விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் இலங்கை அரச புலனாய்வுப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை இலங்கை முழுவதும் முன்னை நாள் போராளிகள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. புனர் வாழ்வளிக்கிறோம் என்ற அடிப்படையில் பல்வேறு சித்திரவதைகளுக்கும் உளவியல் பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகள் மீது விடுக்கப்பட்டுள்ள மிரட்டலே இப்படுகொலை.
இராணுவச் சர்வாதிகார அரசை ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கத் துணைபோகும் மேற்கு ஏகபோக அரசுகளும் இந்திய அரசும் சமூகத்தின் மீது பற்றுள்ள எஞ்சியவர்களையும் அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இப்படுகொலை.
நகுலேஸ்வரன் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து நிலப்பறிப்பிற்கு எதிரான போராட்டங்களில் பங்காற்றியிருக்கிறார். சமூகப்பற்றுடன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மக்கள் மீது பற்றுக்கொண்ட எவரையும் இலங்கையில் ஆட்சிசெலுத்தும் இனப்படுகொலை அரை இராணுவ அரசு வாழ அனுமதிக்காது என்பதே நகுலேஸ்வரனின் படுகொலை உலகிற்குச் சொல்லும் செய்தி.
இது இவ்வாறிருக்க மரணித்த போராளிகளை முன்வைத்து பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. புரட்சிகரமாகவும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டிய போராளிகளின் நினைவு நாளை மாவீரர் நாள் என்ற தலையங்கத்தில் சமயச்சடங்கு போல புலம்பெயர் அரசியல் தலைமைகள் நடத்தி அதனைப் பிழைப்பாக்கிக் கொள்கின்றன. இவர்கள் தாம் சுருட்டிக்கொள்ளும் பணத்தின் ஒரு பகுதியையாவது நகுலேஸ்வரன் போன்ற போராளிகளின் மக்கள் சார்ந்த செயற்பாடுகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தினால் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் மீண்டும் முளைவிட வாய்ப்புக்களுண்டு.
மாவீரர் நாள் என்று பொதுவாக அழைத்தாலும், ‘தேசிய நினைவெழுச்சி நாள் ‘ என்றே இந்நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. சேரும் பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்குச் செல்லவில்லையென்று யார் சொன்னது?.
பொதுவான குற்றச் சாட்டினை முன்வைக்கமுன், சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகக் கேட்கலாமே…இதையெல்லாம் வெளிப்படையாகக் கூறிச் செய்தால், நகுகேச்வரன் நிலைதான் அங்குள்ள பலருக்கு ஏற்படும்.
I have never been to any Maaveerar day, not that I did not want to but it never occurred to me that I should go. But I think it’s disguting others denigrating the rememberance of the departed.