Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நித்யானந்தம் என்கிற இளைஞன்: ச.தமிழ்ச்செல்வன்

இனியொரு... by இனியொரு...
03/03/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
33
Home பிரதான பதிவுகள் | Principle posts

சன் நியூஸ் தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறைக்காட்சியை நானும் பார்த்தேன்.இந்துத்வா ஆசாமிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி அவசர அவசரமாக அவர் அல்ல எங்கள் அடையாளம் என்று பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்னைகளுக்குப் பொருளாதாரத் தளத்தில் அல்லது அரசியல் தளத்தில் தீர்வுகாணப் போராட வேண்டும். அதற்குத் தயாராகாத மக்கள் பண்பாட்டுத்தளத்தில் சாமி ,கோயில் ,பூஜை என்று தீர்த்துக்கொள்ள முயலும் பழக்கம் அபினியைப்போல மயக்கிக்கொண்டிருக்கும் நம் சமூகத்தில் இதுபோன்ற சாமியார்கள் வருவதும் சமயங்களில் பிடிபடுவதும் சகஜம்.

எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள் ,பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.

அவன் பிரம்மச்சர்யத்தை ஊருக்கு உபதேசம் செய்பவனாக இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை இப்படி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறான் என்பதற்காக அவனைக் குற்றம் சாட்டலாம்.அது சரி.கோடிக்கணக்கான சொத்துக்கு தலைவனாக இருப்பதில் இதுவரை எந்த விதிமீறலும் இல்லாமலா இருந்திருக்கும்? அதைப்பற்றியெல்லாம் தோண்டி எடுத்து வெளியே போட்டு அவனைக்கிழிக்கலாம். இவனை மட்டுமல்ல இவனைப்போல ஊரை ஏமாற்றும் அத்தனை சாமியார்களின் சொத்துக்குவிப்புகளும் கிழிக்கப்பட வேண்டும்.அத்தனையும் ஏமாந்த எளிய மக்கள் கொடுத்த சொத்து.ஆட்சியில் இருப்பவர்களே சாமியார்களிடம் மோதிரம் வாங்கிக்கொண்டு திரியும்போது அவர்களின் பொருளாதாரக்குற்றங்களை யார் கேள்வி கேட்பார்கள்?

அதிலும் இந்த நித்யாப் பையன் அமெரிக்கா இஐரோப்பாவெல்லாம் போய் கார்ப்பொரேட் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களின் மன அழுத்தங்களை சரி செய்ய தியான வகுப்புகள் நடத்துகிறவன்.பன்னாட்டுக் கம்பெனிகளோடு தொடர்புடையவன்.தமிழகப் போலீஸ் போய் அவனைக்கைது செய்தாலும் சுலபமாக வெளியே வந்து விடுவான்.

பாலியல் குற்றம் இல்லாமலே ஏராளமான பிற குற்றங்கள் புரியாமல் சட்டத்தை ஏமாற்றாமல் எந்தச்சாமியாரும் கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்க்க முடியுமா? சாயிபாபா ,அமிர்தானந்தா தொடங்கி எத்தனையோ ஆனந்தாக்களும் கிறித்துவ சாமியார்களும் இந்தத் திசையில் விசாரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டுப் பிடிபட வேண்டியவர்களாவர்.

மக்களை மயக்குவதற்கும் மனித மனங்களை கார்ப்பொரேட்டுகளின் சரக்குகளுக்கேற்ப தகவமைப்பதற்கும்தான் நவீன அபினிகளாக நாங்கள் வந்து விட்டோமே நீ என்ன எனக்குப் போட்டியாக என்று சன் டிவிக்குக் கோபம் வந்துவிட்டது போலும்.அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுத் தாளித்து விட்டார்கள்.

ஒரு விரிவான பகுத்தறிவுப் பண்பாட்டு இயக்கத்தை ( முன்னெப்போதையும் விட இப்போது வலுவாக) நடத்த வேண்டிய காலமாக இன்றைய காலம் இருக்கிறது.

http://satamilselvan.blogspot.com/2010/03/blog-post_03.html

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

என் பெயரில் வெளியிடப்பட்ட கட்டுரை அபாண்டமானது- கட்டுரையை நான் எழுதவில்லை : தஸ்லிமா மறுப்பு

Comments 33

  1. thamilmaran says:
    16 years ago

    கோடிக்கணக்கான சொத்துக்கலை கொள்லை அடித்து தமிழ்க் குலத்திற்கு நாசம் செய்கிற சன் தொலைக்காட்சி, தமிழனது தமிழையே அழித்து காசுக்காக் விபச்சாரம் செய்யும் கூட்டம் வீடியோ எடுத்து தனி மனித சுதந்திரத்திற்கே எதிராக செயற்படுகிறது.கொள்லையர் கூட்டம்.

  2. thamilmaran says:
    16 years ago

    அய்யா பிரமச்சாரியம் என்பது எப்போது நீங்கள் விரும்பினாலும் விட்டு விட அனுமதிக்கிறது அது துறவறத்தை தொடர வேண்டுமென்றூ வலியுறூத்தவில்லை.நித்தியானந்தா ஒன்றூம் பாதிரிகள்,பிக்குகள் போல் காமப் பாசாசில்லை,கண்கெட்டு அலையவில்லை தியானம் செய்யும் பொறூமையும் நிதானமும் கொண்டவர்.சண் தொலைக்காட்சி இனி என் வீட்டில் இருக்காது.என் உழைப்பை, வியர்வையை நான் சன் தொலைக்காட்சிக்காக் இழக்க மாட்டேன்.உலகில் பெரும் திருடன் சண் காரன்.

    • Soorya says:
      16 years ago

      கண்கெட்ட பின் எதுக்கு சூரிய நமஸ்காரம்? சண் தொலைக்காட்சி பார்க்காதீர்கள் என்று பலர் முன்பே சொல்லியுள்ளர்களே!

  3. சீனு says:
    16 years ago

    //பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள் ,பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.//

    I agree with you.

  4. Ravindran says:
    16 years ago

    Your logic is wrong. Since,
    1. Nithyananda is a godman who preaches how to refine ones desires.
    2. The women in the video is a married woman
    3. If a self proclaimed brahmachari has relationship with a married woman, certainly this is wrong.
    4. Follow what you preach, 

    Don’t try to justify this.

  5. நக்கீரன் says:
    16 years ago

    சபலம் சாதாரண மனிதனை ஆட்கொள்வது இயற்கையான நிகழ்வு! ஆனால் நாம் தானே முற்றும் துறந்த முனி/சாமிகள் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஆசாமிகளை வெட்டவெளியில் ஒட்டுதுணியும் இல்லாமல் நிற்கவிட்டு கற்களால் அணுஅணுவாக அழித்தால்தான் இனிமேல் இப்படியான ஒருவன் உருவாகாமல் தடுக்கமுடியுமே தவிர நீதி/சட்டம் என்று போனால் இவங்கள் மிகச்சுலபமாக தப்பி வந்துடுவான்கள்!! படுபாதகர்கள்!!!

  6. alex.eravi@gmail.com says:
    16 years ago

    தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.

    32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரிலும் நடித்தவர்.

