பாண்டிச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு கடந்த ஜூன் மாதம் சென்ற 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட அவுஸ்திரேலிய தீவிர-வலதுசாரி அரசு அகதிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திவருகிறது.
உலகம் முழுவதும், அரசின் ஆதரவோடு கனிமக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் அவுஸ்திரேலிய அரசு படகுகளை நிறுத்துவோம் என்று பிரச்சாரம் மேற்கொண்டே ஆட்சியைக் கைப்பற்றியது. உள்நாட்டில் மக்களின் எதிர்ப்பை அதிகளுக்கு எதிராகத் திசைதிருப்பும் நோக்கத்தில் அவுஸ்திரேலிய கிரிமினல் அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
ஈழத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியக் கடற்பகுதியில் இடைமறித்த அரச படைகள் நவ்ரூ தீவில் அவர்களைச் சிறை வைத்துள்ளது. 50 சிறுவர்கள் உட்பட 157 அகதிகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
எதிர்காலத்தில் அகதிகளை வியற்னாமிற்கு அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
They have found a use for the Nauru island. The phosphate deposits gone the Australians are keeping it afloat. I am sure they will consider the plight of the Sri Lankna Tamils on a case by case basis. God bless them.