நாவற்குழியிலுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிய்லேயே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு புதிதாகவரும் சிங்களக் குடியேற்ற வாசிகள் தற்காலிகமாகத் தங்கும் மடம் ஒன்றிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள குடியேறிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் காரில் சென்ற சிலர் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இச் செய்தியின் பின் புலம் பெயர் பிழைப்புவாதிகள் அடுத்தகட்ட ஈழப் போராட்டம் ஆரம்பித்துவிட்டது போன்று ஆர்ப்பரித்துக்கொள்கிறார்கள். முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கை அக்கடுப்பாட்டைப் பேணுவதற்காகவும், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உயிர்க்கும் எழுச்சிகளை அடக்குவதற்காகவும் இத் தாக்குதலை இராணுவமே திட்டமிட்டு மேற்கொண்டதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது. புலம் பெயர் நாடுகளின் பிழைப்பு வாதிகள் ஈழப் போராட்டம் ஆரம்பித்துவிட்டதாக மீண்டும் பண வசூலிப்பில் இறங்கினாலும் வியப்பில்லை.
நாவற்குழித் தாக்குதலும்
சிங்களத்தின் சதியும் !!!
நீண்ட நாள் எந்த மின் அஞ்சலும் அனுப்பாத விளம்பர வியாபார ஊடகம் ஒன்று நேற்று இரவோடு இரவாக பரபரப்பு செய்தி போட்டு குறும் செய்திகள் அனுப்பி மீட்டரை ஓடவைக்கும் முயற்சியில் இறங்கி விட்டது .
இலண்டன் டாக்குத்தர் வீட்டில் “சிவலிங்க” வாயில் கூழ் வடிந்த கதை கனபேருக்கு தெரியாது . அரசியல் அவிலாளர்கள் பலர் சிவபெருமான் பக்தர்களாக இருப்பதும் கனபேருக்கு தெரியாது.
இந்த விடயம் விபரீதமானால் சிவ பக்தர்களான இலன்டன் கந்தையாக்களும் காரணமாயிருக்கலாம் .
1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் காலத்தில் நாச்சிமார் கோவிலடியில் இரு பொலிசாரை சுட்டதை சட்டாக வைத்து சிங்களம் ஆடிய அழிப்பின் ஆரம்பம் தான் யாழ் நூலக எரிப்பு .
சிறந்த வீரனுக்கு அழகு சண்டைக்கு போவதல்ல. சண்டைக்குப் போபவன் எல்லாம் வீரனும் அல்ல .
தன் வலிமையும் மாற்றான் வலிமையும் ஒப்பிட்டு பார்த்து தகுந்த நேரத்தில் சண்டைக்கு போபவன் தான் உண்மையான வீரன்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.(குறள் 471)
மு.வ உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க
1981 தேர்தல் வன்முறையை சாட்டாக வைத்து யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றையும் , 1980 இலேயே திட்டமிடப் பட்ட இனக்கலவரத்தினை 1983 இல் ஜே.ஆர் எப்படி நிறைவேற்றினார் என்ற வரலாற்றையும் புரிந்து கொண்டால் இன்னொரு அழிவை எற்படுத்த சிங்களத்துக்கு வாய்ப்பான காரியங்களை நாம் செய்யாதிருக்க உதவியாக இருக்கும் .
அன்றைய அரச அதிபராக இருந்த டாக்டர் தேவனெசன் நேசையா கடந்த வாரம் சன்டே லீடரில் இந்த சிங்கள சதி பற்றி விரிவாக எழுதி உள்ளார் .
மாவட்ட சபை தேர்தல் வன்முறையை சிங்களம் எப்படி நூலக எரிப்பாக தனது இலபத்துக்கு எற்ப திசை திருப்பியது என்பதை நாம் புரிந்து கொண்டால் நல்லது .
சிங்களம் நடத்திய அந்த திசை திருப்பலை தேவனேசன் நேசையாவின் வரிகளிலேயே பாருங்கள்.
A witness statement
by
ex Government Agent of Jaffna
English&Tamil version
“JR Jayewardene Told AJ Wison and Neelan Tiruchelvam of an Anti-Tamil Pogrom Being Planned Three Years Before July 1983″
1980 காலப்பகுதிஎலேயே 1983 இனக்கலவரம் திட்டமிடப்பட்டுக் கொண்டிருந்தது அதனை 1980 காலப்பகுதியிலேயே ஜனாதிபதி ஜெயவர்த்தனா நீலன் திருச்செல்வத்திடமும் , ஏ .ஜே .வில்சனிடமும் தெரிவித்திருந்தார் .
