இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளதன் தொடர்ச்சியாக, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகளின் செயலரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவ்வாறான குழுவொன்றின் எவ்வகையான நியமனமும் இலங்கையை ‘அவசியமானதும் பொருத்தமானதுமான நடவடிக்கையை எடுப்பதற்கு’ தள்ளும் செயல் என்று ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு எந்த வகையிலேனும் பொறுப்பேற்கப்படவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது.
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தாலும் அத்துடன் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளாலும் போர்க்கால குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை, பான்கீ மூன் குறிப்பிடத்தக்களவு மென்மையான இராஜதந்திரப் போக்கையே கொண்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் நிராயுதபாணிகளாக உள்ளவர்களை சுட்டுக் கொல்வதைக் காட்டுவதாக வெளியான வீடியோ காட்சிகள் குறித்து பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென, சட்டத்துக்குப் புறம்பான கொலைச்சம்பவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலரின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ட்டன் கோரிக்கை விடுத்திருந்த போது, அல்ஸ்ட்டன் சுதந்திரமாக செயற்படுகின்றார் என பான்கீ மூன் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் விடயங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கவேண்டியுள்ளதாக ஐநாவின் தலைமைச் செயலர் இலங்கை அரசிடம் கூறியுள்ளதாக பான்கீமூனின் பேச்சாளர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி அறிவிக்கப்பட்டவுடனயே தாமதமின்றி கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ, இந்த திட்டத்தை அடிப்படையற்றதுடன் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.
இவ்வாற நடவடிக்கை எதுவும் போரினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகள் தொடர்பில் எடுக்கப்படவில்லையெனவும் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சில அரச சார்பற்ற நிறுவனங்களாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாலுமே சுமத்தப்பட்டுவருவதாகவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசுதுறைச் செயலகத்தினால் கடந்த அக்டோபரில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் ஏற்கனவே குழுவொன்று ஆராய்ந்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மூன்று தசாப்தங்கள் வரை நீடித்த இனப்பிரச்சனைப் போர், அங்கு மனித உரிமைகளுக்கு பெரும் சாபக்கேடாகியுள்ள நிலையில், இந்தப் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுகின்றது.
அங்கு இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க்கால குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமென ஐ.நாவும் இலங்கை அரசும் கடந்த மே மாதத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கம் அதன்படி செயற்படவில்லையென்பது இலங்கை அரசு மீதான விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
BBC.
“According to Indian media reports, she will “push for a political settlement of the vexed ethnic issue between the Sinhalese and Tamils”. Observers have also noted that Rao’s visit comes in the backdrop of External Affairs Minister, S.M. Krishna, noting in Rajya Sabha that India had stressed to the Sri Lankan government “the necessity” of reaching a political settlement acceptable to all the communities including the Tamils”. – Rajan Philips
There is another matter, a growing social problem in Jaffna, which the Indian visitor should admonish Colombo officials about. The end of the war has turned Jaffna into an object of curiosity. Large numbers of people from the south have been visiting Jaffna, partly to visit temples but mostly to see what the people of Jaffna look like, post-LTTE. In the absence of proper facilities to accommodate them, the southern tourists are turning the town’s few public spaces into makeshift tourist camps. Their curious eyes apparently do not spare even the privacy of homes. Young girls riding bikes are helpless targets of vulgar whistling and eve-teasing by male tourists. There could be backlash if these indiscretions go unchecked, and people will get hurt. Jaffna has gone through enough. It can at least be spared new insults while it struggles to recover from old injuries.
