பௌத்த சிங்கள ஒடுக்குமுறையால் சிறுபான்மைத் தேசிய இனங்களும் மதங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் மதங்களிடையேயான நல்லிணக்கத்தை வலியுறுத்தி கொழும்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. நேற்று (28.06.2014 அன்று) கொழும்பில் பேரணி நடைபெற்றது. காலை 8.00 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமாகி கொம்பனித்தெருவிலுள்ள கங்காராம விகாரை சூழலில் முடிவுற்ற குறித்த பேரணியில் மதத்தலைவர்கள், பொதுமக்கள், பொலிஸார் பங்கேற்றிருந்தனர்.
ஒடுக்கும் அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக ஒடுக்கும் போலிஸ் படை இணைந்து நடத்திய இப் போராட்டத்தில் பதாகையையே நல்லிணக்கத்தைக் கொலை செய்தது.
பதாதையில், மும்மொழியில் அச்சிடப்பட்டிருந்த பேரணியின் முக்கிய தொனிப்பொருளான, “சகல மதங்களினதும் நல்லுறவை பேணும் பயணம்” எனும் சொற்றொடர், நல்லூவைப் பேனும் என எழுதப்பட்டிருந்தது.