11.01.2009.
இலங்கையின் கிழக்கே பாதுகாப்பின்மை காரணமாக நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், காயங்கள் போன்றவை அதிகரித்து இருப்பது குறித்து ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் மட்டும் சுமார் 24 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான ஆணையாளர் கூறியுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் அங்கு இயல்பு நிலை திரும்புவதில் ஒரு பாதகமான விஷயமாக இருக்கலாம் என்ற கவலை தங்களுக்கு இருப்பதாகவும், மட்டக்களப்பு பகுதிக்கு திரும்பியுள்ள மக்கள், போக்குவரத்து தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக தங்களை சுயாதீனமாக காப்பாற்றி கொள்வதில் தடைகள் ஏற்படுவதால் விரக்தி அடைவதாக தங்களுக்கு செய்திகள் வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த விஷயங்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக ஆக்கப்பூர்வமான விசாரணைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் ஐ.நா அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.