதலில் தமிழர் எங்களிற்கான பாதுகாப்பு வலையங்களைநீக்கி எங்கள் இடங்களைக் கொடுங்கள்: மீன் பிடி வலையங்களை நீக்குங்கள்: தரப்படுத்தலைநிறுத்துங்கள்: காணி , போலிஸ் அதிகாரங்களைக் கொடுங்கள்: ஆயிரக் கணக்கில் சிறையில் வாடும் எங்கள் உறவுகளை விடுதலை செய்யுங்கள்: முதலில் தமிழர்கள் எங்களை தமிழர்களாக எங்கள் பூர்வீக இடத்தில் வாழ விடுங்கள்: பூர்வீகக்குடிகள் நாங்களே பிச்சை எடுக்கிறோம். இதில் வந்தேறு குடிகளுக்கு கொடு என்றால் எதைக்கொடுப்பது. சரி வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் மட்டுமா வாழ்கிறார்கள்: கிறீஸ்த்தவர்கள் வாழவில்லையா??? இல்லை மலையகத் தமிழர்கள் வாழவில்லையா? அவேர்கள் எபோதாவது வடக்குகிழக்கு தமிழரிடம் அதிகாரம் கேட்டார்களா???? இல்லை அவேர்கள் எப்போதாவது எம்மோடு முட்டி மோதி வெட்டி இனக்கலவரத்தில் ஈடுபட்டார்களா. அதென்னா முஸ்லீம்களுக்கு மட்டும் அதிகாரம் கொடு, ஆட்டுக்குட்டி கொடு என்று எங்களைநச்சரிக்கிறிர்கள்: வடக்கு கிழக்கு தமிழனின் தனித் தாயகம். எப்படி தமிழரோடு கிறீஸ்த்தவர்களும், மலையக மக்களும் வாழ்கிறார்களோ, அப்படியே முஸ்ல்லிம்களும் தாராளமாக வாழலாம். இதுதான் உண்மை. யதார்த்தம். வடக்கி கிழக்கு தமிழ் மக்கள் உரிமையோடும் , பாதுகாப்போடும், அதிகாரதோடும் வாழும் நிலைமை வருமாயின் முஸ்லீம்களும் அப்படியே வாழ்வார்கள்: இதற்கு நல்ல உதாரணம் தமிழ் நாடு. தமிழ்நாட்டில் தமிழர்கள் பாதுகாப்போடு வாழ்கிறார்கள்: அங்கு முஸ்ல்லிகளூம் அதே போல் வாழுகிறார்கள்: ஈழத்தில் வன்னியில் புலிகளின் கட்டுபாட்டில் இருந்த பொழுது எப்படி வன்னித்தமிழர்கள் எந்த பிரச்சனை இன்றி வாழ்ந்தார்களோ, அதே போல் முல்லைத்தீவில் இருந்த்த 55 முஸ்லீம் குடும்பகளும் வாழ்ந்தது நல்ல உதாரணம். எடுத்துக்காட்டு . முதலில் வடக்கு கிழக்கின் பூர்வீகக்குடிகளாகிய தமிழர் எங்களை உரிமையோடு வாழ விடுங்கள்: முஸ் லிம்களும் எவ்வித பிரச்சனை இன்றி அச்சமற்று வாழ்வார்கள்: வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களீனது தாயகம். இது முஸ்லீம்களுக்கும் பொருந்த்தும். கிறீஸ்த்தவர்களிற்கும் பொருந்த்துன். அல்லது இந்திய வம்சாவளித்தமிழர்க்ளிற்கும் பொருந்தும். ஆனால் வடக்கு கிழக்கில் மதரீதியான இனக்களிற்கு ஒரு போதும் உருமைகள் பகிர்ந்தளிற்கப்படமாட்டாது.இதுதான் சாதரண தமிழனின் உணர்வு.நிர்மலா வந்தா என்ன இல்லை, யாரு வந்தா என்னா. அவெர்கள் சொல்லவதை சொல்லட்டும். பேசுவதைப் பேசட்டும். அவெர்கள் எல்லாம் இத்தனை நாள்நித்திரையிலா கிடந்தார்க ள்: மக்களாகிய எங்களிடத்தில் கேட்காமல்,கோமாளிகளாகிய உங்களால் எவருக்கும் எந்த உரிமையும் பகிர்ந்த்து அழிக்க முடியாது
சிங்கள இனவாதிகள் சொல்வதை மொழிபெயர்த்து சிங்களம் என்பதற்குப் பதில் தமிழ் என்று மாற்றி எழுதியிருக்கிறீர்கள்.
