மகிந்த பாசிசத்தை எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி ஆதரிக்கும் தமிழ் அரசியல் வாதிகள் தாங்கள் என மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியல் வரலாற்றில் பொறித்துள்ளவர்கள் பெயர்கள் வெளியாகியுள்ளன. தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்காக வாக்களித்த முன்னை நாள் தனி நாடு கோரும் போராளிகளான டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரும் அடங்குவர். இவர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களதும் எதிரிகள் என தம்மை உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, சில்வெஸ்திரி அலன்றின் , மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த வீ.எஸ்.ராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த முத்து சிவலிங்கம், சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஜனநாயக மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த பிரபா கணேசன், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினைச் சேர்ந்த பழனி திகாம்பரம் ஆகியோரும்,
தமிழ் பேசும் முஸ்லிம் பிரதிநிதிகள்:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பஸீர் சேகுதாவுத், ஹரிஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அப்துல் காதர், ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியொரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதம நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவி நீக்க கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது.
அவருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தனது வருமானத்துக்கும் சொத்துகளுக்கும் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குற்றப்பிரேரணையில் கையெழுத்திட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம் தற்போது வெளியாகியுள்ளன.

முன்புதான் துணைக்குழு இப்ப நக்கும்குழு மட்டும்தான்
இவர்கள் தமிழர்களா என்ன? தமிழரைக் காட்டிக் கொடுப்பவர்களைத் தமிழர் என எப்படிக் கூற முடியும்? வேணுமானால மரபணு ஆய்வு மூலம் உறுதிப் படுத்திய பின்னர் அவர்களைத் தமிழர் எனக் கூறுவதை ஏற்கலாம்! இந்த உயர் நீதி மன்ற நீதிபதியும் சிங்களவர். சிங்கள வெறியன் இராசபக்சேயின் விருப்பத் தேர்வு. இவருக்குப் பதவி கிடைத்ததே மகிந்தரின் தயவால். இவருக்குத் தமிழர் பற்றிய கவலை என்றைக்கும் இருந்தது இல்லை. இலங்கை இன்று சிங்கள பௌத்த தேசம். இதில் தமிழர் நாம் கவலைப்பட என்ன இருக்கிறது?
It will take some more time for these groups to dissappear. Sri Lanka POlice will become a truly antional outfit in the North and East. Then we can live without any fear.