வன்னிப் படுகொலைகளுக்குப் பின்னான இலங்கையில் மகிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் தொடர்வதற்கான சமன்பாடு ஒன்று உள்ளது. அதனை உடைக்கும் வரையில் வேறு யாரும் மகிந்தவை அழிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. அதன் படிமுறைகள் இதோ: நான் இலங்கையைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டேன். மீண்டும் புலிகள் புலம்பெயட் நாடுகளிலிருந்து உருவாகி வருகிறார்கள். அவர்களிடமிருந்த் நான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும், ஆகவே ஆட்சியில் நிலைக்க வேண்டும். இந்தச் சமன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புலம்பெயர் புலிகள் நடந்துகொள்கிறார்கள்.
மைத்திரிபால சிறிசேன மகிந்தவிடமிருந்து ஆட்சியைப் பறிக்க வேண்டுமானால் இச் சமன்பாட்டை உடைக்க வேண்டும் என்பது அவசியமானது.
அதனை உடைக்கும் நோக்கிலேயே மைத்திரிபாலவின் பிரச்சாரங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன. தான் ஆட்சிக்கு வந்தாலும் மகிந்தவையும் அவரது குடும்பத்தையும் பாதுகாப்பேன் என்றும் புலம்பெயர் புலிகளின் கைகளில் பிடித்துக்கொடுக்க மாட்டேன் எனவும் மைத்திரிபால கூறியுள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்கள் பிரிவினைக்காகப் போராடவில்லை என்றும் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்றும் சிங்கள மக்களின் ஒடுக்குமுறைக்காகவும் நாம் குரல்கொடுக்கத் தயார் என்றும் சிங்களமக்களுக்குச் சொல்வதன் மூலமே மகிந்தவினதும் மைத்திரிபாலவினதும் பேரினவாதக் கருத்துக்களை அழிக்கமுடியும். அதுவே மகிந்தவின் வெற்றிக்கான சமன்பாட்டை மைத்திரிபால போன்ற இனவாதிகள் உள்வாங்கிக்கொள்வதைத் தடுத்து உரிமைகளை வென்றெடுகவும் முடியும். கவலைக்கிடமாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அரசியல் தலைமை இல்லை. தேசிய வியாபாரிகள் மகிந்தவின் பேரினவாதச் சமன்பாட்டை உயிர்ப்பிக்க தம்மாலான அனைத்தையும் செய்கின்றனர்.
இந்த வீடியோவில் இரண்டரை நிமிடமளவில் நோக்கவும்.
“புலம்பெயர் புலிகள்” என்று சொறியன் மைத்திரிப்பால-வே அடையாளப் படுத்த இல்லை.
சொறியன் மைத்திரிப்பால பாவித்த சொற்கள் “எல்.டி.டி -ட சம்பந்த தெமழ டயஸ்போரா” – அதாவது “புலிகளுடன் சம்பந்தப்பட்ட புலத்துத் தமிழர்” .
1. நாடு என்பது முதலாளித்துவம் வரையறுத்துள்ள எல்லை. -முதலாளிகள் சுரண்டுவதற்கான எல்லை. இதனை உடைக்க முயலும் எந்த முயற்சியும் முறியடிக்கப்படுவதை விட வேறு எதனையும் முதலாளித்துவம் அனுமதிக்காது. ஈழம் தவிர்ந்த தீர்வு என்று எரிக் சொல்ஹெம் சொன்னதும் இதுதான்.
2. அவ்வாறான தீர்வுகள் கூட எதிர்த்தரப்பு (புலிகள்) பலமாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும். புலிகளும் வேறு தீர்வுகளிற்கு முன்வராத நிலையில் எந்தவொரு முதலாளித்துவ அரசும் புலிகளை அழிப்பதைவிட வேறு நிலைக்குப் போக முடியாது. தமக்குள் முரண்பாடுள்ள உலக நாடுகள் அனைத்தும் இணைந்து புலிகளை அழித்ததும் இதனால் தான்.
3. யுத்தம் என்று வருகையில் யுத்தக்குற்றங்களை சகல அரசுகளும் சர்வ சாதாரணமாக நடைமுறைப்படுத்தும். யுத்தம் நடக்கையில் ஒரு நாடும் யுத்தக்குற்றங்கள் பற்றி வாயே திறக்கவில்லை.
4. இப்போது உலக நாடுகளில் பல இணைந்து வைத்துள்ள போர்க்குற்ற னவிசாரணை என்பது வெறும் கண்துடைப்பே. இதன் அடிப்படை தமிழ் மக்களிற்கு நீதி வழங்குவதல்ல. மாறாக இலங்கை அரசைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே. (சீனா – மேற்கு நாடுகள் இடையேயான பனிப்போர்) ஒருசிலர் தண்டிக்கப்படலாம். ஆனால் அது எதுவித மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை.
5. மகிந்தவையோ மைத்திரியையோ சோசலிச அரசுக்காக யாராவது ஆதரிப்பார்களானால் அவர்களிற்காகப் பரிதாபப்படலாம்.
6. மாறாக முதலாளித்துவத்தின் கீழ் சர்வாதிகாரமா கொஞ்சம் ஜனநாயகமா (ஒரு குடும்பம் மட்டும் அடிக்கலாமா அல்லது பலர் அடிக்கலாமா) என்பதே இப்போது நடக்கும் விளையாட்டு. பல சக்திகள் மைத்திரியை ஆதரிப்பது இதற்காகத்தான். அத்துடன் மைத்திரி வந்தவுடன் வரக்கூடிய இடைவெளியைச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்கிற நோக்கமும் தான்.