சிங்கள இனவாதிகள் சொல்வது:
1. இது சிங்களவர்கள் பூமி. இங்கு மற்றய இன மக்கள் எம்முடன் கலந்து வாழலாமே தவிர உரிமை போராட்டம் என்று எதுவும் கேட்கக் கூடாது.
2. வடக்கு கிழக்கை விட அதற்கு வெளியே தான் அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆகவே தமிழர்களிற்குப் பிரச்சினை இல்லை.
3. இது சிங்களவர்கள் பூமி-புத்தபகவானால் அருளப்பட்டது. தமிழர்கள் வந்தேறு குடிகள்- இந்திய ஆக்கிரமிப்பினால் குடியேறியவர்கள்
4.தமிழர்களிற்கே பிரச்சினைகள் உளள்போது முஸ்லீம்கள் பிரச்சினை பற்றி எப்படி யோசிப்பது.
4. குடியிருக்க முயற்சிப்பது எம்மோடு முட்டி மோதுவதாகும்.
நங்கள் சொல்வது:
நீங்கள் சொல்வது:
1. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். இங்கே முஸ்லீம்கள் வாழலாமே தவிர உரிமை ஏதும் கேட்கக் கூடாது.
2. முல்லைத் தீவில் 55 குடும்பங்கள் வாழ்ந்தார்கள். ஆகவே முஸ்லீம்களிற்குப் பிரச்சினை இல்லை.
3. இது தமிழர்கள் பூமி. முஸ்லீம்கள் வந்தேறு குடிகள்.
4. சிங்களவர்களிற்கும் பிரச்சினைகள் உள்ளன. முதலில் அதனைத் தீர்த்துவிட்டுப் பிறகு தமிழர் பிரச்சினை பற்றி யோசிக்கலாம்.
4. குடியிருக்க முயற்சிப்பது எம்மோடு முட்டி மோதுவதாகும்.
இந்தியா , இலங்கைநாடுகளுக்குள் முஸ்லிம்கள் எங்கிருந்து, எப்படி, எப்போது வந்தார்கள் என்பதைநான் சொல்லிநீங்கள் யாரும் அறியவேண்டியதில்லை. மலேசியாவில் வாழும் தமிழர்கள்,மலேசிய அரசிடம் சுயாட்சியோ, சமஸ்ட்டியோ கேட்டால் அந்த தமிழர்களின் நிலை என்னாகும். கசையடியும், கல்லடியும், தூக்கும்தான் கிடைக்கு மிதேநிலைதான் சிங்கப்பூர் தமிழர்களிற்கும்.வடக்கு கிழக்கில் எப்படி கிறீஸ்த்தவர்களும், மலையக மக்களும் எம்மோடு சேர்ந்து வாழ்கிறார்களோ அப்படி முஸ்லீம்களும் தாராளமாக வாழலாம்.இதிகாசகாலத்திலும் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.இராவணன் ஓர் தமிழனே.அவென் முஸ்லிமும் அல்ல, பெளத்தனும் அல்ல.இலங்கைக்கு வெள்ளையர்கள் வரும்போது கூட அவெர்களே சொல்லி இருக்கிறார்கள், அவெர்களது வரலாற்று குறிப்பில் இலங்கையில் 2 மொழி பேசும் 2 இனக்கள் வாழ்கிறது என்று.
