ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக்கண் டித்தும் தமிழ்திரை உலக நடிகர்- நடிகைகள் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். சென்னை தியாகராய நகர் அபிபுல்லாசாலையில் உள்ள தென் இந்திய நடிகர் சங்க கட்டிட வளா கத்தில் இன்று (சனி) காலை 8 மணிக்கு நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் தொடங்கியது. இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு சுமார் ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. நடிகர், நடிகைகள் அனைவரும் கருப்புஉடை அணிந்து உண்ணாவிரதத்தில் பங்கேற் றனர். காலை 8மணிக்கு தென் இந்திய நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இலங்கையில் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக நடிகர்- நடிகைகள் எழுந்து ஒரு நிமிடம் மவுனமாக நின்றனர். இதையடுத்து நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் அமைதி ஏற்பட்டு, ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதை வலி யுறுத்த இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. அந்த வகையில் இன்று நம் உணர்வுகளை பதிவு செய்யும் நாள் ஆகும். ஈழத் தமிழர்களுக்கு எல்லா வகை நிவாரண உதவிகளும் சென்று சேரும் வகையில் நடிகர், நடிகைகள் கருத்தக்களை பதிவு செய்வார்கள். இவ்வாறு சரத்குமார் கூறினார். உண்ணாவிரத மேடை யில் இருந்த நடிகர், நடி கைகளை நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதா ரவி ஒவ்வொருவராக அழைத்து பேச வைத்தார். முதலில் பல்வேறு மாவட்ட நாடக கலை மன்ற நிர்வாகிகள் பேசினார்கள். அதன்பிறகு நடிகர், நடிகை கள் பேசினார்கள். இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசும் போது, உணர்ச்சி வசப்பட்டு விடுதலைப்புலிகள் பற் றியோ அல்லது மத் திய-மாநில அரசுகளை விமர்சனம் செய்தோ பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே நடிகர், நடிகைகள் எல்லாரும் சுருக்கமாக பேசினார்கள். உண்ணா விரதத்துக்கு தங்களதுதார் மீக ஆதரவை தெரிவித்து மட்டுமே பேசினார்கள்.