தனது வீட்டில் மரணமடைந்த நடராஜா கிஜானியின் மரணம் கொலை எனச் சந்தேகிக்கப்படுகிறது என யாழ்ப்பாண மருத்துவமனையின் நீதித்துறை மருத்துப அதிகாரி Judicial Medical Officer (JMO) இன்று தெரிவித்துள்ளார். கொலையுண்டவரின் கழுத்தில் வடுக்கள் காணப்படுவதாகவும் துணி ஒன்றினால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இறுதி முடிவை வெளியிடுவதற்கு மேலும் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உடற்கூற்றியல் சோதனை ஒன்றை நடத்துவதற்காக மரணித்தவரின் வயிற்றுப் பகுதியின் மாதிரி ஒன்றை கொழும்பு மருத்துவ மனைக்க்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் நிலையில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளது. அச்சத்தின் மத்தியில் வாழும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இந்த மரணம் மேலும் உயிர்ப்பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வேளை இலங்கை அரசிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவுப் பிரச்சாரங்களை புலம்பெயர் அரச ஆதரவு மாபியாக் குழுக்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளன.
I think Sri Lanka Police is struggling to do normal duties in the North and East. That is why we must avoid other politically motivated disturbances. The combatants have not been released and many are still in custody.