தமிழன் –
இங்கே நாம் பேசுவது முஸ்லீம் மக்கள் மீளக் குடியமர்வது பற்றறி. இதற்கே இந்தக் கத்தல் போடும் நீங்கள் அவர்களை உங்கள் கையில் அரசியல் அதிகாரம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று புரிகிறது. ..
ஓ… உங்கள் போன்றவர்கள் கையில் அரசியல் அதிகாரம் இருந்தபோது தானே முஸ்லீம்கள் துரத்தப்பட்டார்கள்….
சிங்களவருக்கு தமிழன் மேல் எந்த மனநிலை உள்ளதோ, அதை விட பன்மடங்கு இழிந்த மனநிலை, நம் யாழ் தமிழருக்கு உண்டென்பதை, தமிழன் என்பவரின் எழுத்துக்கள், காட்டுகிறது.
சிங்களவன் திருந்தலாம். ஆனால், தமிழன் ஒருபோதும் திருந்தமாட்டான்.
71 தமிழ் புத்திஜீவிகளை நாம் வாழ்த்துகிறோம்.
நாமும் தான். சிலவேளை 71 புத்திஜீவிகளும் வரும் காலத்தில் தமிழர்களுக்கு ஒரு முன்னோடிகளாக இருக்கலாம்.கடந்தகாலத்தில் தவறுகள் விட்டிருந்தாலும்.
மற்றைய இனத்தை மதிக்காத மதிப்பளிக்காத எந்தயினமும் உயர்வதற்கான வாய்பே! இல்லை. இறுதியில் சுடுகாட்டைத் தான் காண்பார்கள்.நடந்து முடிந்ததும் அது தான். இனிநடக்கப் போவது…….?.
அது என்ன யாழ்தமிழர், வன்னித்தமிழர், கிழக்குத்தமிழர்.மத வேறுபாடு பார்க்கவேண்டாம், சாதீவேறுபாடு பார்க்கவேண்டாம் என்று வாய்கிழியகத்தும்நீங்கள் , அது ஏன் இதில்மட்டும் தமிழரை பிராந்தியரீதியாய் பிரித்துக்காட்டுகிறீர்கள், சரி அப்படித்தான் பார்த்தாலும்நான் வன்னிதமிழனே யாழ்த்தமிழன் அல்ல. இதிலிருந்துநீங்கள் என்னவிளங்கவேணும் என்றால்,யாழ்த்தமிழனுக்கோ அல்லது வன்னி , கிழக்குத் தமிழருக்கோ , முஸ்லீம்கள் விடயத்தில் எபோதும் ஒரேநிலைப்பாடுதான் என்று.
தமிழன் –
உங்களின் இனவெறிக் கூச்சல் முலம் மேலும் பலரை இந்த 71 பேரிற்கு ஆதரவாகப் பேச வைத்திருக்கிறீர்கள். நன்றி. (ஜே ஆர் தனது இனவெறிக் கூச்சல் மூலம் இயக்கங்கள் வளரத் துணைசெய்தது மாதிரி)
எனக்கும் இவ்விடயத்தில் நெருடல் உண்டு. மதத்தால் இஸ்லாமைச் சேர்ந்தவர்களை எப்படி வேறு இனமாகக் கருதமுடியும். கிறிஸ்தவரோ சைவரோ தமிழர்களாக இருக்க முடியும் என்றால் இஸ்லாமியரால் ஏன் தமிழராக இருக்க முடியாது. தமிழர் என்றால் அவமானம் எனக் கருதுகின்றார்களா?
இது ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழி பெயர்க்கபட்ட கட்டுரை போலுல்ளது, கருத்துகள் சரி என்றாலும் இவ்வாறன் கடும் தமிழில் எழுதுவது, கருதுக்கள் எல்லோரையும் சென்றடையாமல் தடுக்ககலாம் நிர்மலா தலைமையில்,71 புத்தி சீவிகள் என்பவர்களுக்கு மட்டும் சென்றால் போதுமா
புலிகளின் எழுகைக்கு முன்,யாழ்.கச்சேரி முதல் அனைத்து நிர்வாகக் கட்டுமானங்களையும் கையகப்படுத்தி வைத்திருந்த குழு,மீளவும் கைப்பற்ற எடுக்கும் முயற்சி இது.