3 August 2013, 4:39 pm
by
Dr.Devanesan Nesiah
BJ72212
————————————————————————————————————
I was GA and District Secretary Jaffna at that time, and was not directly a victim of the pogrom, but was very much involved with the care of around 60,000 victims who moved into Jaffna in the days and weeks following the pogrom. But that is not all.
நான் அப்பொழுது யாழ் அரச அதிபராக இருந்தேன் . இனக்கலவரத்தால் நான் பாதிக்கப்படவில்லை . ஆனால் இனக்கலவரத்தை தொடர்ந்து யாழ் வந்த பாதிக்கப்பட்ட 60 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பராமரிக்கும் விடயங்களில் நேரடியாக சம்மந்தப்பட்டிருந்தேன் .
————————————————————————————————————-
My story starts earlier, around 1980, during the time that I was posted to the Sri Lanka Institute of Development Administration. I had an unexpected visit from Prof. A. J. Wilson and Dr Neelan Tiruchelvam. I did not know it then, but the pogrom was already in the making.
எனது கதை இனக்கலவரத்துக்கு முந்திய 1980 அண்மித்த காலத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. அப்பொழுது நான் சிறீலங்கா அரசின் அபிவிருத்தி நிர்வாக திணைக்களத்தில் வேலை செய்தேன் . பேராசிரியர் ஏ .ஜே .வில்சன் மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோர் எதிர்பாராத விதமாக என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள் –
1983 இணக்கலவரத்துக்கான திட்டங்கள் 1980 இலேயே மேற்கொள்ளப்பட்டு வந்து கொண்டிருப்பதை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை .
————————————————————————————————————-
The objective of the visit of Wilson and Neelan was to inform me that the island-wide District Development Council (DDC) elections were likely to be held soon, and that I was likely to be posted as the Government Agent and District Secretary of Jaffna immediately after those elections.
விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடை பெற இருக்கின்றது . அதன் பின் என்னை யாழ் மாவட்ட அரச அதிபராகவும் , மாவட்ட செயலாளராகவும் நியமிக்க ஜே.ஆர் திட்டமிட்டிருக்கின்றார் என்பதை சொல்லவே பேராசிரியர் வில்சன் மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோர் என்னைச் சந்திக்க வந்திருந்தனர் .
———————————————————————————————————–
They were keen that I should accept the appointment and help to develop the Jaffna DDC as a model for all others. I expressed my opinion that the DDC scheme provided for little or no devolution and that any decentralization was to the District Minister, U. B. Wijekoon, an admirable man but who was appointed by, and answerable to, the President and not to the District Councils.
அந்த நியமனத்தை நான் எற்க வேண்டும் என அக்கறையுடன் இருந்த அவர்கள் யாழ் மாவட்ட அபிவிருத்தி சபையை மற்றைய பிரதேசங்களுக்கு ஒரு முன் மாதிரியாக்கிக் காட்ட வேண்டும் என்றும் விரும்பினார்கள் .
மாவட்ட அபிவிருத்திச் சபையில் எந்த அதிகார பரவலாக்கமும் இல்லை என்பதையும் , அங்கு ஏதாவது அதிகார பரவலாக்கம் இருக்கும் என்றால் அது மாவட்ட அமைச்சருக்கே(மிக நல்ல மனிதனான விஜயக்கோனுக்கு மட்டுமே ) உண்டு எனவும் ,
அவர் கூட ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவராகவும் , ஜனாதிபதிக்கு பதில் அளிக்க வேண்டியவராகவும் இருக்கின்றாரே அன்றி மாவட்ட சபைக்கு அல்ல என்ற எனது
கருத்தைத் தெரிவித்தேன் .
———————————————————————————————————–
They agreed, but said that the President had promised them that if the scheme proved to be viable, substantive powers would be devolved to the District Councils. That was why the Tamil leaders were keen that I should be Jaffna’s Government Agent and District Secretary.
I asked them if they believed in that promise.
