வடக்கில் நயினாதீவில் பெரகர நிகழ்சி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நயினாதீவில் அமைக்கப்பட்ட ராஜமகா விகாரையில் இந்த விழா இடம்பெற்றது. சிங்கள பௌத்தர்களின் சிறப்பான நடனமாகக் கருதப்படும் கண்டி பெரகர நடனம் அங்கு நடைபெற்றது. இலங்கைக் கடற்படைக் கலைஞர்கள் இந்தப் பெரகர நிகழ்வில் கலை, நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். பௌத்த சிங்கள கொடிகளுடன் கடற்படையினர் ஊர்வலமாகச் சென்றனர். மக்கள் குழுமியிருந்து வேடிக்கைபார்த்தனர். சிங்களப்பாடல்களை இசைத்தபடி கடற்படையினர் வீதியில் ஊலாவந்தனர்.
மக்களின் அவலங்களின் மத்தியில் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலை நாட்டும் பேரினவாதப் பாசிசத்தின் ஒரு பகுதியே இது. அழகிய இலங்கைத் தீவின் மக்கள் கலைகளில் பெரகர நடனம் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. பேரினவாத நோக்கத்திற்காகக் பெரகரவை யாழ்ப்பாணத்தில் எல்லைப் பகுதியில் நடத்தி நடனத்தை அழுக்காக்கியுள்ளது மகிந்த பாசிசம்.