நாசிக்கள் காலத்தில் போப்பாக இருந்த 12 ஆவது பயஸ் அவர்களுக்கு ரோமன் கத்தோலிக்க புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பான தனது நடவடிக்கைகளை வாத்திகன் நியாயப்படுத்தியுள்ளது.
இது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கக் கூடாது என்று அது கூறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தடுக்க போப் 12 ஆவது பயஸ் தேவையானவற்றை செய்யவில்லை என்று யூதக் குழுக்கள் குறை கூறுகின்றன.
புனிதர் பட்டம் என்பது, போப் பயஸ் அவர்கள் வெளிக்காட்டிய மாண்புகளை வைத்து கொடுக்கப்படுவதாக இருக்கும் என்றும் அவர் எடுத்த வரலாற்றுப் பூர்வ முடிவுகளின் அடிப்படையில் இருக்காது என்றும் வாத்திகன் கூறியுள்ளது.
இந்தப் பிரச்சனை, யூதர்களுக்கும், ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் வாத்திகன் கூறியுள்ளது.