திரைப்பட நடிகையான விஜயலட்சுமி என்பவருடன் சீமான் தொடர்பில் இருந்ததாகவும் பின்னர் அவரை ஏமாற்றியதாகவும் விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டு சுமத்தினார். இது கடந்த பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை நீடித்து வந்த போதும் சீமான் ஹரி நாடார் என்ற பனங்காட்டுப்படை என்னும் நாடார் சாதி அமைப்பைச் சேர்ந்தவரும் சீமானுக்காக விஜயலட்சுமியை மிரட்டியதாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் தனக்கு ஹரி நாடார் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.2 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்டார். இந்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு மே மாதம் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் தேர்தல் முடிந்ததும் கைதாகி சிறை சென்று விட்டார். தன்னை மிரட்டிய வழக்கில் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயலட்சுமி தமிழ்நாடு, பெங்களூரு போலீசாருக்கு கடிதம் எழுதினார்.
இப்போது விஜயலட்சுமி தனக்கு நடந்த விஷயங்கள் தொடர்பாக தமிழக போலீசாரிடம் முழுமையாக வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2020 இல் தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி, எழும்பூர் நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில்; சீமான், சதா மற்றும் ஹரி நாடார் மூவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் மூன்று பேர் மீதும் திருவான்மியூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் ஹரி நாடாரை விசாரிக்க ஒத்துழைப்புக் கேட்டு பெங்களூரு போலீசுக்கு தமிழ்நாடு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. சிறைவிதிகளின் படி அனுமதி பெற்ற பின்னரே விசாரிக்க முடியும். இதே நிலையில் இந்த வழக்கில் விரைவில் சீமான் மீதும் நடவடிக்கை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.