    என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. “இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார். “பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்’ என்று விஜயகுமார் கொந்தளித்தார். “நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார். நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.

    “சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?

    இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.

    ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.

    http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

  7. Garammasala says:
    16 years ago

    “33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன்”

    தமிழ்ச்செல்வன் என்ன வயது வரை இளைஞர் அமைப்புக்களில் இருந்தரோ தெரியாது. 33 வயது இளைஞன், சின்னப் பையன் என்றெல்லாம் எழுதுகிறாரே!

    அந்தரங்க வாழ்க்கை சமூக விரோதச் செயலாக இல்லாதளவில் ஊடகங்களில் நாறடிக்கப் படுவது சட்டப்படி தடுக்கப்பட வேன்டும்.
    அதே வேளை சமயத் துறவிகள் தாம் வெளிக்குக் காட்டிக் கொள்ளும் தூய்மை வேடங்ளை, காவிஉடையை மக்கள் நம்புகின்றனர்.
    துறவிகளின் இரட்டை வாழ்க்கையை நியாயப் படுத்தத் தமிழ்ச்செல்வன் “இளைஞன் சின்னப்பையன் ” என்றெல்லாம் இரக்கம் கறக்கத் தேவையில்லை.
    விமர்சிக்க வேன்டிய ஒரு விடயம் உண்டு. ஆனால் சன் டிவியின் குப்பைத்தனம் மிகத் தவறானது.

    இந்து மதங்களுக்குத் “துறவிகள்” தேவையா?

  8. alex.eravi@gmail.com says:
    16 years ago

    வீடியோ காட்சிகள் எவ்வாறு பெறப்பட்டது என்பது பற்றியும் தெரியவில்லை. அதேவேளை குறிப்பிட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கும் சுவாமி நித்தியானந்தவிற்கும் இடையில் நல்லுறவு இருக்கவில்லை என்றும் தெரியவருகிறது.
    அதேவேளை, இந்த பிரச்சனை தனிநபர் சுதந்திரம், மற்றும் மீடியா தர்மம் பற்றிய பெரும் சர்ச்சையையும் கிளப்பி விட்டிருக்கிறது. யு டியூபில் பலரும் இந்த காட்சிகளை பிரசுரித்து உள்ளனர்.
    தீவிர பத்திரிக்கையான நக்கீரன் தளம்மறைக்கப்படாத வீடியோவை யு டியூபில் (YouTube.com)பிரசுரித்துள்ளமை சற்று அதீதமானது என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

    http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/1137-நித்தியானந்தா-சரியா-தவறா.

    by Nakkheeran:

    http://www.youtube.com/watch?v=cPcwnVwMdI0

    by Sun TV

  9. alex.eravi@gmail.com says:
    16 years ago

    சுவாமி நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்புவதையும், செய்திகள் பிரசுரிப்பதையும் தடை செய்யக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் எனக்கு உள்ளனர். ஏழைகளுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவி போன்ற பல்வேறு சேவைகளை அளித்து வருகிறேன்.

    எனது ஆசிரமத்தில் பணிபுரிந்த பிரேமானந்தா (எ) லெனின் கருப்பன் என்பவர் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த விடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

    இதில் எனது உருவம் “மார்ஃபிங்’ முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகளை தொடர்ந்து வெளியிட்டால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படும்.

    எனவே, இந்தக் காட்சிகளை வெளியிடுவதற்கும்,

    இதுதொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கவும் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    தயவு செய்து இதே போன்ற ரகசிய கேமராவை பங்காரு அடிகளார் மற்றும் சாய் பாபா படுக்கை அறையிலும், வைத்து, அவர்களின் முக மூடிகளையும் கிழித்து எறிவீர்களாக…pls include Vatican Palace as well which is continuesly famous for such famous activities…for prove surf internet.

    http://www.dinamani.com/edition/story.aspx?Title=நித்யானந்தா+தொடர்பான+காட்சிகளை+ஒளிபரப்பத்+தடை+கோரி+வழக்கு&artid=206344&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

    நித்யானந்தா தொடர்பான பாலியல் காட்சிகள் வெளியாகியுள்ளது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நித்யானந்தாவின் செயல்கள் தமிழ் கலாசாரத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளன.
    What about cinema?

    http://www.dinamani.com/edition/story.aspx?Title=நித்யானந்தாவை+கைது+செய்ய+வலியுறுத்தல்:+பெங்​க​ளூர்+ஆசி​ர​மத்​துக்கு+தீ+வைப்பு&artid=206345&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

    தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து ஆசிரம வட்டாரம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளனர்.

    http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

    And read all comments

  10. thamilmaran says:
    16 years ago

    அலெக்ஸ் அவர்கள் சொல்வது போல ரகசியக் கமெராக்கள் பொருத்தப்பட்டால் யாரும் யோக்கியர்களாக இருக்க மாட்டார்கள்.கட்சித் துண்டுகலை தோளீல் போட்டுத் திரியும் போக்கிரிகளூம் இமய மலைக்குப் போய் புலுடா காட்டும் சூப்பர்களீன் முகமூடிகளூம் கிழிய வாய்ப்பிருக்கிறது.

    • xxx says:
      16 years ago

      “ரகசியக் கமெராக்கள் பொருத்தப்பட்டால் யாரும் யோக்கியர்களாக இருக்க மாட்டார்கள்.”
      அலெக்ஸ் எப்போது இப்படிச் சொன்னார்?
      த.மா.: தயவு செய்து உங்களுக்காகப் பேசுங்கள்.
      உங்களுக்குத் தெரிந்த தமிழர் தேசியக் கூட்டணிப் போக்கிரிகள் சார்பாகப் பேசுங்கள்.

      மற்றவர்களின் உலகில் நல்லோர் பலர் இருந்துள்ளனர்.
      இன்னமும் உள்ளனர்.
      இனியும் இருப்பர்.

      இன்னமும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளது தமிழினம்.
      ஆன்மீக வேடம் பூணும் அயோக்கியர்களை அம்பலப்படுத்தத் தேவை உள்ளது.
      எனினும் சிலவகையான அந்தரங்கக் குறுக்கிடுகள் சமூகக் கேடானவை.
      அதே வேளைஇ அதைக் கண்டிக்கிற போக்கில் ஏமாற்றுப் பேர்வழிகளை நியாயப்படுத்தல் தவறு.

    • alex.eravi@gmail.com says:
      16 years ago

      “ரகசியக் கமெராக்கள் பொருத்தப்பட்டால் யாரும் யோக்கியர்களாக இருக்க மாட்டார்கள்.” என்பது நான் சொல்லவில்லை. செய்தியை அப்படியே வாசகர்குடன் பகிர்ந்தேன். அதற்குதான் முழுச் செய்தியின் link யையும் போட்டேன். இதற்காக அடிபடாதீர்கள்….ஹஹாஆஆஆ……..

