வழமையாக இந்து மதம் பாலியல் வன்முறைக்கும் அத்துமீறலுக்கும் பெயர் போனது. நவதாராளவாத பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்துமதம் தன்னை இசைவாக்கிக் கொள்ளும் போது, திரைமறைவிலிருந்த இந்த அழுக்குகள் சமூக அங்கீகாரத்தோடு வெளி உலகிக்கு தெரியவருகின்றது. இந்த வகையில் இந்தியாவின் காப்ரட் சாமியாரான நித்தி முன்னிலையில் திகழ்கிறார்.
கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. நித்தியானந்தா மீதான முறைகேடு புகார் குறித்தும் விசாரணை நடத்த கர்நாக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்யானந்தாவின் வங்கி கணக்குகளை முடக்குவதுடன் அவரது ஜாமினையும் ரத்துசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி தெரிவித்த பாலியல் புகார், செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட உள்ளிட்ட புகார்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா மீது சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, “சுவர்ணா டிவி’யில், ஆர்த்தி ராவ் என்ற பெண் பேட்டியளித்து இருந்தார். நித்யானந்தாவால் தான் பல முறை பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதற்கு மதுரையில் பதிலளித்த நித்யானந்தா, அந்தப் பெண்ணுக்கு எச்சில் மூலம் பரவும் “ஹெர்பிஸ் 2′ என்ற பயங்கர நோய் இருந்ததாகவும், அதை குணப்படுத்திக் கொள்ளவே அவர் ஆசிரமம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருடன் தான் பாலியல் உறவு கொண்டிருந்தால் தனக்கும் அந்த நோய் வந்திருக்குமே என, கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டை அடுத்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை, சில கர்நாடக அமைப்புகள், கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
நித்யானந்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், நித்யானந்தாவின் குற்றச்சாட்டிற்கு, ஆர்த்தி ராவ் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர், ‘’நித்யானந்தா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது ஆசிரமத்திற்கு எப்போதாவது வந்து செல்லும் சாதாரண பக்தை அல்ல நான். 2005ல் அவர் முதன் முதலாக ஒரு குழுவுக்கு, “ஆனந்த ஸ்புரணா தியானம்’ என்ற முதல் நிலை தியானப் பயிற்சியை தானே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்.
இந்தக் குழுவினர் தான் ஆசாரியர்கள் என பெயர் சூட்டப்பட்டு, 2005 முதல் இவர்கள், மற்றவர்களுக்கு ஆனந்த ஸ்புரணா தியானத்தை கற்றுக் கொடுக்கத் துவங்கினர்.
இந்த குழுவில் நானும், என் தந்தையும் இடம் பெற்றிருந்தோம். இந்தக் குழு நித்யானந்தாவுக்கு மிகவும் நெருக்கமானது. இதற்கான ஆதாரமாக என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்தப்புகைப்படம்.
அதில் கீழே உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து மூன்றாவதாக நான் இருக்கிறேன். கடைசியாக என் தந்தை இருக்கிறார். இதில் இருந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் சாதாரண பக்தைகள் வரிசையில் நான் இல்லை என்பதையும், அவரது மிக முக்கியமான குழுவில் நான் இடம் பெற்றுள்ளேன் என்பதையும் சாதாரண மனிதர் கூட புரிந்து கொள்ள முடியும்’’என்று தெரிவித்துள்ளார்.
பார்ப்பன அதிகாரத்தை காப்ரட் மயப்படுத்துவதற்கு நித்தி பொன்றவர்களை நிராகரித்து இந்துமதம் இன்னும் உயிர்வாழ முடியாது.
பெங்களூர்: நித்தியானந்தாவைப் பிடிக்க சர்ச் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை 2 நாளில் பிடித்து விடுவோம் என்று கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கி கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா தற்போது 2வது முறையாக கர்நாடக போலீஸாரிடம் சிக்கும் அபாயத்தில் இருக்கிறார்.
பத்திரிக்கையாளர்கள் மீது நித்தியானந்தா ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை தூக்கி உள்ளே போட்டுள்ளனர். நித்தியானந்தாவையும் போலீஸார் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.ஆனால் நித்தியானந்தா தப்பி ஓடி விட்டார்.