அவர்கள் எனது மேற்படி கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் . ஆனால் , மாகாண சபைத் திட்டம் நடை முறைப் படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தால் , மேலும் அதிகாரங்களை வழங்க முடியும் என ஜனாதிபதி ஜெயவர்த்தனா தமக்கு உறுதி அளித்துள்ளதாக அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள் . அதனால் தான் தமிழ்த் தலைவர்கள் என்னை யாழ் அரச அதிபராகவும் யாழ் மாவட்ட அமைச்சராகவும் பதவி எற்க வேண்டும் என விரும்பினார்கள் .
ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் அந்த உறுதி மொழியை நம்புகின்றீர்களா என நான் கேட்டேன் .
————————————————————————————————————
They confessed that they too had reservations, but that in addition to the unconvincing carrot of future devolution, the President had referred to a compelling stick in the form of a pogrom planned by unknown persons, of which the President came to know of.
எனது சந்தேகம் நியாயமானது என்பதனை ஏற்றுக் கொண்ட அவர்கள் , எதிர்காலத்தில் கிடைக்கும் என சொல்லப்படும் அந்த அதிகார பகிர்வு என்ற இனிப்பான செய்தியை விட , மேலும் ஒரு மிக முக்கியமான நிர்ப்பந்திக்கும் அச்சுறுத்தல் ஒன்றையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தமக்கு தெரிய வந்துள்ளதாக சொன்னதாகவும் , அது இனம் தெரியாத நபர்கள் இனக்கலவரம் ஒன்றுக்கு திட்டமிடுகின்றார்கள் என்பதுமாகும் என்றார்கள் .(குறிப்பு :-இது சொல்லப்பட்டது 1980 இல் கலவரம் நடந்தது 1983 இல்)
———————————————————————————————————–
He had suggested that the way to avert the pogrom was to sustain an ongoing political partnership between the Sinhalese and Tamil leaders. In the circumstances, I agreed to accept the appointment if and when I received it.
தமிழ் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் இருக்கின்றார்கள் என்ற தோற்றப்பாடு இருந்தால் மட்டுமே இனக்கலவரத்தைத் தடுக்க முடியும் என ஜெயவர்த்தனா தெரிவித்திருந்தாராம் . அப்படியான சூழ்நிலை இருக்குமானால் நியமனக் கடிதம் வரும் பொழுது நியமனத்தை ஏற்க நான் தயார் எனத் தெரிவித்தேன் .
————————————————————————————————————–
Some months later, some tragic events occurred in Jaffna on the eve of the scheduled DDC elections. Two senior ministers, Gamini Dissanayake and Cyril Matthew, had arrived, presumably to secure the election of pro-government candidates by hook or by crook. The Tamil militant groups, who were at that time working together as one, killed two pro-government candidates and two policemen.
சில மாதங்களின் பின் மாகாண சபைத் தேர்தல் நடை பெறுவதற்கு முதல்நாள் ஒரு துக்கரமான சம்பவம் நடைபெற்றது . காமினி திசநாயக்கா , சிறில் மத்யூ ஆகிய இரண்டு மந்திரிகள் யாழ் வந்திருந்தார்கள் . “எந்த வகையிலும்” அரச சார்பு வேட்பாளர்களை வெற்றி பெறவைக்கவே அவர்கள் வந்திருப்பதாக சொல்லப்பட்டது . அன்று இணைந்து செயல்பட்ட தீவிரவாத இளைஞர்கள் இரண்டு பொலிசாரைச் சுட்டுக் கொன்றார்கள் .
————————————————————————————————————-
The regular police were under the direction of the highly respected D.I.G. Mahendran. But after the killings, a large number of police reservists arrived, taking orders from another D.I.G. sent specifically to deal with the militant groups. These reserve policemen went on a rampage, burning down the precious Jaffna Public Library with 90,000 manuscripts, highly valued by all of Jaffna.
மிக மதிப்பு மிக்க உதவிப் பொலிஸ் மா அதிபர் மகேந்திரன் தலைமையில் கடமையில் இருந்த சாதாரண பொலிசார் இருந்தனர் . ஆனால் கொலைச் சம்பவம் நடை பெற்றபின் பெருமளவிலான ரிசேர்வ் பொலிசார் இன்னொரு உதவிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொண்டு வரப்பட்டனர் .தீவிரவாதிகளைக் கையாள என அவர்கள் கொண்டுவரப்பட்டனர் . அந்த பொலிசார் அட்டகாசம் புரிய ஆரம்பித்தனர் . மிக மதிப்பு பெற்ற யாழ் நூல் நிலையத்தை எரித்தனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின .
———————————————————————————————————–
They also burned down several other buildings and killed or attempted to kill several persons, including the popular MP for Jaffna, V. Yogeswaran and his wife. Fortunately, the Yogeswarans escaped, but much later, under changed political situations, they were killed by the LTTE along with many others.
அந்த ரிசர்வ் பொலிசார் பல கட்டிடங்களை எரித்து நாசமாக்கினார்கள் , பலரைக் கொலை செய்தார்கள் , பலரைக் கொலை செய்ய முயன்றார்கள் , அன்று பிரபலமாக இருந்து யாழ் எம்பி யோகேஸ்வரனையும் அவரது மனைவியையும் கொலை செய்ய முயன்றார்கள் . ஆனால் அவர்கள் அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பினார்கள் , பின்னர் மாறுபட்ட அரசியல் சூழல் ஒன்றில் வேறு சிலருடன் அவர்கள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள் .
————————————————————————————————————–
It does not appear that either Cabinet Minister was responsible for these killings, but when the officer in charge of the Navy in Jaffna (Sandagiri) attempted to save the public library by dousing the flames, it is believed that they ordered him to desist so as to avoid conflict between the Navy and the police.
கொலைச் சம்பவங்களுக்கு அந்த மந்திரிகள் (காமினி திசநாயக்கா , சிறில் மத்யூ) காரணமாகினர் என்பதற்கு ஆதாரம் இல்லாத பொழுதும் கடற்படைப் பொறுப்பதிகாரியான சந்திரகிரி எரியும் நூல் நிலைய தீயை அணைக்க முற்பட்ட பொழுது பொலிசாருடன் மோதல் எற்படும் என எச்சரித்த மந்திரிகள் தீ அணைத்தலில் இருந்து பின்வாங்குமாறு கட்டளையிட்டனர் என நம்பப் படுகின்றது .
————————————————————————————————————–
Excellent record
Our election laws and procedures as well as our record of conducting elections had been excellent up to the1981 DDC elections, which marked the 50th anniversary of universal adult franchise, introduced to Sri Lanka by the Donoughmore Commission in 1931.
வாக்குரிமை வழங்கிய 1931 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த டொனமூர் சட்டத்தின் 50 ஆவது ஆண்டான 1981 வரை மிக ஒழுங்காக இருந்த தேர்தல் நடை முறை விதிகள் 1981 மாவட்ட தேர்தலின் பொழுது முழுதாக மீறப்பட்டன .
————————————————————————————————————
Sadly, the 1981 Jaffna DDC elections were blatantly rigged, with the meticulously trained polling staff dismissed when they came to collect ballot boxes and ballot papers and replaced with untrained and unruly personnel brought in from outside the district by the two cabinet ministers.
துயரமான சம்பவம் என்னவென்றால் 1981 மாகாண சபைத் தேர்தல் அப்பட்டமாக மோசடியாக நடை பெற்றது .
பயிற்றப்பட்ட தேர்தல் உத்தியோகத்தர்கள் வாக்குச் சீட்டுக்களையும் , வாக்குப் பெட்டிகளையும் சேகரிக்க வரும் பொழுது இடை நிறுத்தம் செய்யப்பட்டார்கள் .
அந்த இரண்டு மந்திரிகளாலும் (காமினி திசநாயக்கா , சிறில் மத்யூ) வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பயிற்றப்படாத கட்டுப்பாடற்வர்களால் வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுக்களும் மாற்றப்பட்டன .
————————————————————————————————————-
The then Government Agent went along with the rigging and, under the direction of the two cabinet ministers, signed the letters sacking the trained polling staff and appointing untrained, unruly personnel in their place.
அன்று யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர் மேற்படி மந்திரிகளின் கட்டளைகளுக்கு அமைய (காமினி திசநாயக்கா , சிறில் மத்யூ) மோசடிகளைத் தொடர்ந்தார் . பயிற்றப்பட்ட தேர்தல் உத்தியோகத்தர்களை வேலை நீக்கம் செய்யும் கடிதங்களை வழங்கியதுடன் பயிற்றப்படாத ,
கட்டுப்பாடற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வந்தார் .
