நடிகர் ஜெயராம் மலையாளப் படம் ஒன்றில் வீட்டு வேலை செய்யும் தமிழ் பெண்களை கழுத்து தடித்த எருமைகள் என்று இழிவு படுத்தி கூறியதாகத் தெரிகிறது.
. இது தமிழகத்தில் சில அமைப்பினரிடமும் சில பெண்களிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கான இந்திய அளவிலான சங்க மாநாட்டிலும் நடிகர் ஜெயராமாற்கு கடும் கண்டனம் தெறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயராம் வீட்டிற்குள் நுழைந்த முப்பது பேர் கொண்ட இளைஞர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்தனர். ஆவேசமாக அவர்கள் ஜெயராமிற்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை விரட்டிச் சென்று பிடித்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர். அவர்கள் இயக்குநர் சீமான் அவர்களின் நாம் தமிழர் இயகத்தினர் என்று தெரிகிறது. பொதுவாகவே ஈழத் தமிழர் கோரிக்கையில் தோற்றுப்பொனதான ஒரு உணர்வு தமிழகத்தில் பல தரப்பினரிடமும் நிலவும் நிலையில் இம்மாதிரி யாராவது பேசும் போது அவர்களுக்கு எதிராக இந்த இளைஞர்களின் கோபம் திரும்பி விடுகிறது. ஒரு வகையில் இதற்காக மத்திய மாநில அரசுகள் வெட்கப்பட வேண்டும். அதே வேளையில் கருணாநிதிக்கு திரயுலகம் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும் என்று அறிவித்துள்ள பெப்ஸி போன்ற சினிமா சங்கங்களின் மனித உரிமை மீறலான இந்த அறிவிப்புகளுக்கு எதிரகவும் தமிழார்வலர்கள் போராடினால் ந்ல்லது.
பல மலையாளப் படங்களீல் தமிழரை வில்லங்களாக காட்டப்படுவது தமிழ்ர் மீதான மலையாளீகளீன் பொறாமையின் வெளீப்பாடு இதை முலையிலேயெ கிள்ளீ எறீயாது விட்டது தவறூ.தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர் மீதே தன் காழ்ப்புணர்வைக் காட்டும் மலையாளீ ஜெயராம், தமிழ்நாட்டில் தமிழனாகவும்,கேரளத்தில் மலையாளீயாகவும்நடிப்பதாக தேவி வார இதழ் எற்கணவே எழுதியுள்ளது. இந்த எதிர்ப்பைக் கூட பிழை என்பர் தமிழரில் சிலர்.எனன செய்வது? தமிழ்ப் பெண்கள் என்றூ குறீப்பிட்டுநம் பெண்கலைநக்கல் செய்திருக்கும் ஜெயராம் தமிழ்ரிடம் பிச்சை எடுக்கும் மலையாளீகள் பற்றீ என்னநினைப்பானோ?
சில தமிழ் சினிமாவிலும் மெகாதொடர்களிலும் மலையாளிகளை நிந்திப்பதைப் பற்றியும் நாங்கள் சிந்த்திக்க வேன்டாமா?
ஒரு ஏமாற்றுக் கும்பலின் வியாபாரப் போட்டிக்காக ஏன் தமிழரும் மலையாளிகளும் ஆளையால் அழித்துக் கொள்ள வேண்டும்?
இதே போன்றுதான் இலங்கையிலும் சிங்கள சினிமாவிலும், நாடகங்களிலும் தமிழரை இழிவுபடுத்தி காலம் காலமாக காட்டப்படுகிறது. தமிழரை இழிவு படுத்தல் தமிழரல்லாதோர் பண்பு.