      ஆனால் அந்த விடியோவைப் பார்க்குமிடத்து, யாரோ திட்டமிட்டு காமெராவை பொருத்தியுள்ளர்கள் (வெவ்வேறு காட்சிகள் ஒரே கோணத்திலேயே (angle )உள்ளது. அத்துடன் கட்டிலிலுள்ள தலையணையும் ஒரே அமைப்பிலுள்ளது வேறு சந்தேகத்தையும் கிளப்புகிறது, அத்துடன் சன் டிவி யில் முதல் வந்தபடியால், அரசியல் காரனன்க்களுமோ தெரியவில்லை. முழு விடியோவையும் பார்த்தால் தான் உண்மை தெரியும். மேலும் அதில் உள்ள கலண்டர் திகதிகளையும், அதே நேரம் டிவி யில் நடந்த (ஓடிக்கொண்டிருந்த ) நிகழ்ச்சிகளை ஆராய்ந்தாலும் சில உண்மைகள் வெளிப்படும். (இனி Chanal 4 கொலைகாட்சிகள் ஆராயிந்தமாதிரியில்லோ ஆராயவேண்டும்……ஹஹஹாஆஅ…இது நமக்கு தேவைதானா? நமக்கு நாடில் எதோ பிரச்சனை, இது நமக்கு நாட்டில இப்படியும் நடக்கிறது என்று ஓர் செய்தி.

      ஆனால் நிச்சயமாக இது திட்டமிட்டுத் தான் எடுக்கப்பட்டுள்ளது, அதில் தனி மனித உரிமை சுதந்திரம் மீறப்பட்டுள்ளது.

      இவ் அதிகாரத்திலுள்ளவர்கள், அரசியலில் சேவைக்கு படைத்தவர்கள் தமக்கு வேண்டாதவர்கள் என்றால் எனவிதமான போக்கிரி வேலையும் ஓர் மனிதாபிமானம், இரக்கம் இல்லாமல் செய்வார்கள். இது என் சொந்த அனுபவமும் கூட….. அதுவும் சிறிது காலத்திற்கு முன் இதே இந்தியாவில். அத்துடன் நம் ஈழத்து நண்பர்களும் இதற்க்கு சளைத்தவர்களில்லை.

      மேலும் கிழே இன்றைய செய்தி:

      தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்று கூறப்படுகிறது. நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் பரவி வருவதால், பிடதி ஆசிரமத்தில், ராம் நகர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா மீதும், அவர் ஆசிரமம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.

      உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறியதாவது: நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து வனத்துறை அதிகாரிகள், 26 கிலோ சந்தனக் கட்டைகளை கைப்பற்றியுள்ளனர். ஆசிரமத்தில் மான், புலி தோல்கள் உள்ளதாக வந்த தகவல் கிடைத்ததன் பேரில், போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று சோதனையிட்டனர். ஆனால், அத்தகைய பொருட்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. ஆசிரம சொத்தின் உரிமையாளர் குறித்து மாவட்ட கலெக்டரிடமிருந்து தகவல்கள் சேகரித்து, கூடுதல் நடவடிக்கை மேற் கொள்வோம். அவர் தலைமறைவாக இருப்பதுடன், அவர் எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. தமிழக போலீசாருடன் தொடர்பு கொண்டுள்ளோம். தேவையெனில், சட்டப்படி அவரது சொத்துகளை முடக்குவது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

      கர்நாடகா மேலவையில் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பேசியதாவது: பிடதியிலுள்ள நித்யானந்தா சொத்துகளை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து விரைவில் அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளும். பிடதியிலுள்ள ஆசிரமம், பொதுமக்களின் சொத்தாக இருப்பதால், அதை எப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது என்றார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நித்யானந்தா சாமியார் நடத்திய லீலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

      மேலும்

      http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6791

  11. kamaraj says:
    16 years ago

    இத்துடனாவது இது முடியட்டும்.

    மனமொப்பி, சட்டப்படி செல்லுபடியாகும் வயதிலுள்ள ஆணும் பெண்ணும், சுயநினைவோடும் ஒப்புதலோடும் சுகமான தருணங்களை அனுபவிப்பதை எப்படி இவ்வளவு பேர் கோபத்தொடு பார்க்கிறார்கள்? அவர்கள் இருவரும் மற்றவர் எல்லாரும் பார்ப்பதற்காக வியாபார நோக்கில் ஆபாசப் படம் எடுக்க நினைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களது அந்தரங்கத்தின் அத்துமீறல்தானே இது?

    அவன் மீது கோபப்பட இப்படி ஒரு படம் தேவைப்பட்டது என்பதே கேவலமில்லையா? ஆதிசேஷன் மீது அமர்ந்து ஆண்டவனாக அவன் படம் எடுத்து வெளியிடும்போது புண்படாத இந்து மனங்கள் இப்போதுதான் புண்படுகின்றனவா? இது என்ன கோபம்? அறச்சினமா ஆவேச நடிப்பா?

    திரும்பத்திரும்ப இந்த நிகழ்வு மனத்தில் நெருடும்போது அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    அவளுக்கு விருப்பமானவனோடு இருக்க அவளுக்கு உரிமை உண்டு. அது வன்புணர்ச்சியாகவோ வியாபாரக் கொஞ்சலாகவோ தெரியவில்லை. அவளை அவமானப் படுத்த நமக்கெல்லாம் யார் உரிமை தந்தது?

    அவனது போலி ஆன்மீகநாடகத்தை விமர்சிக்கும்போது அவளையும் அவமானப்படுத்துதல் என்ன நியாயம்?

    யாராவது உற்றுப்பார்த்தாலேயே உடையைச் சரிபார்க்கும் வழக்கம் எல்லா பெண்களுக்கும் உண்டு. நீச்சல் உடையில் நடிக்கும் நடிகையர்க்கும். இது அனிச்சையான மான உணர்வு. இவளை இப்படித் தொடர்ந்து காட்டும்போது அவள் மனம் எவ்வளவு வருந்தும்? சம்பளம் கொடுத்தால் நெருக்கமாகக் கட்டிலில் புரண்டு நடித்துப் பாட்டுப் பாடத் தயாராக இருப்பதால் அவளுக்கு மானம் கிடையாதா? இயல்பான மென்னுணர்வுகள் இருக்கக்கூடாதா?

    மானம் ரோஷம் இல்லாதவன்தான் ஞானி என்று கபட வேடம்போட்டு குற்ற உணர்வு இல்லாமல் சிரித்துக்கொண்டு திரிய முடியும்; அவனுடன் இருப்பதாலேயே அவளுக்கும் இதெல்லாம் கிடையாது என்று முடிவெடுக்கலாமா?

    அவனைத் திட்டுகிறேன் என்று அவளை அவமானப்படுத்துவது, இத்துடனாவது நிற்கட்டும். மனத்தில் ஈரம் உள்ளவர்கள், இனி நிதானமாக அவளைப் புரிந்து கொள்ளப் பாருங்கள்.

    http://rudhrantamil.blogspot.com/

  12. mamani says:
    16 years ago

    நித்தியானந்தா , ரன்சிதா இரு மனிதர்களின் பாலியல் செயற்பாடு எந்தவொரு சட்டநிர்வாகங்களை அணுக முதலே பதிவு செய்யப்பட்டதும்,பொது தொலைகாட்சிகளில் வெளியிடப்பட்டதும் மகா தவறு முதலில் தண்டிகப்படவேண்டியர்கள் இவர்களே. ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் படுக்கையறையில் நடப்பதை படம் பிடிக்கும் துணிவு உண்டா? இது ஒரு கேவலமான வீடியோ விபச்சாரம்.

