இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆயுதப் படையினரை வேட்டையாடச் சென்றதாக கூறப்படும் இந்திய இராணுவத்தினர் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது பற்றி மவுனம் காத்து வரும் நிலையில் நகாலாந்து மாநிலம் முழுக்க இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. என் எஸ் சி என் கே என்ற ஆயுதக் குழுவும், நகாலாந்து தனிநாடு கோரும் உல்ஃபா போராளி குழுவுக்கும் ராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் இந்த கிளர்ச்சியாளர்கள் செல்வாக்குடன் உள்ளார்கள். அவர்களை வேட்டையாடச் சென்ற இராணுவத்தினர் பணி முடிந்து வந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதனையொட்டி கிளர்ந்து எழுந்த மக்கள் ஒரு ராணுவ வீரரை கொன்றதோடு ராணுவ வாகனத்திற்கும் தீ வைத்தனர்.
இந்த தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சில பொதும்மக்களைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நிகழ்விடத்தில் இணைய சேவை எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கபப்ட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ “ கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி, மாநில அரசு உயர் மட்ட விசாரணை நடத்தி நீதி கொடுக்கும்” என முடித்துக் கொண்டார்.
எல்லா அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து பறித்தெடுத்து தன்னகத்தே குவித்து வரும் மத்திய அரசு. ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் விலக்கிக் கொள்கிறது. இந்த கொலைகளில் ஈடுபட்டிருப்பது ராணுவம் இதற்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய அரசு. இக்கொலையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தின் தலைநகர் கோஹிமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணிகளில் ஈடுபட்டனர். கோஹிமாவில் இன்னும் பதற்றம் நீடிக்கிறது எனவும், மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் செய்தியாளர் ஹெச்.ஏ.ஹாங்னாவ் கோன்யாக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் நாகாலாந்து கொலை பிரதிபலிக்க கடும் அமளி ஏற்பட்டது அவை 12 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.