30.01.2009.
ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்!
அரங்கக்கூட்டம்
லசந்த விக்கிரமதுகங்க நினைவாக
சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் சமூக ஊடகங்களையும் ஆதரவாளர்களையும் ஒத்துழைப்பு நல்கும்படி ‘சுழியப்பகுதி” என்னும் போரற்ற இலங்கைக்கான கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
Saturday, January 31 2009, 3:00 to 6:00 pm
Scarborough Civic Center
Scarborough (Public Transit: subway to Kennedy, then L.R.T. to Scarborough Town Centre)
சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் நினைவாக இந்தக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பெறுகிறது. சில கிழமைகளுக்கு முன்னால் அவர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். தனது இறுதியான, மரணத்தின் பின்னான ஆசிரியத் தலையங்கத்தில் அவர் “கடைசியாக, நான் கொல்லப்படுகையில் அது ஆரசாங்கத்தின் செயலாகத்தான் இருக்கும்” என்றிருக்கிறார்.
எல்லைகளற்ற பத்திரிiயாளர் அமைப்பு மகிந்த அரசும் அவரது கூட்டாளிகளும் அரச ஊடகங்களும் இந்த கொலைக்கு நேரடியாகக் குற்றம் சாட்டப்படக்கூடியவர்கள். லசந்தவின்மீதான வெறுப்பை ஊதி வளர்ப்பதற்கும் பலவகையான ஊடகங்களின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பதற்கும் காரணமாக இருந்தார்கள்.” என்று குறிப்பிடுகிறது. லசந்த பல தடவைகள் தாக்கப்பட்டு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறார். அவரது இல்லம் எந்திரத் துப்பாக்கியால் ஒரு முறை சரமாரியாகச் சுடப்பட்டது.
ஓர் நல்ல நோக்கத்துக்காக நின்று மறைந்த லசந்தவின் நினைவுக்கூட்டத்தில் வந்து தங்கள் கருத்தையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு அழைக்கிறோம்.
தமிழ் சமூகத்தின் ஊடகங்களையும் பிற சமூக கரிசனையுள்ள சமூக நிறுவனங்களையும் இவ்வழைப்பை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்.
ஆதரவைத் தெரியப்படுத்த zerozoneantiwar@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.
blog: http://warzerozone.blogspot.com/
Email: zerozoneantiwar@gmail.com
Tel: 647 878 0439