http://transcurrents.com/tc/2010/03/nirupama_rao_in_colombo.html
“மேலும், தற்போது இலங்கையின் மிகப்பெரும் கொடையாளி நாடாக சீனா உள்ளதாலும், பாரிய முதலீடுகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், எந்நேரமும் இராணுவ மயமாக்கப்படக் கூடிய எண்ணெய்குதங்களைக் கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகம் முதற்கொண்டு இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் சுற்றை மியான்மார் தொடங்கி கடல் பாதையை ஆக்கிரமித்து வரும் நிலையில், இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் செய்திகள் வரும் நிலையிலும், இந்தியா எந்நேரமும் 80களின் அனுராதபுர படுகொலைகளையோ, மன்னார் இரயில் தாக்குதலையோ, சாவகச்சேரி போலிஸ் நிலைய தாக்குதலையோ தொடரலாம். இவ் சீன அச்சுருத்தல்களுக்காகவே தற்போது கடுமையான பேச்சு வார்த்தைக்கு முன்பு இலங்கைத் தூதுவராக இருந்த, இந்திய வெளிவிவகார செயலர் நிருபாமா இராவை அனுப்பியுள்ளார்கள். மற்றும்படி ஈழத்தமிழருக்காகவோ, 13வது சீர்திருத்த சட்டம் அமுலாக்கப் பட வேண்டும் என்ற உணர்வில்லோ அல்ல.” – Posted on 03/05/2010 at 4:09 pm
– https://inioru.com/?p=11058
மூன்று பேர்கொண்ட தூதுக்குழுவினருடன் சனிக்கிழமை (நேற்று) இரவு 10.30 மணியளவில் கொழும்பு,கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மூன்று நாள் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு கால்பதித்த முன்னாள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானியும் (2004-2006) தற்போதைய இந்திய வெளிவிவகாரச்செயலாளருமான நிரூபமா இராவ் இன்று பேராதனை ஆங்கில கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும், இந்தியா – இலங்கை இடையே ஆங்கில உயர் கல்வி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் அவர் அங்கு பங்கு கொள்ளவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எச்.எச்.ஆரியதாச தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
இக்கல்லூரி இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (ஆதாரம் ANI)
மேலும், இவ்விஜயத்தின்போது இன்று காலை 8.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இச்சந்திப்பில் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இச்சந்திப்பு ஆங்கிலக் கல்வித்துறையில் முன்னேற்றகரமான நடவடிக்கை ஒன்றுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். __
t
அதே வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட, இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் மகிந்த இராஜபக்கஷவுடனும் பேச்சுவார்த்தையில் (கடுமையான தொனியில்) ஈடுபடுவாரெனவும் எதிபார்க்கும் நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
1950 ம் ஆண்டு டிசம்பர், 6ம் திகதி கேரளாவில் பிறந்து, இந்திய வெளிவிவிவகார சேவையில் 1973இல் இணைந்து கொண்ட நிரூபமா இராவ் அவர்கள் வாஷிண்டனிலும் (October 1993 to October 1995, Minister for Press Affairs), மொஸ்கோவிலும் (Deputy Chief of Mission, Moscow between June 1998 and August 1999) உள்ள இந்திய தூதுவராலயங்களில் முக்கிய பதவிகில் இருந்ததுடன், இதற்க்கு முன் இந்தியத் தூதுவராக சீனாவில் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நிரூபமா ராவ் பற்றி மேலும் அறிய:
http://www.flickr.com/photos/menik/3355062233/
http://en.wikipedia.org/wiki/Nirupama_Rao

– அலெக்ஸ் இரவி
மேலும் நிரூபமா இராவ் பற்றி மேலும் அறிய:
http://www.flickr.com/photos/menik/3355062233/
http://en.wikipedia.org/wiki/Nirupama_Rao
நிருபமா ராவ் இலங்கையில் தூதராகக் கடமையாற்றிய பின்பே சீனாவுக்கு அனுப்பப்பட்டார்.
இங்கு அவரது நடத்தை மிகவும் அதிகாரத்தன்மைஉய்டையதாயிருந்ததென்ற எண்ணம் பரவலாகியிருந்த்தது.
இந்திய இங்கு பொருளாதர ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. இந்திய மூலதனம் இங்கு வலுப்பெற்று வருகிற சூழலில் இந்தியா அதற்குக் கேடாக எதுவும் செய்யாது.
இலங்கையில் சீன முதலீடு அற்பமனது. சீன உதவி 1970களிலிருந்தே வலுவாக இருந்து வருகிறது. சீனாவுக்கு எந்த அயல்நாட்டிலும் ராணுவத் தளங்களோ படைகளோ இல்லை. சீனா எந்த நாட்டின் உள் அலுவல்களிலும் குறுக்கிட்டதில்லை. குறுக்கீடுகளை ஏற்றதுமில்லை. இதை மறந்து சுற்றி வளைப்புப் பற்றிப் பேசுவதில் அர்தமில்லை.
சீனா குறுக்கிடுமானால் அதைநாம் வலுவாக எதிர்க்க வேண்டும்.
ஆனால் உண்மையான மிரட்டல் இந்தியாவும் மேற்குலகுமே (முக்கியமாக அமெரிக்கா).
சீனாவைக் காட்டிக் கவனத்தை திசை திருப்பும் முற்சிகள் பற்றி எச்சரிக்கை அவசியம்.