குறிப்பாக நிர்மலாவின் பாரம்பரிய,”நல்லூர் இராசதானியை” மீட்டெடுக்க,அவர் ஆடும் ஆட்டம்,புலிகளோடு இருந்த காலத்தில், பிரசித்தி பெற்றது.
கந்தறுந்த சீலையைப் பிடித்து கரையேற,70 பேரின் “இஸ்லாமிய விவகாரம்” என்பது,ஒரு கல்லில் பல மாங்காய் வீழ்த்துகிற முயற்சி.
இதுக்குள்ள “கொலையைச் செய்தனான்;ஆனா அதுக்க முதல் ஒருக்கா யோசிச்சனான்.” என்கிறது கண்றாவிக் கதை.அண்ணே! புல்லரிக்குதண்ணே! பிறகு வந்து சொறிஞ்சு விடுங்கோ.
இன்னொரு மங்காத்தா உருவாக்கும் தீபம்……….
1.http://www.youtube.com/watch?v=f6dpcfv0cS4&list=UUJ522ZmvNm3NX0GtxBIhEFg&index=4&feature=plcp
2.http://www.youtube.com/watch?v=s_1mP7vGdi0&list=UUJ522ZmvNm3NX0GtxBIhEFg&index=3&feature=plcp
3.http://www.youtube.com/watch?v=jYIDZ6bs9dc&list=UUJ522ZmvNm3NX0GtxBIhEFg&index=2&feature=plcp
4.http://www.youtube.com/watch?v=W08QxE_Ampw&list=UUJ522ZmvNm3NX0GtxBIhEFg&index=1&feature=plcp
தெருவில்நிர்கும் தமிழ்னிடம் இன்னும் சிதனம் கெக்கும்நிலை மாரினால் மகிழ்ஷ்சி
//தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் 71 பேர்கள் அடங்கிய கையெழுத்து அறிக்கை என்பதும்- ஆலோசனைகள் என்பதும்இ அதுசார்ந்த நிர்வாக அலுகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.//
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். அடிப்படையில் முஸ்லீம் மக்கள் மீளக் குடியமர்வதை நீங்கள் விரும்பவில்லை. எனவே முஸ்லீம் மக்கள் மீளக் குடியமர்வதை வலியுறுத்தும் அறிக்கையில் ஆயிரம் குறை பிடிக்கிறீர்கள் என்று பதில் சொல்ல எனக்கு அதிக நேரமாகாது.
மிஸ்ட்டர் வோட்டர் , ஏற்கனவே இனிஒருவில் வந்த வேறு ஒரு கட்டுரையின் பின்னூட்டத்தில் ” உமா வரதராஜன் சொல்லிப்போட்டார், தான் புத்திஜீவியும் அல்ல, தன் சம்மதம் இல்லாமலேயே தன் கைஎழுத்தை சேர்த்து வெளியிட்டுவிட்டார்கள் என்று. இன்னும் எத்தனை குளறுபடிகள் செய்து இந்த புத்தி ஜீவிகள் பித்தலாட்டம் செய்தார்களோ. இன்னும் யார் கையெழுத்தை திருடி அறிக்கைக் கடதாசியில் கைஎழுத்தைநிரப்பினார்களோ?ஒரு பானை சோற்றுக்கு ஒரு அகப்பை பதம் என்பது இதுதானோ.நிர்மலாவும் மற்றும் 69 புத்தியில்லா ஜீவிகளுக்கும் முஸ்லிம்கள் மேல் ரொம்ப பாசம், பரிவு, அக்கறை இருந்தால், ஒருநல்ல எடுத்துக்காட்டாக, அவெர்களது சொந்தக் காணிகளில் முஸ்லிம்களை குடி அமர்த்தலாமே , ஏன் அதையே நீரும் பின்பற்றலாமே.