  13. suganthan says:
    16 years ago

    நித்தியானநதா விசயம் பல கதவுகளைத்திறக்கிறது. நல்லது.
    அப்படியே திறபடட்டும்.

  14. கோவி.கண்ணன் says:
    16 years ago

    நித்யானந்தன் தன்னை சராசரி மனிதன் என்று சொல்லிக் கொள்ளவில்லை, அவன் படத்தை பூசை செய்தார்கள். பாததிற்கு பூசை செய்தார்கள். அவதாரம் என்றார்கள்.

    உங்கள் பதிவின் தலைப்பு ‘இராஜசேகர் என்ற இளைஞன்’ என்றிருந்தால் நீங்கள் எழுதி இருக்கும் கருத்துகள் பொருத்தமாக இருக்கும், அதுதான் ஒரிஜினல், நித்யானந்தன் என்பது அவனும் பிறரும் அவனுக்கு தோற்றுவித்த பிம்பம்.

  15. Siva Kuna says:
    16 years ago

    இந்துத்துவம் என்கின்ற மதக் குப்பைக்குள் நித்தியானந்தன் ம்டடுமல்ல அன்றிலிருந்து இன்றுவரை பல திருட்டுச் சாமிகள் இருந்து கொண்டேயே உள்ளனர். தற்போது இலங்கைத் தமிழரின் மனங்களையும் பணங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பங்காரு செவ்வாடைச் சாமி அம்மா பகவான் என்ற கடைந்தெடுத்த அயோக்கியத் தம்பதிகள் போதை மருந்து வியாபாரியான உலகப் புகழ் பெற்ற அமிர்தானந்தமயி இவர்கள் ஈழத் தமிழரின் மனப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவர்களிடையே சிறப்பாகக் கடை விரித்துள்ளனர். இவர்களின் தரகர்களாக ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் வட்டி முதலாளிகளும் சமூகத்தால் துரத்தப்பட வேண்டியவாகளுமே உள்ளனர். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமாகவே மதங்கள் உள்ளன. உளவியல் பிரச்சினைகள் ஈழத்தமிழரிடையே யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ளது. அதற்கான மருத்துவத் தீர்வுகளை நாடிப் போவதனை தமது தன்மானப் பிரச்சினைகளாக கொள்பவர்கள் மிக இயல்பாக இத்தகைய சாமிகளிடம் சரணடைந்து விடுகின்றனர். பல இலங்கைப் பெண்கள் இத்தகைய சாமிகளிடம் வரம் பெறுவதற்காக அவர்களதும் .தரகர்களதும் பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்துள்ளமை வெளிவராத செய்திகள் பாரிசில் ஐயப்பன் கோயில் என்ற வகையிலும் இத்தகைய பாலியல் தரகு நிறுவனம் ஒன்று உள்ளது. தயவு செய்து தமிழர்களே கண் திறவுங்கள்.

  16. alex.eravi@gmail.com says:
    16 years ago

    நித்யானந்தா விவகாரத்தில் அடிபட்டு திடீரென்று நடிகை ரஞ்சிதா காணாமல் போனதில், ஏக அப்செட்டில் இருக்கிறார் மணிரத்னம். காரணம் விரைவில் வெளியாக உள்ள அவரது ராவணன் படத்தில் ரஞ்சிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    மேலும்
    http://cinema.dinamalar.com/tamil-news/1842/cinema/Kollywood/Ranjitha-missing-Manirathinam-upset.htm

  17. suganthan says:
    16 years ago

    ஆணின் பாலியல் வேட்கைக்காக பெண்களை ஏமாற்றுகிறன் கவலைகொள்பவர்கள்
    பெண்களின பாலியல் வேட்கைபற்றி ஏன் கவலைகொள்வதில்லை. ?

  18. Ramesh says:
    16 years ago

    இந்து மத சாமியார்கள் மட்டும் தான் அயோக்கியமானவா;களா? தலைவன்கள் என்று கூறிக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துமா சன்டிவி. இவனது குடும்பத்திலே யார் யோக்கியம். அடுத்தவா;களை பற்றி பேசுவதற்கு.

  19. thamilmaran says:
    16 years ago

    ஒரு பூகம்பமே வெடித்து சிதறீ காயங்களூம் வலிகளூமான உணர்வு.கடவுலைக் கூட காசுக்காக காட்டிக்குடுத உலகில்,புத்தருக்கு வ்சம் கொடுதது கொன்ற மனிதரிடம ஈரம் இருக்க முடியாது காந்தியின்நோட்டுக்காக் காந்தியையே கொன்றவர்கள் நித்தியான்ந்தாவை விடுவார்களா?

  20. alex.ravi@gmail.com says:
    16 years ago

    In Nithiyanantha controversy, another 2.5 hours video submitted to the police commissioner:

    சாமியார் நித்தியானந்தா தொடர்பான புதிய விடியோ ஆவணம் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
    நித்தியானந்தா தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சியில் வெளியாகின. இந்த நிலையில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றியதாகக் கருதப்படும் லெனின் என்பவர் அவருக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
    புகாருக்கு ஆதாரமாக இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய விடியோ அடங்கிய டிவிடியை தம்மிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கமிஷனர் கூறியுள்ளார். நித்தியானந்தாவுக்கு எதிராக தமிழக போலீஸாரிடம் அளிக்கப்பட்டிருக்கும் புகார்கள் அனைத்தும் கர்நாடகத்துக்கு மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

    http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest News&artid=207585&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

    And read the readers’ comments from these news papers:

  21. alex.eravi@gmail.com says:
    16 years ago

    பொதுமக்களுக்கு அதீத ஆர்வம் இருப்பதால், இத்தகைய வழக்குகள் பிரபலமடைந்துவிடுகின்றனவே தவிர, வேறொன்றுமில்லை. விசாரணை நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிஜமானால் மட்டுமே, குற்ற வழக்குகள், நிரூபணங்களை நோக்கிச் செல்ல முடியும். அதுவரை, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவது தொடரத்தான் செய்யும்.

    சாமியார்கள் பற்றி சமீபத்தில் வந்த இரண்டு நிகழ்வுகள், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுவரை, “யூ டியூப்’ பற்றி கேள்விப்பட்டிராதவர்கள் கூட, இப்போது அதிலேயே 24 மணி நேரமும் லயித்துக் கிடக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் இருவர். முதலாமவர், காஞ்சிபுரம் கோவிலின் கர்ப்பகிரகத்தை, “கர்ப்ப’ கிரகமாக்கிய தேவநாதன். இரண்டாமவர், “ரஞ்சிதா புகழ்’ நித்யானந்தர்.

    இவ்விருவரின் செயல்பாடுகள், வீடியோக்கள் மூலம், உலகம் முழுவதும் பரவின. “யூ டியூப்’பின் சர்வர், “ஜாம்’ ஆகும் அளவுக்கு, நேயர்கள் விரும்பிப் பார்த்த, “நம்பர் ஒன் வீடியோ’ காட்சிகளாக இவை அமைந்தன. இந்த பரபரப்புகள் ஒரு புறம் இருக்க, இந்தப் பிரச்னையில் சட்டத்தின் நிலைப்பாடு என்ன?

