நியூயோர்க்கில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய தேவயானி என்ற இந்திய உயர்குடிப் பெண் ஐ.நா இற்கான இந்திய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேவயானியின் இந்த நியமனத்தின் ஊடாக இந்திய அரசு சட்டவிரோத அடிமைத் தொழிலை அங்கீகரித்துள்ளது. சங்கீதா ரிச்சட் என்ற பெண்ணை பல்வேறு ஏமாற்று ஒப்பந்தங்கள் மூலம் நியூயோர்க் அழைத்துச் சென்ற தேவயானி அங்கு அவரை அமெரிக்க தொழிலாளர்களின் சட்டரீதியான அடிப்படை உரிமைகளுக்கு மாறாக நடத்த ஆரம்பித்தார். அடிப்படை ஊதியத்தைக் கூட வழங்கமறுத்த இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான தேவையானி சங்கீதாவையும் இந்தியாவில் வசித்த அவரது குடும்பத்தையும் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளார்.
தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்புச் சட்டவிலக்குகளைப் பாதுகாப்பாகக் கருதி சங்கீதாவிற்கு மாதாந்த,ம் 400 டொலர்கள் மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளார். வாராந்தம் ஆறு நாட்களுக்கு மேல் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை வேலை செய்ததற்கு தேவயானி வழங்கிய மாதாந்த ஊதியம் 400 டொலர்கள்.
அமெரிக்கச் சட்டப்படி ஒரு மணி நேரத்திற்கான ஆகக்குறைந்த அடிப்படைச் ஊதியம் 19.19 டொலர்களாகும். தனது வீட்டில் சட்டவிரோதமாக விதிகளை மீறி வேலைக்கமர்த்தப்பட்ட சங்கீதாவிற்கு வழங்கப்பட்ட மணி நேர ஊதியம் பல மடங்குகள் குறைவானது.
இதனை சட்டரீதியாக சங்கீதா எதிர்கொள்ள முற்பட்ட வேளையில் தேவயானியை அமரிக்க போலிஸ் கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் தனது ஆதரவாளர்களுடன் பல வழிகளில் தேவயானிக்கு ஆதரவாக தனது அமரிக்க எஜமானனுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த அடிப்படையில் தேவயானி விடுதலை செய்யப்பட, அவர்மீது எந்த விசாரணையும் நடத்தாமல் சங்கீதாவையும் அவரின் குடும்பத்தையும் அழிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அமரிக்காவில் தொழிலார்கள் போராடிப்பெற்ற உரிமைகளை அமரிக்காவில் வதியும் இந்தியர்கள் பெற்றுக்கொள்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாத இந்திய அரசும் அதன் கூட்டாளிகளும் இந்திய அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறையின் குறியீடு. இந்தியாவின் உள்ளேயே தொழிலாளர்கள் எப்படி அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு தேவயானி விவகாரம் சிறந்த உதாரணம்.
நியூயார்க்: இந்தியத் துணைத் தூதர் கைது விவகாரத்தை அதிகாரிகளும், ஊடகங்களும் வேறு மாதிரியாக திசை திருப்பி விட்டன என குற்றம் சாட்டியுள்ளார் தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு. விசா மோசடி வழக்கில் இந்தியப் பெண் தூதர் தேவ்யானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து தனது வேதனையைத் தெரிவித்துள்ளார் அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு. தேவ்யானி கைதை ஊடகங்கள் திசை திருப்பிவிட்டன: பணிப்பெண் சங்கீதா வேதனை இது குறித்து அவரது வக்கீல் டானா சூஸ்மேன் கூறுகையில், ‘‘இந்தப்பிரச்சினையில் எனது கட்சிக்காரருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான கவனத்தை, இப்போது தேவயானியின் கைது தொடர்பாக அதிகாரிகளும், ஊடகங்களும் திசை திருப்பிவிட்டன. இது கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது” என்றார். மேலும், அவர், ‘‘தேவ்யானி உரிய சம்பளத்தை என் கட்சிக்காரருக்கு தரவில்லை. அதுமட்டுமல்ல, அவர் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வேலை வாங்கப்பட்டுள்ளார். இனியும் இதை சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் எங்கு உள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘‘இந்த தருணத்தில் எனது கட்சிக்காரர் வெளியே வரமாட்டார். ஊடகங்களுடன் பேசவும் மாட்டார்” என்றார்.
துட்டுக்காக ரண்டு நாடுகளையே மோதவிட்ட தேவ்யானி என்ற தேவ** பொண்ண இந்தியாவிலிருந்து விரட்டுவோம்.
The lady broke the law and she has to deal with it. Where is the justice for this maid and the hundreds of maids abused by the Indian foreign service personnel in the US and the other countries. Let this be the beginning not the end. Let all those maids in India too get some justice out of this epsode. Ms Devayani shame on you.