மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வரும் நடிகர் கமல்ஹாசன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
//அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.//’ என தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் போதுதான் கொரோனா தொற்று இன்னும் தீராமல் பரவிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை பொதுச் சமூகம் உணர்கிறது.
தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கொரோனா தொற்று அவ்வப்போது அதிகரித்தும் வருகிறது. கொரொனா பரவலுக்காக ஏராளமான மருத்துவ முகாம்களை உருவாக்கியிருந்த தமிழ்நாடு அரசு இப்போது அந்த முகாம்களை காலி செய்து விட்டது.