13.10.2008.
அமெரிக்காவில் தொட ரும் நிதி நெருக்கடியால் 10-ல் 8 பேருக்கு மன இறுக்கப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வங்கி கள் திவாலாகி கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக் களில் 90 சதவீதம் பேர் எதிர் காலத்தை எண்ணி பீதிக்கு உள்ளாகியுள்ளனர். நிதி நெருக்கடியால் லட்சக் கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந் துள்ளனர்.
பொருளாதார பிரச் சனை அமெரிக்காவின் ஒவ் வொரு பகுதியையும் அலற வைத்துக் கொண்டிருக் கிறது. அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் 10-ல் 8 பேருக்கு மன இறுக்கப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அமெ ரிக்க உளவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர், அமெரிக்க வாழ் தமிழர் கார்த்திக் ராஜாராம் தனது குடும்ப உறுப்பி னர்களை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்க பங்குச்சந்தை படு வீழ்ச் சியடைந்ததே இதற்கு கார ணம் ஆகும்.
உளவியல் அமைப்பின் உறுப்பினரான டாக்டர் காதரின் நோர்டால் கூறு கையில், கடந்த 30 ஆண்டு களில் பணம் மற்றும் பொருளாதார பிரச்ச னைகளில் அமெரிக்கர்கள் இத்தகைய மன இறுக்க நிலையை அடைந்த தில்லை.
தற்போதைய நிதி நெருக் கடி பிரச்சனையில் அமெ ரிக்கர்கள் அதிகபட்ச அளவு, மன இறுக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றார்.
நிதி நெருக்கடியில் தவிக் கும் பலர் மன நல மருத்து வர்களின் உதவியை நாடி யுள்ளனர். பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் மனைவி, குழந்தைகளுடன் வழக்கம் போல பேச முடியாமல் மன இறுக்கம், அதிக பயம் ஆகியவற்றுடன் பீதியுடன் உள்ளனர்.
அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள பெரும் நிதி நெருக் கடிக்கு சிக்கியுள்ள அமெ ரிக்கர்களில் 48 சதவீதம் பேர் மன இறுக்க பிரச்ச னையை தவிர்க்க அதிகம் சாப்பிடுபவர்களாகவோ அல்லது ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடுபவர்க ளாகவோ உள்ளனர். 39 சதவீதம் பேர் வழக்கமான உணவு சாப்பிடுவதை தவிர்த்துள்ளனர். 18 சதவீதம் பேர் மதுப்பழக்கத்திற்கும், 10 சதவீதம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாகியுள்ளனர்.