தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நளினி விடுதலை தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை கருணாநிதி நிராகரிக்க நீதிமன்றத்தை நாடினார் நளினி. நீதிமன்றமும் தமிழக அரசால் ஜோடிக்கப்பட்ட சிறை ஆய்வுக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு நளினி விடுதலையை மறுக்க மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார் நளினி. நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் நளினி விடுதலைக்கு சாத்தியங்கள் இருந்தும் அவரது நன்னடத்தை இமேஜை குலைக்கும் வகையில் தமிழக போலீசார் நளினிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறார்கள். நளினியின் அறையில் ரெய்ட் நடத்தியதாகவும் அப்போது செல்போன் கண்டுக்கப்பட்டதாகவும் சிறை அதிகாரி தெறிவித்திருக்கிறார். இது நீதிமன்றத்தில் தெறிவிக்கப்படும் என்றால் நன்னடத்தை விதிகளின் படி நளினி விடுதலை சாத்தியமில்லாமல் போகும். தமிழக முதல்வர் கருணாநிதி தனக்குப் பிடிக்க வில்லை என்றால் எத்தகைய கீழ்த்தரமான வேலைகளிலும் போலீசை ஈடுபடுத்துவார் என்பதர்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.