    மேலும்:

    http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6816

    http://www.hindu.com/2010/03/07/stories/2010030763560100.htm

    Everyone is asking where is Nityananda? As per the latest news , Swami Nithyananda, the spiritual leader is not in hiding but has gone to attend the Kumbh Mela.

    http://www.merinews.com/article/nityananda-ranjitha-video-nityananda-in-kumbh-mela-will-return-on-march-18—all-details-revealed/15800320.shtml

    Senior Kannada actress Tara, who is devotee of Pramahamsa Nithyananda Swamiji, is shocked by the scandalous sex video footage of the Swamiji. She said that she had lost the faith in the Swamiji after watching him romancing Tamil actress Ranjitha on Sun TV.

    http://entertainment.oneindia.in/kannada/top-stories/2010/tara-nithyananda-scandal-040310.html

  22. thamilmaran says:
    16 years ago

    லண்டனில் தமிழ்க்கடைகள் சிலவற்றீல் நித்தியானந்தாவின் வீடியோ விற்கிறாரகள் .எத்தனை தூரம் நாம் தாழ்ந்து போனோம்.வல்லரசு என்றூ மார்தட்டும் நாட்டின் தனி மனித சுதந்திரம் விசாரனைக் உட்ப்டுத்த் வேண்டும்.நம்பிக்கைத் துரோக அடிப்படையில் விசாரிக்கப் பட் வேண்டியது சன் தொலைக்காட்சியே.

    எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாது சமூக்த்திற்கு தீங் கு செய்யும் சன் தொலைக்காட்சி போன்றோர் தண்டிக்கப்பட வேண்டும்.

  23. xxx says:
    16 years ago

    சில காலம் முன்பு கத்தோலிக்கத் திருச்சபை அவுஸ்திரேலியாவிலும் அதன் முன்பு அயர்லாந்திலும் சில பாதிரிமாரின் பாலியல் வக்கிரங்களை ஒப்புக் கொண்டது. அது காலங் கடந்த ஆனால் சரியான நடவடிக்கை.

    அப்பாவி மக்கள் சாமிமாரையும் மதகுருக்களையும் மற்றாச் சமூகப் பிரமுகர்களை விட அதிகமாகவே நம்புகிறர்கள்.

    அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளை மாற்றுக் கட்சிகளாவது கண்காணிக்கின்றன.
    ஒரு தற்கொலையைக் கூடக் கொலை என்று கூறிப் பிரச்சனை எழுப்புகிற அளவுக்குப் போட்டியாவது செயற்படுகிறது.

    சைவ மற்றும் பிற இந்து மதச் சாமிமாரின் மோசடிகளை மக்கள் அறிய வேண்டும்.
    பத்திரிகைகள் பக்தியை வளர்க்கிறதாகச் சொல்லிக்கொண்டு சாமிமாரை மட்டுமில்லமல் பிற காவி, பூணூல் அயோக்கியர்களையும் ஆதரித்து வருகின்றன.
    சோதிடம், எண் சோதிடம், வாஸ்து, கை ரேகை என்று எத்தனை மோசடிகளை ஆதரித்து வருகின்றன!

    ஒரு அயோக்கியன் அகப்பட்டால், மற்ற அயோக்கியர்களும் இருக்கிறார்களே என்று பிலாக்கணம் வைக்காமல் எல்லாரையும் அம்பலப் படுத்தத் துணிய வேண்டும்.

  24. alex.ravi@gmail.com says:
    16 years ago

    காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே!

    நித்யானந்தா செக்ஸ் லீலையில் சம்பந்தப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இப்போது அவர் முதல்முறையாக
    குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு செல்போன் மூலம் பேட்டியளித்துள்ளார்.

    அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

    அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?

    ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள்இ ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்… அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்…

    அந்த ஆபாச காட்சிகள்…

    காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

    சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?

    நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?

    உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?

    பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

    நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?

    அதான் இப்போது சொல்லிட்டேனே… நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்…’

    -இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா.

  25. thamilmaran says:
    16 years ago

    ரன்சிதா தில்லாக திட்டமிட்டுச் இந்த சதியை அரங்கேற்றீ உள்ளார் அவர் மட்டும் அழகாக் சேலையோடும், சுடிதாருடனும் இருக்கிறார் ஆனால் சுவாமி போல் தோன்றூபவர் அரை நிர்வாணமாக, இது அழகாக அமைதியாக திட்டமிட்ட முரையில் நடந்தேறீ இருக்கிறது.முதுகில் குத்துதல் என்ப்து இதைத்தான்.

  26. alex.ravi@gmail.com says:
    16 years ago

    ரஞ்சிதாவின் பேட்டி ஒருபக்கத்தில் இருக்க, நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் கருப்பன் பின்னணியில், அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் உள்ளனர் என, பிடதி நித்யானந்தா தியான பீடத்தைச் சேர்ந்த நித்ய சச்சிதானந்தா தெரிவித்தார்.

    வீடியோ குறித்து விளக்கமளித்த நித்யானந்தாவின் சீடரான நித்ய சச்சிதானந்தா, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கடந்த 2ம் தேதி இரவு, நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளில் எவ்வித உண்மையும் இல்லை. கிராபிக்ஸ் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம். நித்யானந்தாவுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது.

    வீடியோ காட்சியை எடுத்துக் கொடுத்ததாக லெனின் கருப்பன், தமிழக போலீசில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். பிளஸ் 2 வரை மட்டுமே படித்த லெனின் கருப்பனுக்கு தொழில் நுட்பங்கள் தெரியாது. அவருக்கு பின்னணியில், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் இருந்து இயக்கி உள்ளனர்.

    கனடாவைச் சேர்ந்த மெல்வியா டயமண்ட், ஆசிரமத்தில் கொலை செய்யப்பட்டதாக லெனின் கருப்பன் புகார் கூறியுள்ளார். கட்டடத்திலிருந்து கீழே விழுந்ததால் தான், மெல்வியா இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. நித்ய பிரபானந்தா என்ற சுரேந்தரை, ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்திருப்பதாக, அவரது பெற்றோர் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால், தன் விருப்பப்படி ஆசிரமத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார், என்று கூறிய நிலையில்
    சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நித்யானந்தாவிற்கு எதிராக பெண்கள் யாரும் கற்பழிப்பு புகார் கொடுக்கவில்லை.
    மேலும் விரிவாக அறிய: http://www.virakesari.lk/cinema/news/001view.asp?key=2606

    அத்துடன் பெண்கள் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில் இது ஓர் அரசியல் சாயம்பூசப்பட்டதாகவே தெரிகிறது. சத்ய சாயிபாபாவின் மடத்தில் இறந்து யேர்மனியப் பெண் பற்றியும், பற்றைக்குள் கிடந்தது எடுக்கப்பட்ட அவரின் ககைப்பை பற்றியும் என்ன நடந்தது? அதன் பின் ஒரு முறை அவரை கொல்ல சென்றவர்களை பாதுகாவலர் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அதற்கு விசாரணை நடந்ததா? ஏன் மூடி மறைக்கப்பட்டது?

    இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்கள் (முன்னால் ஜனாதிபதி ஒருவர் கூட), போலிஸ் முக்கியஸ்தர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் அவரின் பக்தர்கள் ஆகும். ஏன், நாத்திக திராவிடத் தலைவர் கருணாநிதி அவரை சென்னையில் வரவேற்றது……………பணமும், செல்வாக்கும், அரசியலும் பத்தும் என்ன….. நூறும், ஆயிரமும் செய்யும்.

    “ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண் டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன”.

    “சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்”.
    ஆதாரமும் சுவாரஸ்யமும்: http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_17.html
    http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_12.html

    அல்லது இன்று ஈழ அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசாரை விசாரித்து அவ் அவலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?

    “தீபிகா,ராம்பிரகாஷ் என்ற இரண்டு சிறுவர்கள் தொடர்பான கொலை வழக்கில் இலங்கை அகதி முகாமைச் சார்ந்த குமார், பாண்டி உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தியதி அதிரடியாக குமாரின் வீட்டிற்குள் நுழைந்த தமிழக போலீசார் குமாரின் மனைவி பதமாதேவியை பலவந்தப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்றிரவு அவரைக் கொண்டு வந்து வீட்டில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் கொண்டு வந்து விடப்பட்ட சில மணி நேரங்களில் பதமாவதி தனது உடலில் மண்ணெண்ணையை விட்டு தீவைத்துக் கொண்டுள்ளார். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதமாவதியை அழைத்துச் சென்ற கரூர் காவலர்கள் மூவரும் அவரை ஒருவர் மாறி ஒருவராக பாலியல் வன்முறை செய்துள்ளதோடு கடும் மிரட்டலையும் அச்சுறுத்தலையும் செய்துள்ளனர். இது குறித்து பல் வேறு மனித உரிமை அமைப்புகள் விசனம் வெளியிட்டுள்ள போதிலும் முதல்வர் கருணாநிதி இது குறித்து மௌனம் காக்கிறார் என்பதோடு வரவிருக்கும் 13-ஆம் தியதி சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதிய தலைமைச் செயலகம் திறப்பு விழா நடைபெறுவதை ஒட்டு இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் அகதி முகாம்களை விட்டு வெளியேற தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது”.
    மேலும் அறிய: https://inioru.com/?p=11266

    இந்த இலட்சணத்தில் யாரோ ஓர் நடிகைக்காக இந்த சன் டிவி யில் எத்தனை முக்கியத்துவம்? அதை விட ஈழப்பிரச்சனையை வைத்து வியாபாரம் செய்யும் நக்கீரன் பத்திரிகையும் நடிகை ரஞ்சிதாவை வைத்து முழு வீடியோ பார்க்க log in செய்யும்படி. மாறன் குடும்பத்தில் ஒருவரோ, அல்லது நக்கீரன் கோபால் குடும்பத்தில் ஒருவரோ இந்த நித்தியானந்தாவின் சீடராக இப்படி நடிகை ரஞ்சிதாவின் இடத்தில் இருந்தால் இவ்வளவு விளம்பரம் செய்து இருப்பார்களா?

    பெண்ணியல் வாதி கனிமொழி எங்கு சென்றுவிட்டார்? அத்துடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர்.

    நேற்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடிய உயர் மத்திய தரப்பு மாதர் அமைப்புகள், உயர்தரப்பு மாதர் அமைப்புகள் இந்தப் பெண்ணின் நீதிக்காக குரல் கொடுப்பார்களா?

    மறு பக்கத்தில், மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது 70வது பிறந்தநாளாகிய இன்று அவரை அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்கார ரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விழா சிறப்பு மலரை வெளியிட்டு அருள்தரிசனம் தந்த அடிகளாரிடம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

    பிப்ரவரி 13 முதல் 15 தேதிவரை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 5000 பேருக்கு மேல் பங்கேற்று சிகிச்சை பெற்ற மக்கள் நலப் பணியுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்ரவரி 25 முதல் தொடர் அன்னதானம், கலச வேள்வி பூசை, சிறப்பு பாத பூசைகள், தினசரி பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு, ரூ.1கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிகள், வானத்தில் வண்ணக் கதிரொளிக் காட்சிகள் என தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .
    அருளாசி மேடையில் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை அடிகளார் வெளியிட தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எம். தணிகாசலம் முதலியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அங்கு காத்துக் கொண்டிருந்த பல்துறைப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ஆசி பெற்றனர்.

    மேலும் அறிய: http://www.kalaikesari.com/culture/culturenews/Results.asp?key_c=54

    இவருக்கும்உலகம் பூராகவும் கிளைகள் உள்ள நிலையிலும், பல ஈழத்தமிழர்கள் போட்டி போட்டு கிளைகள் (டொராண்டோவிலேயே ஒன்றில் இருந்து பிரிந்து என்று மூன்று கிளைகள்) அமைத்து வழிபடும் நிலையிலும், கூடுதலாக செவ்வாடை பெண்களையே கொண்டுள்ளதாலும் இவ் ஆன்மீக வாதி தானும் இப்பெண்ணிர்காக குரல் கொடுப்பாரா? இல்லை…….. ஏன் நமக்கு வம்பு என்று விட்டுவிடுவார்கள். அப்பெண்ணின் குடும்பத்தார் என்ன நன்கொடை கொடுக்கப்போகிறார்களா?

    குஷ்புவிற்கு, ராதிகாவிற்கு, நமீதாவிற்கு, நயன்தாராவிற்கு ஓர் பிரச்சனைஎன்றால் தமிழகமே திரண்டு எழும்!
    வாழ்க தமிழகம்! வாழ்க ஈழத்தமிழ் எழுச்சி!

  27. rapheal says:
    16 years ago

    கரூர் அருகில் ராயலூர் முகாமில் சுமார் 1000 ஈழ ஏதிலிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்,
    இங்கு உள்ள மூவரை சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைதி செய்து ,
    முன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்தி கொலை
    குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி உள்ளனர்.

    அவர்கள் மறுத்த நிலையில்,
    அந்த முன்று அகதிகளில் ஒருவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து
    சென்று தன் கணவனை கொலை குற்றத்தை ஒப்புகொள்ள சொல்லு மாறு அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டு
    உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கரூர் அரசு மருதுவமையில் சிகிச்சை பெற்று
    வரும் தீக்குளித்த பெண்ணின் தோழி கூறியதாவது நான் ராயலூர் எதிலி முகாமில் இருக்கும்
    பெண், எனது தோழி தான் தீக்குளித்து இப்பொது உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பெண்,
    இந்த பெண்ணின் கணவர் உட்பட முன்று ஆண்களை காவல் துறையினர் கடந்த பத்து நாட்களுக்கு
    முன்பு கைது செய்து சென்றனர், பத்து நாட்களாக கணவர் வீடு திரும்பாத நிலையில் கவலையுற்று
    இருந்த இந்த பெண்ணை நேற்று ஐந்து காவல்துறையினர் காவல்துறையினரின் உடுப்பில் இல்லாமல்
    மாற்று உடுப்பில் வந்து, உனது கணவர் உன்னை சந்திக்க விரும்புகிறார் நீ உடனே கிளம்பி வா
    என்றதும் இந்த பெண் அவர்கள் சொல்வதை நம்பி தன் கணவனை பார்க்கும ஆர்வதுடன்,
    கால்வதுறையினர் உடன் அவர்கள் வந்திருந்த வாகனத்தில் மதியம் சுமார் 1.30 மணி
    அளவில் கிளம்பிச் சென்றார்.