தமிழன்
எனக்கு முஸ்லீம் மக்கள் மீது மட்டுமல்ல தமிழ் சிங்கள மக்கள் மீதும் பரிவும் பாசமும் இருக்கிறது. உமா வரதராஜன் கூறிய குறிப்பு பாரதூரமானது என்பதில் ஐயமில்லை. கூடிய விரைவில் இதுபற்றிய உண்மை நிலை விளங்கும். ஆனால் அவரும் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு நான் தடையில்லை என்று அறிவித்திருப்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்?
எனக்கு யாழ்ப்பாணத்தில் காணி இருக்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது? முஸ்லீம்கள் குடியிருந்த அதேயிடத்தில் குடியிருத்துவதில் என்ன தடை?
உங்களை ஒருசோறாக எண்ணி முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை மறுதலிக்கும் அனைவரையும் ஒரே பானையில் அடைப்பதில் எனக்கு சம்மதமில்லை.
அது சரி தமிழன்?ஆரம்பகால உறுப்பினர் கேபி ,கருணா எந்தப் பானைக்குள் இருந்து வந்தவர்கள் .உங்களுக்கு நிட்சயம் தெரிந்திருக்கும்.!! மற்றவர்களுக்கும் ஒரு தடவை தெரியப்படுத்துங்கள் பிளீஸ்!!!
அரிச்சந்திரன் , ஈழத்தமிழருக்கும் சரி அல்லது என்னைப்போன்ற மண் பற்று, இனப்பஆற்று, மொழிப்பற்று இருக்கும் எல்லோருமே ,தமிழரின் விடுதலைக்காக உண்மையுடன் போராடும் வரையே அவெர்களின் பின்நின்று அவெர்கள்ற்கு தோழ் கொடுப்போம், ஏன் கொடி குடை, ஆலவட்டமும் பிடப்பொம். முருகனுக்கு ஒப்ப்பானவர் என்றும் போற்றி புகழ்பாடுவோம்.என்று , தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு ஓடுகாலியாக ஓடி,அரசிற்கு அடிவருடிகளக இருகிறார்களோ. அதன்பின்பு அவெர்களும் எமக்கு துரோகிகள், எதிரிகள் தான். இது கருணாக்கும் பொருந்தும், கே.பி. கும் பொருந்த்தும்.தமிழர்களையும், புலிகளையும் அழிக்க எந்தப் பிசாசுடனும் சேருவோம் என்று சிங்கள்வர் போல் , சிங்களவனையும் , ஒட்டுக்குழுக்களையும் அழிக்க ப் போராடும் எவெரிடனும்நாம் தமிழர் ஒன்று சேர்வோம். அது உஙளைப் போன்ற பிசாசுகள்கள் என்றாலும் பரவாய் இல்லை சந்திரன்
தமிழன் நான் சொன்ன விடயத்தின் அர்த்தம் உங்களுக்கு விழங்கவில்லை.எந்த அமைப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் யாராலும் ஓரிருவர் முரண்படத்தான் செய்வார்கள் .அந்த ஒரு சிலருக்காக ஒட்டு மொத்த அமைப்பையோ,குழுவையோ போட்டுத்தாக்குவது ஆரோக்கியமான செய்கை அல்ல. கருணா,கேபி முரண்பட்டார்கள் என்பதற்க்காக ஒட்டுமொத்த அமைப்பையே உங்களால் குறை கூறமுடியுமா ? சிலர் தங்களை மற்றவர்கள் பக்கம் திரும்பவைக்க நீண்டமுடிவைப்பர்,சிலர் மொட்டை அடிப்பர்,சிலர் குடுமிவைப்பர் கலர் அடிப்பர் அதேபோல் அரசியலிலும் சரியோ பிழையோ மறுப்பறிக்கை விட்டால்த்தான் அவரின் பெயர் அடிப டும்.அதுவும் எழுத்தாளனுக்கு(புலிக்குட்டிக்கும்,மீன் குன்சுக்கும்) சொல்லிக்கொடுக்கத்தேவையில்லை!! எனக்கொரு சந்தேகம் பிரேமதாச,சரத்பொன்சேகா என்ன இனம் என்று சொல்லுவீர்களா? சில தமிழர்கள் ஒரு காலத்தில் இவர்களுடன் கூட்டுச்சேர்ந்திருந்தார்கள். வேறொன்றுமில்லை அவர்களையும் அந்த அடிவருடிக்கூட்டத்தில் சேர்க்கத்தான்.
