கடந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரு பதின்ம வயது சிறுமிகள் இரு காவலர்கள் உள்ளிட்ட ஏழு ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பிறகு கிராமத்தில் பொது இடத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டமை அறிந்ததே.
இந்துத்துவ வன்முறையின் அதி உயர் மனிதனான மோடி ஆட்சியிலிருக்கும் போது காவலர்களுக்கு இவை எல்லாம் சாதாரண விடையம். நான்கு போலிஸ்காரர்கள் ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்குள் வைத்து பாலியல் வன் புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் சமீபத்தில் நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சுமெர்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
நேற்று அந்த நபரை பார்க்க அவரது 35 வயது மனைவி சுமெர்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். தன் கணவரை விட்டு விடும்படி அவர் போலீஸ்காரர்களிடம் கெஞ்சினார். அப்போது சப்–இன்ஸ்பெக்டர் ராகுல் பாண்டே, அந்த பெண்ணிடம் லஞ்சம் கேட்டார்.
அதற்கு அந்த பெண் தன்னிடம் நிறைய பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் ராகுல் பாண்டே அந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அந்த பெண் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
பிறகு கைதிகள் வைக்கப்படும் அறைக்குள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று சப்–இன்ஸ்பெக்டர் ராகுல் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார். அந்த பெண் கதறிய போதும் போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற 3 போலீஸ்காரர்கள் கற்பழிப்பை தடுக்கவில்லை. அவர்களும் அந்த பெண்ணை வன்புணர்விற்கு உட்படுத்தினர்.
போலீசாரின் பிடியில் இருந்து விடுபட்ட பிறகு அந்த பெண் தன் கிராமத்துக்கு சென்று உறவினர்களிடம் இது பற்றி கூறினார். இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.