    பிறகு மாலை 6.30 மணியளவில் அந்த பெண் வாகனத்தில் இருந்து மிகுந்த சோர்வுற்ற
    நிலையில் இறங்கி அழுதுகொண்டே வந்தாள். அவளிடம் சென்று நாங்கள் என்ன ஆனது
    என்று கேட்டபோது, அவளது வாழ்வு வீனாகப்
    போனதாகவும் இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை எனவும் அழுது கொண்டே கூறினாலள்,
    நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வீடு திரும்பிய போது அவள் தனது
    வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தன் மீது உற்றி தன்னை எரித்து கொண்டாள்,
    அதை பார்த்ததும் நாங்கள் விரைந்து சென்று அவளை கரூர் அரசு மருத்துவ மனையில்
    சேர்த்தோம்.

    இப்பொது மருத்துவர் இந்த பெண்ணை காப்பாற்ற முடியாது என்று
    கூறிவிட்டார், அந்த பெண்ணின் கணவர் இன்னும் சிறையில் தான் உள்ளார், அவர் தனது
    மனைவியை பார்க்க அனுமதிக்கவில்லை போலும், இந்த பெண்ணிற்கு ஒரு மகன் உள்ளார்
    அவர் பெங்களூரில் படித்து வருகிறார், அவருக்கு செய்தியை சொல்லியுள்ளோம் !
    எங்களுக்கு வேண்டியது எல்லாம் இந்தப் பெண்ணிற்கும் அவளது மகனுக்கும் நீதி, அதேபோல்
    எங்களுக்கும் பாதுகாப்பு, இன்று இந்த பெண்ணிற்கு நடந்தது போல் நாளை எனக்கும் என்னைப்
    போன்ற பெண்களுக்கும் நடக்கக்கூடும்,
    அப்போது நாங்களும் இதே போன்ற துன்பத்திற்கு தான் ஆளாக நேரும். என்று அவர் மேலும் தெரிவித்தார்

  28. visvava says:
    16 years ago

    மக்களை மயக்குவதற்கும் மனித மனங்களை கார்ப்பொரேட்டுகளின் சரக்குகளுக்கேற்ப தகவமைப்பதற்கும்தான் நவீன அபினிகளாக நாங்கள் வந்து விட்டோமே நீ என்ன எனக்குப் போட்டியாக என்று சன் டிவிக்குக் கோபம் வந்துவிட்டது போலும்.அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுத் தாளித்து விட்டார்கள்.

    கார்ப்பொரேட்டுகளின் சரக்குகளுக்கேற்ப என்று எழுத தமிழ்செல்வன் தகுதி இல்லாத நபர் .இவரது தோழர்கள் மேர்த்கு பெங்காலில் நடத்தும் காட்ட்வேட்டை வேட்டை என்கிற நக்சல் பாரிகளுக்கும்,ஆதிவாசிகளுக்கும் எதிராக நடாத்தும் போர் அந்நியர்களுக்கு வால் பிடிக்கத்தான். தமிழ்செல்வன் கம்யுனிஷ துரோகி.

  29. alex.eravi@gmail.com says:
    16 years ago

    வாரணாசி கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நித்யானந்தாவை, டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் விஜய மல்கோத்ரா சந்தித்து பேட்டி கண்ட பொழுது “பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை, வதந்திகளே” என்று சாமியார் கூறியுள்ளார்.
    அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- பெங்களூரில் உள்ள ஆசிரம கட்டிடம் இருக்குமிடம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதா?

    பதில்:- வள்ளல் பரம்பரையைச் சேர்ந்த பிரதாப் ராவ், ஜீவன்ராவ், கேசவ் ராவ் ஆகிய 3 சகோதரர்கள் ஆசிரமத்துக்கு நன்கொடையாக வழங்கிய இடம் அது. 2003-ம் ஆண்டு ஆசிரமத்தின் மீது கொண்ட பற்று காரணமாக இந்த இடத்தை வழங்கினார்கள். இதற்கான பத்திர பதிவுகள் அனைத்தும் சட்ட ரீதியாக செய்யப்பட்டுள்ளன.

    கேள்வி:- உங்கள் சொத்து தொடர்பான எல்லா விவரங்களையும் வெப்சைட்டில் வெளியிடுவீர்களா?

    பதில்:- நிச்சயமாக அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன்.

    கேள்வி:- ஆசிரமத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் மர்மமாக இறந்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளதே?

    பதில்:- கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறி விழுந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கேள்வி:- உங்கள் மீது தமிழக போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளார்களே?

    பதில்:- எனக்கு எதிராக கிளப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதில் எள் அளவும் உண்மை இல்லை.

    எந்தப் பெண்ணும் என்னால் பாதிக்கப்பட்டதாக இதுவரை புகார் சொல்லவில்லை.

    கேள்வி:- உங்கள் ஆசிரமத்தில் இளம் சிறுவர்களை அடைத்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே?

    பதில்:- எனது ஆசிரமத்தில் தங்கி உள்ள அனைவரும் அவர்களுடைய விருப்பப்படிதான் தங்கி இருக்கிறார்கள். கட்டாயப்படுத்தி யாரும் தங்க வைக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் ஆசிரமத்துக்கு வந்து விசாரிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ள நிலையில் இதை வாசகர்களும் you tubeல் பார்க்கலாம்.
    http://www.youtube.com/watch?v=tgiFa5uQt7k&feature=player_embedded

    மேலும் சட்டத்திற்கு புறம்பாக தானோ தனது ஆசிரமமோ எதனையும் செய்துவிடவில்லை என்று நித்யானந்தா சாமி விளக்கம் அளிக்கின்ற வீடியோ ஒன்று இன்று வெளியானது. கைத்தொலைபேசி கமராவினால் எடுக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற இவ் வீடியோவில் நித்யானந்தா சாமி ஆங்கிலத்தில் பேசுகின்றார்.

    தன்மீதும் தனது ஆசிரமம் மீதும் அண்மைக்காலத்தில் குற்றச்சாட்டுக்கள் வந்த போதும் பலரும் பல இடங்களில் இருந்தும் தங்களது ஆதரவைத் தனக்குத் தெரிவித்து வருவதாகவும் தன் மீதான குற்றச்சாட்டு அவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் நித்யானந்தா அவ் வீடியோவில் தெரிவித்திருக்கின்றார்.

    தான் சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்யவில்லை என்றும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் அனைத்து உண்மைகளும் வெளிவரும் எனவும் அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
    In English
    http://www.youtube.com/watch?v=IO_6GkLekWY&feature=player_embedded
    In Tamil
    http://www.youtube.com/watch?v=GE_Y5AHotyg&feature=player_embedded

    இதே நேரம் வீடியோவில் இருப்பது நான்தான்! ரஞ்சிதா பரபரப்பு பேட்டி!!

    சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ �வெளியானதைத் தொடர்ந்து, இந்த வீடியோ வெளியான விவகாரத்தில் ரஞ்சிதாவுக்கு தொடர்பு இருப்பதாக முதலில் செய்தி வந்தது. பின்னர் அந்த வீடியோவை எடுத்தது சாமியாரின் சீடர்களில் ஒருவரான �லெனின் கருப்பன் என்று கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து தானும், ரஞ்சிதாவும் சேர்ந்து சாமியாரிடம் பணம் கறப்பதற்காக இந்த வீடியோவை எடுத்ததாக லெனின் கருப்பனே கூறியதாக செய்திகள் வெளியாயின. இந்த விவகாரத்தில் சாமியார் நித்தியானந்தர் தான் சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டார். வீடியோ விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் இன்னும் சில தினங்களில் உண்மையை உலகுக்கு சொல்வேன் என்றும் சாமியார் தனது விளக்கத்தில் கூறி விட்டார்.

    ஆனால் ரஞ்சிதா எங்கே போனார்? என்ற கேள்வி எழுந்தபோதே… அவர் சாமியாருடன் சென்று விட்டார், சாமியாரின் ஆசிரத்தில் தலைமறைவாக உள்ளார்…. ரஞ்சிதா வாய் திறக்க மறுக்கிறார்… என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் வாரஇதழ் ஒன்றிற்கு நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சுவாமி நித்தியானந்தருடன் வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். என்னை பற்றி, என்னை வளர்த்துவிட்ட தமிழ் மீடியாவே ரொம்ப கேவலப்படுத்திக் கொண்டிருப்பது நியாயம்தானா? நான் நல்ல குடும்பத்து பெண். தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவள். ஏதோ பணத்துக்காக அந்த வீடியோவை நான்தான் எடுத்தது போல மீடியாக்கள் சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஊருக்கே தெரியும். அவரது சொற்பொழிவுகளாலும், கருத்துக்களாலும் கவரப்பட்டவள் நான். அது மட்டுமல்ல, சிறுவயது முதல் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருந்த வீஸிங் பிரச்சனையை ஒரே நாளில் அவர் சரி செய்துவிட்டார். அன்று முதல் நான் அவரது பக்தை ஆகிவிட்டேன். காலை பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான். அதில் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

    நித்யானந்தா மகாஞானி. அவரே இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். ப்ளீஸ்…

    இவ்வாறு ரஞ்சிதா கூறியதாக அந்த இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.

    நன்றி! மனிதன் இணையம்

  30. meerabharathy says:
    16 years ago

    காமம்இ பிரம்மச்சாரியம்இ மனிதர்கள்இ சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1

    ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் தூஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான செய்திகள் பார்க்கப்படவேண்டும். இவ்வாறன செய்திகள் குறித்த தனிநபர்களுக்கு எதிரான ஒரு வம்புச் (பழளளip) செய்தியாக குறுகிய காலத்தில் பரபல்யமாகி ஊடக செய்திகளின் விற்பனைக்கும் அதனால் அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே வழிவகுக்கின்றது. இதற்குக் காரணம்இ அச் செய்தியின் பால் இருக்கும் கவர்ச்சித்தன்மையே. ஏனனில் நமக்குள் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்ட பிரக்ஞையற்ற காம மற்றும் பாலியல் மீதான ஆசைகளே இச் செய்திகளை நோக்கி நம்மை இழுக்கின்றன. ஆனால் காலோட்டத்தில் இப் பிரச்னைக்குறிய அம்சம் பெரும்பாலும் கதைக்கப்படுவதில்லை ஏனனில் பல்வேறு வம்வுச் செய்திகள் வந்து எம்மை அள்ளிக்கொண்டு சென்றுவிடும். அல்லது மீண்டும் இன்னுமொருவர் மூலம் பாலியல் தூஸ்பிரயோகம் தொடர்பான பிரச்சனை பெரிதுபடுத்தப்படும். சிறிது காலத்தில் மீண்டும் இச் செய்தியின் முக்கியத்துவம் குறைந்து போகின்றது. ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நமது சமூகத்தன் காமம் மற்றும் பாலியல் தொடர்பான கருத்துக்கள் சிந்தனைகளின் ஆதிக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளும்இ அதன் மீதான அடக்குமுறைகளும் கேள்விக்குட்படுத்தப்படுவதோ அல்லது ஆராயப்படுவதோ இல்லை. மாறாக இந்த செய்திகள் ஆணாதிக்க சமூகத்தின் பார்வையின் அடிப்படையில் அமைந்ததாகவே பெரும்பாலும் எம்மை வந்தடைகின்றன. அது பற்றிய விமர்சன பார்வையின்றி நாமும் அதை அப்படியே உள்வாங்குவது நமது துரதிர்ஸ்டமே. இதுபோன்று குறிப்பாக அரசியலில் ஆயுதப் போராட்டங்கள் ஏன் உருவாகின என்பது மற்க்கப்பட்டு ஆயுதப் போராட்டம் என்பதே முக்கியபிரச்சனையாகவும் பயங்கரவாத பிரச்சனையாகவும் சித்தரிக்கப்படும் அதேவேளை ஆயுதப் போராட்டத்தற்கு காரணமாக இருந்த சமூக பிரச்சனை மறைக்கப்பட்டு அல்லது மீண்டும் அடக்கப்பட்டு விடுகின்றது. அதேபோல்தான் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கின்றன. ஏனனில் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பானவையும் அடிப்படையில் ஒரு சமூகப் பிரச்சனையே. அதேவேளை தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் உரிமை சுதந்திரம் என்பனவும் பின்னிப்பினைந்த ஒரு பிரச்சனை. ஆனால் இது வெறும் தனிநபர் பிரச்சனையாக மட்;டும் பார்க்கப்பட்டு உண்மையான சமூகப் பிரச்சனை முழுகடிக்கப்பட்டுவிடுகின்றது. எப்படி பிரபாகரன் மற்றும் அவரைப் போன்றவர்களை பயங்கரவாதிகளாக மட்டும் காண்பிப்பதன் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக அல்லது தேசிய பிரச்சனையை அடக்கிவிடுவதன் மூலம் அவ்வாறனா ஒரு சமூகப் பிரச்சனை இல்லை என்றாகிவிடுகின்றது. இதே நிலைமைதான காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைக்கும் ஏற்படுகின்றது. ஏனனில் சமூகம் ஒரு புறம் பிரச்சனைக்கான விதைகளை விதைத்துவிட்டு மறுபுறம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பிரச்சனையாக பார்த்து தண்டனை அளிக்கின்றது. விதைத்த விதைகளை வசதியாக மறந்துவிடுகின்றது. இப்படிதான் சமூகத்தின பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது முரண்பாடானது மட்டுமல்ல நியாயமற்றதுமாகும். ஆகவே காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளையும் தூஸ்பிரயோகங்களையும் ஒரு சமூகப் பிரச்சனையாகவும் அதனால் உருவாக்கப்பட்ட தனிநபர் பிரச்சனையாகவும் அணுகும் பொழுது அதற்கான காரணங்களையும் நியாயமான தீர்வுகளையும் கண்டறியலாம். அதன் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. இது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கான ஒரு ஆரம்பமே.

    யறயமநபெைெயறயசநநெளள.ழசப தொடா;ந்தும் வாசிக்க் …

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...