நான் பகிரங்கமாக அழைப்பு விடுகிறேன்!
முடிந்தால் வருகிறமாதம் [Anfang Februar 2012]ஆரம்பத்தில் தீபம் தொலைக்காட்சியில் உரையாடலை ஆரம்பிக்கலாம்.அதுள் :நிர்மலா,இராகவன்,ரங்கன் தேவராஜன்,கீரன்,மற்றும் 71 புத்திசீவிகளில் எவர் வேண்டுமானாலும் பங்குபற்றுங்கள்.நான் தனியாக உங்களோடு உரையாடவருகிறேன்.இலங்கை முரண்பாடுகள்-சிறுபான்மை இனச் சிக்கல்கள் யாவையும் குறித்து உரையாடலாம்.நீங்கள் அனைவரும் அந்நியச் சக்திகளது வியூகத்துக்கும்,ஆளும் சிங்களப் பெரும்பான்மையின அதிகாரவர்க்கத்துக்கும் ஏற்ற நிகழ்ச்சி நிரலை எங்ஙனம் செய்து முடிப்பதென்பதை நான் தோலுரிக்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் அரச அதிபராக இருப்பவன்,அரச ஆதிக்கத்தின் உறுப்பு என்பதை மறைத்து அவனைத் தமிழன் என்று உரையாடும் மோட்டுக் கூட்டமே,உங்களில் எவருக்காவது ஓர்மம் இருந்தால் வாருங்கள் விவாதிப்போம்.இது ,பகிரங்கமான அழைப்பு!அனஸ் இந்த உரையாடலுக்கு முடிந்தால் ஒத்துழைப்பு நல்கி நேரம் குறித்துத் தரவும்.
நாவலனது கருத்துக்கு முகங்கொடுக்க நாதியற்ற அரச லொபிகள்”பொல்பொட்,மயிர்-மண்”எனக் கருத்தாடுவது சுத்த அயோக்கியத்தனமாகும்.
இஸ்லாமியர்களைத் துரத்தியவர்களும்,1915 இல் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டியவர்களும் சிங்களத்துத் தரகு முதலாளிய வர்க்கமும்,ஆங்கிலே அடிவருடிக் கூட்டமுமே!இந்திய அரசு,உலக அரசுகள் என்பதைத் தவிர்த்துத் தமிழ் மக்கள்-சிங்கள அரசு-புலியென வகுப்பெடுக்கும் மூடர்களே!நாம் அரசு எனும் வடிவத்தைவிட்டு,அரசுகள் எனும் அமைப்புகளுக்குள் வாழ்கிறோம்.உங்களோடு விவாதத்தைத் தொடக்க காலத்தைக் குறிக்கவும்!அங்கு உரையாடுவோம்.
