பாப்பரசர் பிரான்சிஸ் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஏழைகளுக்காக பேசுவது மட்டும் என்னைக் கம்யூனிஸ் ஆக்கிவிடாது என்று பாப்பரசர் தனது நீண்ட உரையில் மீண்டும் கூறியுள்ளார். கத்தோலிக்க மதம் அதனைச் சார்ந்த முதலாளித்துவ அதிகாரவர்க்கம் பாப்பரசர் ஒடுக்கப்பட்ட மக்களுக்ககப் பேசும் போதெல்லாம் அவரைக் கம்யூனிஸ்ட் என்று குற்றம் சுமத்துகிறது. பல்தேசிய நிறுவனங்களின் நிதி மூலதனத்தால் ஆளப்படும் இன்றைய உலகில் உழைக்கும் மக்களைப் பற்றிப் பேசுவதைக் கூட கம்யூனிசம் என்று அஞ்சும் அளவிற்கு அதிகாரவர்க்கம் கிலிகொண்டுள்ளது. பாப்பரசரைப் பொறுத்தவரை சரிந்துவிழும் மதத்தைத் தூக்கி நிறுத்துவதற்கும் தொடர்ந்து மக்களை மதத்தின் பிடிக்குள் வைத்திருப்பதற்கும் கம்யூனிசத்தைத் துணைக்கழைக வேண்டிய நிலையிலுள்ளார்.
வத்திக்கானின் இழந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த பாப்பரசர் பேச்சளவிலேனும் ஏழைகளுக்காகப் சில கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கம்யூனிசம் என்பது மதத்தினுள் மக்களைக் கட்டிவைத்திருப்பதல்ல. ஒருசிலரின் உடைமையாக்கப்ப்ட்டுள்ள உற்பத்தியையும் உழைக்கும் உழைக்கும் மக்களின் உடமையாக்குவதாகும். இன்று ஒரு சில பல்தேசிய முதலாளிகள் உலகம் முழுவடும் உள்ள உற்பத்தி சாதனங்களைத் தமது உடமையாக்கிக்கொள்வதற்காகப் போர்களையும் யுத்தங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆதலால் பாப்பரசர் அவர் கூறுவது போன்றே அவர் கம்யூனிஸ்ட் அல்ல.