ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுகளுக்கென விசேடமான அம்சங்களைக் கொண்டதான இலங்கையின் மிக உயரமான கோபுரம் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
உலகின் ஐந்தாவது உயரமான கோபுரமாக அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாமலின் திருமண நாளன்றே அக்கோபுரத்தை திறந்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“லோட்டஸ் டவர்” என்று பெயரிடப்படவுள்ள குறித்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு பேலியாகொடையில் பதினான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோபுரம் முற்றுமுழுதாக ஆடம்பர ஹோட்டலாக செயற்படவுள்ளதுடன், அதன் உச்சியில் வைபவங்களை நடாத்துவதற்கான சுழலும் மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. அம்மண்டபத்தில் குறைந்தது ஐயாயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரக் கூடியதாக இருக்கும் என்று தெரிய வருகின்றது.
உலகில் இவ்வாறான சுழலும் கோபுரங்கள் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன.
இன்னும் இரண்டொரு வருடங்களில் நடைபெறவுள்ள நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுடன் குறித்த ஹோட்டல் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களின் வரிப்பணத்தை தமது குடும்பத்தின் ஆடம்பர விடயங்களுக்காகச் செலவிடுவதில் முனைப்புக் காட்டி வரும் ஜனாதிபதி தனது மகனின் திருமண வைபவத்திற்காக நாட்டு மக்களின் பணத்தைக் கொண்டு புதியதொரு ஹோட்டல் ஒன்றையே நிர்மாணிக்கவுள்ளது தான் சர்வாதிகாரத்தின் உச்சமாக கருதப்படுகின்றது.
உலகின் பல சர்வாதிகாரிகள் இவ்வாறாக தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்து விட்டு கடைசியல் இருந்த இடத்துக்கும் சொல்லாமல் ஓட்டம் பிடித்த வரலாறுகளை உலகம் நிறையவே கண்டுள்ளது. அந்த வகையில் மஹிந்தவும் மக்களால் விரட்டப்படும் காலத்தை அவராகவே வலிந்து அழைத்துக் கொண்டிருக்கின்றார்.
நல்ல காலம் . தமிழர் பிரதேசத்தில் அதை கட்ட நினைக்கவில்லை. அடுத்த அதிர்ச்சி என்னவோ!
உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகுமா 🙂 இலங்கையில் என்ன உலகிலியே உயரமான கோபுரம் அமைத்தாலும் உங்கள் மதிப்பு எப்படியோ ,அப்படியேதான் இருக்கும்.தமிழ் இனத்தின் மேல் அப்பாவும், சித்தப்பர்களும் செய்த பாவங்களை கோபுரம் சுமக்காது, மகனே நாமல் , எதிர்காலத்தில் நீ தான் சுமக்க வேண்டி வரும்… ஆடாத ஆட்டமெல்லம்… ஆடிய மனிதர் எல்லாம்…. மண்ணுக்குள்ளே போன கதை தெரியுமா….. மல்லி நாமல்!
பல்லி சொன்னது மாதிரி சொல்லியுள்ளீர்கள்.மகிந்தவுக்கும் அவற்ற மகனுக்கும் ஆப்புத்தான்.
கள் இறக்கும் நாமலைக் காணவிலை என அப்பு புளூங்கிக் கொண்டிருந்தார்.நாமல் பனையில் ஏறீ இறங்கும் அழகே தனி.காணவில்லை என அப்பு தேடினார் இப்போது நாமலுக்கு கல்யாணம் என்றால் சந்தோசப்படுவார்.
இது தேவையா?
அந்தநால் மிக ஆவலுடன் எதிர்பார்து கொன்டிருக்கிரேன். மகிந்த ரஜபக்ச என்னும் கிட்லெர் இனி இலங்க்யில்நடதத இருக்கும் அராஜகம் எப்பொது ஒயும். ???????????????????????????????????????