—————————————————————————————————————
This was blatantly unlawful, because under our election laws, it was the Government Agent who was the returning Officer, and, in election matters, outranked everyone else, including Cabinet Ministers.
To his credit, the young elections officer, Jayaratnam, after discussing the matter with the Commissioner of Elections in Colombo, refused to cooperate.
மந்திரிகளின் கட்டளைக்கு அமைய செயல்பட்ட அரச அதிபரின் இந்த செயல்பாடு அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறலாகும் . தேர்தல் விதிகளின் படி அரச அதிபர் தான் தலைமை தேர்தல் அதிகாரியாகும் அவர் மந்திரிகளை விட அதிக அதிகாரம் உடையவராகும் . அவர் மந்திரிகளின் கட்டளையை அமுல் படுத்தியது அப்பட்டமான சட்டமீறலாகும் . தேர்தல் ஆணையாளரைத் தொடர்பு கொண்ட ஜெயரட்ணம் என்ற தேர்தல் அதிகாரிமட்டும் அத்தகைய கட்டளைகளை
ஏற்க மறுத்தார் அவர் பாராட்டுக்குரியவராகும் .
————————————————————————————————————-
The District Minister too was not party to the rigging. In the event, the rigging of the election was so badly bungled that the Federal Party won all the seats and Chairman Nadarajah became the head of the DDC. All this I learnt a few days later when I took over as Government Agent and District Secretary.
இந்த தேர்தல் மோசடியில் மாவட்ட அமைச்சரும் ஈடுபடவில்லை . தேர்தல் மோசடிகள் நடைபெற்ற விதம் மிக குழப்பகரமாக நடை பெற்றதால் தமிழரசுக் கட்சி அனைத்து இடங்களையும் கைப்பற்றிக் கொண்டது .
செயர்மன் நடராஜா மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவரானார் . சில நாட்களில் அரச அதிபராகவும் மாவட்ட செயலாளராகவும் நியமனம் பெற்று பதவி ஏற்ற பொழுது இவ்வளவு விடயங்களையும் நான் அறிந்து கொண்டேன் .
————————————————————————————————————
I consulted hundreds of public servants and civil society leaders, all of whom agreed on the basic facts.
My first few weeks in Jaffna were spent in day-to-day administration, in getting to know the Secretariat staff and Members of the Council and in setting up the trappings of the DDC (Council chambers, flag, mace, etc.) while coping with recurrent violence involving the armed forces, police, Tamil militant groups, and the public.
நூற்றுக் கணக்கான அரச உத்தியோகத்தர்களையும் , சமூக தலைவர்களையும் சந்தித்து பேசிய பொழுது அவர்கள் மேலே சொன்ன விடயங்கள் அடிப்படையில் உண்மையானவை என உறுதிப் படுத்தினர் .
அடுத்த சில வாரங்கள் ,இராணுவத்தினருக்கும் , பொலிசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் , பொது மக்களுக்கும் இடையே அடிக்கடி நடை பெற்ற வன்முறைகளுக்கு மத்தியில் , அரசாங்க அலுவலக
உத்தியோகத்தர்களை அறிமுகம் செய்வதிலும் , மாவட்ட செயலக அதிகாரிகள் , உறுப்பினர்களுடன் அறிமுகமாவதிலும் , மாவட்ட செயலக நிர்வாக நாளாந்த செயல்பாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டேன் .
————————————————————————————————————-
I established a practice of visiting the scene of each incidence of major violence as quickly as possible, visiting the casualties at the scene of the violence or in hospital, together (whenever possible) with the District Minister and the Chairman of the DDC. This helped to contain the violence. I also recorded and followed up on each of hundreds of complaints of political violence.
குறிப்பிடத் தக்க அசம்பாவிதங்கள் நிகழும் எல்லா இடங்களுக்கும் நேரடியாக சென்று பார்வையிடும் பழக்கத்தை நான் கொண்டிருந்தேன் .
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை சம்பவ இடத்தில் அல்லது வைத்திய சாலையில் மாவட்ட அமைச்சருடனும் , மாவட்ட அபிவிருத்திச் சபை தவருடனும் அந்த இட ங்களுக்கு சென்றுவந்தேன் .
