தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவும், சர்வதேச சமூகமும் தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண நாடாளுமன்ற தெரிவுக்குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலந்து கொள்ள வைத்து விட்டு, 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என முன்வைக்கப்படும் யோசனைகள் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புலிகளாள் உருவாக்கப்பட்டவர்களே நீங்கள் முதலில் 13 திருத்தத்தை நாசமாக்கியவர்கள் யார் ….பயிரங்கமாக மக்களூக்கு விளக்கம் கூறட்டும் தமிழர்களின் பொது எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து தமிழ் இயக்கங்களையும், அமைதிப்படையையும் தாக்கியது தவறு என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் நிராகரித்து சிங்கள அரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச தீர்வான அந்த ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்தது தவறு என்று இப்போதாவது ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா?ஈழத் தமிழருக்கு உதவுவதற்காக முன்வந்த மறைந்த பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களை தமிழகத்தில் வைத்துக் கொலை செய்தது நீங்கள் செய்த மாபெரும் தவறுகளில் ஒன்றா இல்லையா?தமிழர்களுக்கு உதவிக்கு வந்த இந்தியாவை, அன்று தமிழர்களின் பொது எதிரியான சிங்களவர்களுடன் சேர்ந்து விரட்டி அடித்தீர்களே இன்று அதே இந்தியா உதவ வேண்டும் என்று தங்களின் விசுவாசிகள் மூலம் கோருவது வெட்கப்பட வேண்டிய விடயமா? இல்லையா?இப்படிப் பல ஆயிரக்கணக்கான கேள்விகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு பதில் கூறப்படாமல் ஆங்காங்கே அலைந்து திரிகின்றன!
இந்தியாவும், சர்வதேச சமூகமும் தாம் இலங்கையை சூறையாட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் கூறுவார்களே தவிர எமது முன்னேற்றத்தைப்பற்றி அவர்கள் ஏன் கவலைபடவேண்டும் ? இனி தமிழர் சர்வதேச சமூகத்தின் பணயக்கைதிகள் தான். எங்களுக்கென்று ஒரு செயற்பாடு அல்லது மார்க்கம் இல்லாமல் வெறுமனே அலையும்போது இதுதான் எமது முடிவு.சிவில் சமூகம் என்ன தலையாட்டி பொம்மைகளா?
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை யார்தான் ஆதரித்தார்கள் ?
ரட்ணம் கணேஷ்