இந்த நிலையில், நித்தியானந்தாவின் ஆசிரமத்தை கர்நாடக அரசு இன்று சீல் வைத்தது. ஆசிரமத்திற்குள் ரெய்டு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரம சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிடதி ஆசிரமத்தில் பத்திரிக்கையாளர்களுக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து முதல்வர் சதானந்த கெளடா இன்று டிஜிபி லால்ரோகுமா பச்சா உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நித்தியானந்தாவை 2 நாளில் பிடித்து விடுவோம். நடந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பிராந்திய கமிஷனர் ஷாம்பு தயாள் மீனாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தியான பீடத்தின் அத்தனை இடங்களையும் சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்,எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த மடத்தில் நடந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யத் தேவையான நடவடிக்கை குறித்து சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார் கெளடா.
மதுரை நித்தியானந்தா எங்கேயும் ஓடிப் போகவில்லை, பெங்களூரில்தான் இருக்கிறார். இன்று அல்லது நாளை அவர் மதுரை வருவார் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டுள்ள லேட்டஸ்ட் பிரச்சினை குறித்து அவர் தரப்பில் செய்தி தர அவரது ‘பிஆர்ஓ’ என்று யாரும் இல்லை. அனைவரும் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சார்பில் மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பிடதி ஆசிரமத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நித்தியானந்தாவுடன் நானும் அமர்ந்து இருந்தேன். அப்போது செய்தியாளர் போர்வையில் ஒரு நபர் ஊடுருவி நித்தியானந்தாவை கோபப்படுத்தும் வகையில் கேள்விகளை எழுப்பினார்.
அப்போது தன்னிடம் ஒரு சம்மன் இருப்பதாக கூறிய அந்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நேரத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நித்தியானந்தா பெங்களூரில்தான் இருக்கிறார். அவர் தலைமறைவாகவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. நித்தியானந்தாவின் தியான பீடங்கள் பெங்களூர் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த தியான பீடங்கள் அவரது தனிப்பட்ட சொத்தாகும். அவரது உழைப்பால் ஆன்மிக பணியால் உருவாக்கப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது.
கர்நாடக அரசு நித்தியானந்தாவின் தியான பீடத்தை கைப்பற்றபோவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அரசு இதில் தலையிட முடியாது. தியான பீட சொத்துக்களை அரசு கையகப்படுத்த எந்த சட்டத்திலும் இடம் இல்லை.
மதுரை ஆதீன நியமனத்தில் எந்த மாற்றமும் இருக்காது. எங்களை எதிர்ப்பவர்கள் விரைவில் ஆதரவாளராக மாறுவார்கள். பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா இன்று மாலை அல்லது நாளைக்குள் மதுரை திரும்புவார் என்றார் ஆதீனம்.
Don’t know why is this anything newsworthy here.
நித்தியானந்தா பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளதாலும், தலைமறைவாகி விட்டதாலும், அவரை கர்நாடக போலீஸார் தீவீரமாக தேடி வருவதாலும், மதுரை ஆதீன மடத்தை மூடி விட்டனர், பூஜைகளையும் நிறுத்தி விட்டனர்.இதனால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை ஆதீன மடத்திற்கு வந்த சோதனை இன்னும் தீரவில்லை.தொடர்ந்து ஆட்டிப்படைத்து அலைக்கழித்து வருகிறது.
இந்த மடத்தின் வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்த மதுரை ஆதீனம் தற்போது ஏகப்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.இந்த நிலையில்தான் கர்நாடகத்தில் கன்னட பத்திரிக்கையாளர்களுடன் மோதி நித்தியானந்தா பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். தலைமறைவாகி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.அவர் எங்கிருக்கிறார் என்பது பெரும் மர்மமாக உள்ளது. அவரது வாழ்க்கையில் இது இரண்டாவது தலைமறைவு ஓட்டமாகும்.
பிடதி ஆசிரத்தை மூடி சீல் வைக்க கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா உத்தரவிட்டு விட்டார். நித்தியானந்தாவையும் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மதுரைக்கு நித்தியானந்தா தப்பி ஓடி வந்துள்ளதாகவும், ஆதீன மடத்துக்குள்ளேயே அவர் பதுங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் மதுரை பக்கம் கர்நாடக போலீஸாரின் பார்வை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை போலீஸாரின் உதவியுடன் ஆதீன மடத்திற்குள் புகுந்து நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் கைது செய்யலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் திடீரென ஆதீன மடத்தை பூட்டி விட்டார்கள். இரு பக்க கேட்களும் மூடப்பட்டுள்ளன.தற்காலிகமாக மடம் மூடிவைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வைத்துள்ளனர்.
இனால் மதுரை ஆதீன மடத்தை இன்னும் மலை போல நம்பியிருக்கும் அப்பாவி பக்தர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
This Nithyanantha is still popular with a lot of people irrespective of the scandals that were reported.