வன்முறையை கட்டுப்படுத்த உதவினேன் . பல நூற்றுக் கணக்கான அரசியல் வன்முறைகள் இடம் பெற்றன அந்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்தேன் .
————————————————————————————————————
These practices not only enabled me to get to know many of those involved, voluntarily or involuntarily, on all sides, but also helped to build up goodwill, which proved to be critically important throughout my tenure in Jaffna and, in particular, in the events relating to the July 1983 pogrom and consequent in-migration of over 60,000 IDPs into Jaffna.
இந்த நடவடிக்கைகளால் தொண்டர் அடிப்படையிலும் வேறு வழிகளும் உதவிய எல்லா தரப்பினருடனும் பழகும் வாய்ப்பையும் அவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று நல்லெண்ண உறவை என்னால் ஏற்படுத்த முடிந்தது . இந்த அறிமுகம் யாழ்பாணத்தில் நான் பதவி வகித்த காலத்தில் பெரும் உதவியாக இருந்தது . அத்துடன் குறிப்பாக 1983 இனக்கலவரத்தின் பொழுது அகதிகளாக வந்த 60 ஆயிரம் பேர்களை பராமரிப்பதில் இந்த அறிமுகம் பெரிதும் உதவியாக
இருந்தது .
————————————————————————————————————-
I took particular care to build up and maintain good relationship with the leaders of the armed forces. Happily, I had the unstinted cooperation of the public services in Jaffna and also the goodwill of both the District Minister, U. B. Wijekoon, and DDC Chairman Nadarajah.
இராணுவ தலைவர்களுடன் உறவை ஏற்படுத்துவதிலும் அதனை நெருக்கமாக பேணுவதிலும் நான் குறிப்பாக அக்கறை காட்டினேன் . யாழ்பாணத்தில் உள்ள பொது சேவை அதிகாரிகளுடனும் , மாகாண அமைச்கார் யு.பி .விஜயக்கோனுடனும் , மாவட்ட அபிவிருத்தி சபை செயர்மன் நடராஜா வுடனும் எனக்கு குறைபாடற்ற தொடர்பாடல் இருந்தது .
————————————————————————————————————-
In the meantime, Chairman Nadarajah and all Council members, disillusioned with the lack of devolution, had decided to resign, effectively putting an end to the Jaffna DDC. Cabinet Minister Gamini Dissanayake heard of this and flew in to dissuade Chairman Nadarajah.
அதே நேரம் எந்த அதிகார பரவலாக்கமும் அற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டம் தொடர்பாக செயர்மன் நடராசாவும் , மாவட்ட சபை உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தனர் . மந்திரிசபை உறுப்பினர் காமினி திசநாயக்கா இதனை அறிந்து விமானமூலம் வந்து செயர்மன் நடராஜாவை இராஜினாமா முயற்சியை கைவிட வைக்க முயன்றார் .
————————————————————————————————————
Minister Dissanayake expressed agreement on the need for real devolution and invited Chairman Nadarajah to Colombo for talks on this matter with President Jayawardene, Prime Minister Premadasa, Minister Lalith Athulathmudali, and others. Chairman Nadarajah insisted that S. Sivathasan, Director of Planning for Jaffna, and I should participate in these discussions and this was agreed to.
அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தையும் அது தொடர்பாக ஜனாதிபதி ஜெயவர்த்தனா, பிரதமர் பிரேமதாசா , மந்திரி லலித் அத்துலத் முதலி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்த கொழும்பு வருமாறும் செயர்மன் நடராஜாவை மந்திரி திசநாயக்கா அழைத்தார் . திட்டமிடல் ஆணையாளரையும் என்னையும் தன்னுடன் வருமாறு செயர்மன் நடராஜா வலியுறுத்தியதைத் தொடர்ந்து அதற்கு உடன்பாடு காணப்பட்டது .
————————————————————————————————————-
The three of us made several trips to Colombo and had many meetings. We were told again and again that much more money would be allocated to the Jaffna DDC and to DDC Members than hitherto, and that there would be major development projects for Jaffna, such as very substantial expansion of Jaffna Hospital, a well-equipp
To me Navatkuli will always means where that Manoharan got gunned down with his mother by Indian Army. He was a very handsome Peradeniya Agricola. He married my student Vasuki. His brother Dr. Narendran is a Peradeniya Veterinary Surgeon. He also wrote to the late Shri Rajiv Gandhi. All of us can do only so much. We should not try to bite more than what we can swallow.