காலம் காலமாக நடந்தேறிய இனக்கலவரங்களில் தெற்கிலிருந்து வடக்கு கிழக்குக்கு துரத்தப்பட்ட தமிழன் தானாகவே ஒருகுறுகிய கால இடைவெளியில் திரும்பிச்சென்றான் .அவனை எந்த சிங்களவன் திரும்பி வா என்று சொன்னான் ? அவனுக்கு வேலையின்றி சம்பளம் கொடுக்கவோ வியாபாரிகளுக்கு நட்டஈடு கொடுக்கவோ அரசு தயாராக இருந்திருக்கவில்லை . புத்தளம் மாதிரி ஒரு ஆதரவு இடம் இருந்திருக்கவில்லை .ஆனால் குடாநாடு தங்கள் கைவசம் வந்த உடனேயே ஏன் அரசு இந்த மீள் குடி அமர்த்தலை செய்யவில்லை ? நாவட்குளியிலும் நானாட்டானிலும் அத்துமீறி குடி அமர்த்தலை செய்த அரசு தமிழனின் ஆதரவோடா செய்தது ? முஸ்லீம் மக்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது அரசு போடும் முடிச்சு என்பது நிர்மலா கீரன் போன்ற ஊது குழல்களுக்கு தெரியாது என்று சொல்லமுடியாது .அரசாங்கத்தின் உண்மையான விசுவாசிகள் என்பது எல்லோருக்குமே புரிகின்றது .
இதுலயும் ஒரு சரியான் பொயின்ட் இருக்குதுதான்.
நிர்மலா கீரன் போன்றவர்களுக்கு தெளிவாக தெரியும். எந்த அரசு வந்தாலும் படுகுழியில் தள்ளிவிடுகிற வேலைத்தான் செய்வார்கள் என்பதையுயும் புரிந்திருக்கிறார்கள்.
இருந்தாலும் உங்கள் பாஷையில் உரையாடியது முதாலித்துவ அரசைவிட தமிழ்மக்களில் ஏதாவது மனிதாபிமானம் தங்கியிருக்கும் என்பதின் அடிப்படையில் தான்.
சரியான பொயின்ட். முஸ்லீம்களையும் தமிழரையும் பிரித்து விட அரசு முயற்சி செய்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அதில் தனக்குச்சார்பான சிலரையும் அரசு பயன் படுத்துகின்றது.
இந்த அறிக்கை முஸ்லீம்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்றும் இதற்கு தமிழரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறுகின்றது. அத்துடன் தமிழரின் பெயரில் – சில தமிழர்களைக் கொண்டே – நடத்தப்படும் பிரச்சாரங்களையும் கண்டிக்கிறது.
இந்த இடத்தில் நாம் செய்யவேண்டியது இந்த அறிக்கையை ஆதரித்து தமிழ் முஸ்லீம் உறவைக் கட்டியெழுப்புவதே தவிர கையெழுத்திட்டவர்களின் பெயரில் அறிக்கையையே நிராகரிப்பதல்ல. அப்படி நிராகரிப்பதன் மூலம் நாம் அரசுக்குத்தான் துணை போகிறோம்.
புத்தளத்திற்கு போனாலும் அங்கு யாழ். முஸ்லிம் மக்கள் புத்தள முஸ்லிம் மக்களுடன் கலந்து விடவில்லை என்பதையும் கவனிக்க. யாழ்.முஸ்லிம்கள் வெள்ளாள முஸ்லிம்களோ?
உதுல ஒரு மனுச குணம் ஓண்டு இருக்குது பாருங்கோ. உதாரணத்துக்கு எனக்கு தெரியும் ரஸ்ஸியாவுல இருந்து போன ஜெர்மானியர்கள ஜெர்மானிய ஜேர்மர்கள் தங்களுடய்ச் ஆட்களாக லேசுல சேர்த்துக்கொள்வதில்லை. இதை எனக்கு அப்படிப்பட்ட பிரஜை ஒருவரே சொல்லியிருகிறார்.
உங்கள் பாஷையில் உரையாடியது முதாலித்துவ அரசைவிட தமிழ்மக்களில் ஏதாவது மனிதாபிமானம் தங்கியிருக்கும் என்பதின் அடிப்படையில் தான்.
தமிழ் மக்களா அதிகாரங்களை வைத்திருக்கிறாகள்? தமிழ் மக்களுக்கு மனிதாபிமானம் காட்டுவது யார்?