இன்றைய நாட்டின் நிலைமைகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழலைத் தோற்றுவித்துள்ளதாக சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார். ஜனநாயக நிறுவனங்கள் பெறுமானங்கள், அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றை இன்றைய சூழல் நிர்மூலமாக்கியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
குடும்ப ஆட்சி, குடும்ப சர்வாதிகாரம் போன்றன இல்லாதொழிக்கப்பட்டு ஜனநாயகமும் சுதந்திரமும் ஏற்படுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவித்த முன்னைநாள் ஜனாதிபதியின் நாட்டுமக்களுக்கான செய்தி இலங்கைத் தேர்தலில் குறித்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல், தவறான ஆட்சி முறை, சமத்துவமின்மை, அனைத்தும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என சிரச தொலைக்காட்சியில் இன்று(23.01.2010) ஒளிபரப்பான இவரின் உரையில் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் பிரச்சனை குறித்தோ, வன்னிப் போரும் அதன் விளைவுகளும் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை எனினும் தேர்தல் ஆணையாளர் தனது பதவியைத் துறக்கும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
சந்திரிகா அவர்கள் மகிந்தவால்நல்ல அனுபவம் பெற்றவர் ஆனால் மாமியார் வீட்டு உபசரிப்பை உண்மை என்நம்பும்நமது புத்திஜிவிகள்தான் புரிந்து கொள்வதாய் இல்லை.எச்சில் இலைக்காய் காத்திருக்கும் மாடுகள் போல் மகிந்த புராணம் பாடுகிறாகள்.வேப்பிலை அடிச்சு பேய் கலைக்க வேண்டும். இவர்க்லை மசூதிக்கு கூட்டிச்சென்றூ தண்ணீர் தெளீக்க வேண்டும்.மகிந்தா இவர்கள் மண்டையைநன்றாய் கழுவி விட்டார் போல.