இன்று நாடாளுமன்றத்தில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இன்று காலை நாடாளுமன்றில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீது இன்று நாடாளுமன்றில் விவாதம் இடம்பெற்று வரும் நிலையில் அவ்விவாதத்தில் உரையாற்றிய பாலித ரங்கே பண்டார மீது அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.