இந்தியத் தரகு முதலாளிகள் சங்கங்களில் ஒன்றான ‘இந்தியத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry-CII) ‘2025-இல் தமிழகம்’ -(Tamilnadu Vision 2025) என்றொரு அறிக்கையை 2008-இல் வெளியிட்டிருக்கிறது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் (Price Water Coopers) என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவேண்டும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.
1973 முதல் அமல்படுத்தப்பட்ட ‘தீவிர சோசலிச’க் கொள்கைகள், 1990-களின் துவக்கத்தில் விதைக்கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் ஆகியவற்றைக் கடந்து, ஒரு புரட்சிகரமான காலக் கட்டத்தின் வாயிலில் தமிழகம் நின்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது, அந்த அறிக்கை. அதிவேக நகரமயமாக்கம், கல்வி, ஒப்பீட்டளவில் செயல்திறன் வாய்ந்த உள்கட்டுமானங்கள் ஆகியவையே தமிழகப் பொருளாதாரத்தின் வலிமைகள் என்று கூறும் அந்த அறிக்கை, தமிழக மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கு, படிப்படியான மெதுவான மாற்றம் என்கிற நமது கடந்த கால அணுகுமுறை பொருத்தமற்றது என்பதை வலியுறுத்துகிறது.
அடுத்த 20 ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் மாற்றங்களின் வீச்சும், அவற்றின் வேகமும் நாம் முன்னெப்போதும் கண்டிராததாக இருக்கப் போகின்றன என்று கூறும் இந்த அறிக்கை, 2025-இல் நாம் அடைய வேண்டிய இலக்குகளைத் துறை வாரியாகப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுருக்கித் தருகிறோம்.
“தற்போதைய சென்னை மாநகரத்தைச் சுற்றிலும் ஒரு மீப்பெருநகரப் பிராந்தியம் (Mega Urban Region) உருவாக்கப்பட வேண்டும். சுமார் 5000 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகவும், மரக்காணம்,அரக்கோணம், புலிகாட் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதுமாக அது அமையவேண்டும். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பெருநகரங்கள் தற்போதைய சென்னைக்கு இணையான மாநகரங்களாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தின் 24 முக்கிய நகரங்களின் தரமும் உயர்த்தப்பட்டு, அவற்றுடன் தாலுகா தலைநகரங்கள் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்படவேண்டும். இந்த 24 நகரங்களும் நான்கு பெருநகரங்களுடன் ஆறு வழி மற்றும் எட்டு வழிச்சாலைகள் மூலம் இணைக்கப்பட வேண்டும்.
சுருங்கக் கூறின், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 13 மணி நேரமாக இருக்கும் தற்போதைய பயணநேரத்தை, 7 மணி நேரமாகக் குறைக்கும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப் படவேண்டும். சைக்கிள் சக்கரத்தின் (ஸ்போக்ஸ்) கம்பிகள் அதன் மையத்துடன் (ஹப்) இணைக்கப்பட்டிருப்பதைப் போல கிராமப்புறங்களும், சிறுநகரங்களும் பெருநகரங்களுடன் இணைக்கப்படவேண்டும்.விமானப்போக்குவரத்து தற்போது உள்ளதைப் போல ஏழு மடங்கும், மின் உற்பத்தி பதினோரு மடங்கும் அதிகரிக்கப்படவேண்டும்.”
“தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product) சேவைத்துறை மற்றும் தொழில்துறையின் பங்கு 93% ஆக உயர்த்தப்படவேண்டும். தற்போது (2008) 50 சதவீதமாக இருக்கும் நகர்ப்புற மக்கள் தொகை, 2025 இல் 75% ஆக உயர்த்தப்படவேண்டும். 2025-ஆம் ஆண்டில் விவசாயத்தை சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25% ஆகக் குறைக்க வேண்டுமானால், நகரமயமாவதை தற்போதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.”
“2025-இல் தானியங்கி, தோல், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, பிற ஆலை உற்பத்தித் தொழில்கள், கட்டுமானத்துறை, ஐ.டி. மற்றும் பிற சேவைத்துறைகளே வேலை வாய்ப்பை வழங்கும் முதன்மையான துறைகளாக இருக்கும். நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில் ஆகியவற்றை மையப்படுத்தித் தொழில்துறை வளர்க்கப்படவேண்டும். கால்நடை வளர்ப்பு, கா-கனி-பூ ஆகியவற்றை மையப்படுத்திய தோட்டத்தொழில் போன்ற அதிகம் தண்ணீர் தேவைப்படாத உற்பத்திகளை நோக்கியும், மதிப்புக் கூட்டும் விவசாயத்தை நோக்கியும் (Value Added Agriculture) விவசாய உற்பத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நகர்ப்புறத்தில் சில்லறை வணிக நிறுவனங்கள் காணவிருக்கும் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு (அதற்குப் பொருத்தமான விதத்தில்) அரசின் விவசாயக் கொள்கை அமையவேண்டும். (இதனை ஒட்டி) ஒப்பந்த விவசாயத்தின் நிறை-குறைகள் பற்றிய ஆவு மேற்கொள்ளப்படவேண்டும்.”
