வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
பாராளுமன்றம் போனார்கள்.
தமிழீழம் கிடைக்கவில்லை.
பொடியன்கள் கிளம்பினார்கள்
வட்டுகோட்டை தீர்மானத்தை
ஆயுத போராட்டத்தால் சாதிப்போம் என்றார்கள்.
தமிழ் சமுதாயத்தை
கொலைகார சமுதாய மாற்றினார்கள்.
கொள்ளையடித்தார்கள்,
கொலை செய்தார்கள் ,
ஏவல் நாய்களாக மாறினார்கள்
உளவாளிகலானர்கள் ,
கைக்கூளிகலானார்கள்.
எட்ட்பப்பனார்கள்,மாறி மாறி
சிங்கள அரசுடன் பேரம் பேசி நாட்களை ஓட்டினார்கள்,
மக்களை எண்ணி எண்ணி பலி கொடுத்தார்கள்,
கப்பலோட்டினார்கள் ,கடத்தல் செய்தார்கள்,
ஆயுதம் வாங்கினார்கள் ,
மக்களை பட்டினி போட்டார்கள்.
ஓடி ஓடி சமாதானம் பேசினார்கள் ….
ஒன்றும் ஆகவில்லை ..
ஓடோடி முள்ளி வாய்க்காலில் ஒழித்தார்கள்…
வெள்ளை கொடி பிடித்தார்கள் ..
தலைவர் இருக்கிறார் என்கிறார்கள் …
தலைவர் இல்லை என்கிறார்கள்…
இப்போ ..நாடு கடந்த தமிழீழம் என்கிறார்கள் ….ஏன் ?
எல்லாம் வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்ர தானாம் …
நம்புங்கள் …மக்களே நம்புங்கள் !!!
நம்பவில்லை என்றால்
அடுத்த ரவுண்டில் உங்களை ” கவனிப்பார்கள்” !!!!
இந்த வட்டுக்கோட்டை தீர்மானம்
எத்தனை தரம் தான்
மண்ணை கவ்வுவது?
விழுந்தாலும் மீசையில் மண்ணில்லை
என்ற பொய் யாரை ஏமாற்ற ?
உண்மைதான்! உண்மையை கூறுவதன் மூலம் இக்குற்றப் பின்னணி உள்ள சமுகத்தில் இருந்து நீங்கள் மாத்திரம் எப்படி தப்ப முடியும்? மற்றவர்கள் மீது குற்றங்களை சுமத்தி உங்கள் மீசை மண்ணை மறைக்காதீர்கள். சமூகம் தவறு விட்டது என்றால் அதற்கு வழிகாட்டுபவனே முற்போக்குவாதி, ஜதார்த்தவாதி மாறாக சமூக அவலத்தில் இருந்து மீள வழி சொல்லாது அச்சமூகத்தை வசை பாடி நிற்றல் எதற்கும் தகாத காரியமாகும்.
புலிகளை குற்றம் சொல்லபவர்கள் “வசை பாடுபவர்கள் ” விட்டால் தமிழ் துரோகிகள் என்று ராகவன் சொல்லி விடுவார் போலுள்ளது.என்ன செய்வது பழக்க தோஷம் .
முடிந்தால் இந்த சமூகத்தை திருத்தி பாருங்கள் ராகவன் .!!!
Illusion can be dilution dreams not always come true but life there to live there fore promises always happen.thanks for your poem yogan I enjoyed much.