இலங்கை அரச பேரினவாதத்தால் அடக்குமுறையினால் துரத்தப்பட்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களைப் போன்று 63 ஆண்டுகள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் பாலஸ்தீனியர்கள் 15.05.2011 – நேற்றைய தினம்- தமது இஸ்ரேலிய எதிர்ப்பு நாளான நக்பா நாளைக் முன்னிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இஸ்ரேலிய அரசால் வெளியேற்றப்பட்டு பல நாடுகளில் குடியேறியுள்ள பாலஸ்தீனியர்கள் தமது நாட்டின் எல்லைகளை நோக்கிய போராட்டங்களை நடத்தினர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும் 100 இற்கு மேலானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இந்த நாளில் துனிசியா, எகிப்து, ஈரான், பிரித்தானியா, பிரான்ஸ், லெபனான் ஆகிய நாடுகளில் பாலஸ்தீனியர்களை ஆதரித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.