அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 7வது கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக இலங்கைக்கு நாளை செல்கிறார்.
இரு நாட்டு அயலுறவு அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இலங்கை அதிபர் ராஜபக்ச கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்தபோது இருநாடுகளும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. அது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
ஹம்பாந்தோட்ட, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லவிருக்கும் கிருஷ்னா, ஏனைய பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடலாம் எனத் தெரியவருகிறது.