Well said Chadran,
Mahatma Ghandhi said that ‘one need to have lots of courage to walk away from violence’.
Only cowards go for personal physical fights.
Subash Chandrabosh said Ghandhi was a wimp.
Suriya that was right then. Bengali and Gujarathi. Then Subash was ready to join hands with the Germans. He can still do that today. The original five Indian Institutes of Technology came into being with aid from Germany. They were churning out graduates for American Graduate Schools. British are still big.
I thought each campus was sponsored by different Western countries at its inception, now they have 16 of them. One in Delhi ranks higher than the others. Some of the top grads from there are amazingly brilliant folks.
Suriya I think you are right. Good to know that the number of IIT have grow to 16. Dlhi being the Central – Federal Capital has more prominence. They were also good in mathematics. Madras – Chennai was top in sending graduates to USA. Theymad eit on their own anyway.
If you want to be a good engineer you have to be a good mathematician too but the converse is not true.
நாவற்குழித் தாக்குதல் சிங்களம் திட்டமிட்டு செய்யும் வேலை
என்பதை அனைத்து ஊடகங்களும் வெளிப்படுத்த வேண்டும் .
தமிழர்கள் மீண்டும் வன்முறையில் என்ற பிரச்சாரத்துக்கு நாம் வழி விட்டால் அது சிங்கள சதிக்கு பயன் படும் வேலை .
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் நடை பெற இருந்த நேரம் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .
Posted on 08/11/2013 at 10:02
/////////////Reply
சக்தி
Posted on 08/10/2013 at 20:20
இஞ்சே பாரடா ” தனிமனித சுதந்திரத்தை பற்றி யார் பேசுறது எண்டு ?தற்கொலை படை என்று ஊரவண்டை பிள்ளையளை பலி கொடுத்தவையும் ,வடை வாங்கி சாப்பிட்டு விட்டு வீடுக்காரனை சுட்டவர்களையும் , மற்றவர்களின் கருத்துக்காக அவர்களை சமாதி கட்ட வேணும் என்று வெறிபிடித்து அலையும் மொவ்லீசன் ?கொஞ்சம் நா காக்க !
இதென்ன போதையில் எழுதிய வசனமா ?
////////////////////////சொந்தப் பெயரை முழுசா போட்டு முகமூடித் தனம் பண்ணிக் கொண்டு கதையா விடுறீர். சொந்தப் பெயரை முழுசா போட்டு நீர் மகான் எண்டு கோழத் தனம் இன்றி நிரூபியும் பார்ப்பம்?
We have a long way to go to catch up with the Magna Carta or the Bill of Rights in the USA.
சொந்தப் பேரில் முதிலில் நீர் எழுதும் காணும்.
சொந்தப் பெயரோ சந்தப் பெயரோ உமக்கென்னய்யா ?குடியுரிமையா தரப் போகிறீர் ?
சும்மா விதானை வேலை பார்க்காமல் கொஞ்சம் “தனிமனித சுதந்திரத்தை” பற்றி பேசலாமே.என்னை நீர் ஒரு கரும்புலி என்று நினையுமேன்.
///////////////////Reply
சக்தி
Posted on 08/11/2013 at 15:54
சொந்தப் பேரில் முதிலில் நீர் எழுதும் காணும்.
சொந்தப் பெயரோ சந்தப் பெயரோ உமக்கென்னய்யா ?குடியுரிமையா
/////////When in doubt, make a fool of yourself. There is a microscopically thin line between being brilliantly creative and acting like the most gigantic idiot on earth. So what the hell, leap.
Cynthia Heimel
Read more at http://www.brainyquote.com/quotes/keywords/idiot.html#QFGyHLa5s5ikXKL0.99
thank you bye
சி.சந்திரமெளலிசன்
Posted on 08/12/2013 at 18:40
When in doubt, make a fool of yourself. There is a microscopically thin line between being brilliantly creative and acting like the most gigantic idiot on earth. So what the hell, leap.
Cynthia Heimel
Read more at http://www.brainyquote.com/quotes/keywords/idiot.html#QFGyHLa5s5ikXKL0.99
Mouleesan is very smart in many things.