“கல்வித்துறையைப் பொருத்தமட்டில், வெற்றி பெற்ற முதலாளிகளின் கதைகளும் அனுபவங்களும் (உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் வரலாறு) மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதுடன், தொழில் முனைவராவது குறித்த (முதலாளியாவது குறித்த) தனி பட்டப்படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தச்சுவேலை, குழா ரிப்பேர் போன்ற செயல்முறைக் கல்விக்கான பாடத்திட்டங்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் படவேண்டும். ஆண்டொன்றுக்கு 10,000 (தற்போது 3000) மருத்துவர்களை உருவாக்கும் வகையில் 120 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இதன் பொருட்டு மருத்துவப் படிப்பு மற்றும் செவிலியர் படிப்பிற்கான தனியார் கல்லூரிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.”
“தற்போது ஒரு புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள், உரிமங்கள், தடையில்லாச் சான்றிதழ்கள் போன்றவற்றைப் பல்வேறு துறைகளிடமிருந்து பெற்று ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்குச் சராசரியாக 41 நாட்கள் ஆகின்றன. ஒரு சொத்தைப் பதிவு செய்வதற்கு 61 நாட்கள் ஆகின்றன. இவற்றை முறையே இரண்டு நாட்களாகவும், ஒரு நாளாகவும் குறைப்பதன் மூலம் அந்நிய மூலதனங்களை ஈர்க்கும் ஆசியாவின் 5 முக்கிய மையங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்ற முடியும்.”
“அரசு நிர்வாகத்தின் செயல்திறனை இவ்வாறு அதிகரிக்க வேண்டுமானால், அரசு நிர்வாகப் பணிகளில் அவுட் சோர்சிங் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளிலும், உள்கட்டுமானத் துறையிலும் தனியார் துறையுடன் கூட்டு அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்தக் கட்டுமானங்களை உருவாக்குவதற்கான மூலதனத்தை அரசாங்கத்தால் பெறமுடியும்” என்றும் வலியுறுத்துகிறது, அந்த அறிக்கை.
‘உலகத்தமிழர் ஒற்றுமை’யின் அவசியம் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. தமிழ்ப் பண்பாடு மூலமாக வெளிநாட்டில் குடியேறியிருக்கும் 40 இலட்சம் தமிழர்களை ஒன்றிணைக்க ‘உலகத் தமிழ் மையம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், இணையத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், உலகத் தமிழர்களின் சாதனைகளை அங்கீகரித்து, அவர்களைத் தமிழகத்தின் வளர்ச்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வழங்குகின்ற பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் போன்ற பட்டங்களுக்கு இணையான ‘தமிழ் விருதுகளை’ உருவாக்கி, இத்தகைய சாதனைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை. சென்னை சங்கமம் போன்ற விழாக்களை மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் நடத்த வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை தனது செயல்திட்டமாக முன்வைக்கிறது.
‘திராவிட ஒற்றுமையை’யும் இவ்வறிக்கை விட்டு வைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சென்னை ராஜதானி, தென்னிந்தியா முழுவதன் தலைநகரமாக இருந்ததையும், தென் மாநிலங்களின் வரலாறு அதனுடன் பிணைந்திருப்பதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாநில முதலாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதன் மூலம் அவர்களை ஈர்க்க வேண்டும் என்றும், கேரளத்தின் எல்லையில் இருக்கும் கோவை, கர்நாடக எல்லையில் இருக்கும் ஒசூர், ஆந்திர எல்லையில் இருக்கும் சென்னை ஆகிய நகரங்களை முக்கியமான வர்த்தக மையங்களாக உருவாக்குவதன் மூலம் தென்னிந்தியாவின் மையமாகத் தமிழகத்தை மாற்றவேண்டும் என்றும் கூறுகிறது இவ்வறிக்கை.
*****
நகரமயமாக்கத்திற்கும் மறுகாலனியாக்க கொள்கைகளுக்கும் இடையிலான உறவை, அதாவது, தமிழகத்தில் நாம் காணும் நகரமயமாக்கம் என்பது தனியார்மய, தாராளமயக் கொள்கைகளுடைய அமலாக்கத்தின் விளைவே என்பதை இந்த அறிக்கையின் வாயிலாகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கை முன்வைக்கும் இலக்குகளும், மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்த அது பரிந்துரைக்கும் வேகமும் சாத்தியமானவைதானா என்ற பரிசீலனையைக் காட்டிலும், இதுதான் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தரகு முதலாளி வர்க்கத்தின் உள்ளக்கிடக்கை என்பதை நாம் புரிந்து கொள்வதே முக்கியமானது.
உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள், தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தளிப்பதற்கு பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ், மெக்கின்சி போன்ற சர்வதேச ஆலோசனை நிறுவனங்களைத்தான் அமர்த்திக் கொள்கின்றன. அவர்களது ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், பின்தங்கிய நாடுகளில் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அனைத்தும் செயல்வடிவம் பெறுகின்றன. அத்துடன் கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கைகளின் கீழ், இத்தகைய சர்வதேச ஆலோசனை நிறுவனங்களும், சி.ஐ.ஐ போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்களும் தற்போது அரசு அதிகாரத்தின் அங்கங்களாகவே மாறியிருக்கின்றன. எனவே, 2025-ஆம் ஆண்டுவரை தமிழகத்தை ஆளக்கூடிய கட்சி எதுவாக இருந்தாலும், தமிழகத்தின் செல்வழி இதுவாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் நகரமயமாக்கம் என்பது தன்னியல்பானதொரு நிகழ்ச்சிப்போக்கோ, விவசாயத்தின் வளர்ச்சியில் அரசு உரிய கவனம் செலுத்தாததன் தவிர்க்கவியலாத பின்விளைவோ அல்ல. அவ்வாறு கருதும் சில அறிஞர்கள்தான், அரசுக்கு புத்திமதி கூறி நாளேடுகளில் கட்டுரை எழுதுகிறார்கள். விவசாயத்தையும் நீர்ப்பாசனத்தையும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துகின்ற அதே நேரத்தில், விவசாயத்தையும் காப்பாற்றும் வகையில் திட்டம் வகுக்க முடியும் என்ற கற்பனைகளை விதைக்கிறார்கள். மாறாக, நகரமயமாக்கமும் விவசாயத்தின் அழிவும் மறுகாலனியாக்கக் கொள்கையினால் திட்டமிட்டே முன்தள்ளப்படுபவையாகும். கிராமப்புற மக்கட்தொகையை 25% ஆகக் குறைக்கவேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 93% நகரம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தரகு முதலாளி வர்க்கம் முன்வைத்திருக்கும் இலக்குகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.
தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பைத் தேர்தலில் அறுவடை செய்வதற்காக ஓட்டுக்கட்சிகள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்கள் எதுவும் இந்தச் செல்வழியை மாற்றிவிடப் போவதில்லை. ஸ்ரீபெரும்புதூர் விமானநிலைய விரிவாக்கம், மதுரவாயல் சாலைத் திட்டம் போன்றவற்றுக்கு விவசாயிகளும் குடிசைவாழ் மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதனால், அவை தொடர்பாக தி.மு.க. அரசை எதிர்த்த ஆர்ப்பாட்டங்களை அ.தி.மு.க. நடத்தியிருக்கிறது.
தி.மு.க. வும் கூட, ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துக்கு ஜெயலலிதா அரசு வழங்கிய சலுகைகளை முன்னர் அம்பலப்படுத்தியது. ஆட்சிக்கு வந்த பின்னர் அதை விட அதிகமான சலுகைகளை ஹூண்டா, மகிந்திரா உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் தி.மு.க. அரசு வழங்கியது. தற்போது அ.தி.மு.க. காட்டி வரும் எதிர்ப்பும் அத்தகையதே.
அ.தி.மு.க., தி.மு.க. என 1990-களிலிருந்து மாறி மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இக்கட்சிகளிடைய இருக்கும் ஒற்றுமையைத்தான் தமிழகத்தின் சாதகமான அம்சமாக தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மதிப்பிடுகின்றனர். இவ்விரு கட்சிகளில் தி.மு.க., குறிப்பாக கருணாநிதியின் குடும்பம் ஆளும் வர்க்கத்தின் அங்கமாகவே வளர்ச்சியடைந்திருப்பதால், சி.ஐ.ஐ முன்வைத்திருக்கும் இந்த அறிக்கையை, கழகம் தனது சொந்தக் கொள்கை அறிக்கையாகவே கருதும் என்பதில் ஐயமில்லை. மாறிவிட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக, ‘உலகத்தமிழின ஒற்றுமை’, ‘தமிழ்ப் பண்பாடு’, ‘திராவிட ஒற்றுமை’ போன்ற கழகத்தின் மூல முழக்கங்களைக் கைவிடத் தேவையில்லையென்றும், புதிய உள்ளடக்கத்தைப் புகுத்துவதன் மூலம் அவற்றைப் புளி போட்டு விளக்கி மீண்டும் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் தி.மு.க.வுக்குச் சூசகமாகத் தெரிவித்திருக்கிறது, சி.ஐ.ஐ யின் இந்த அறிக்கை.
2008-இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறும் திசையில்தான் தி.மு.க. அரசு தமிழகத்தைக் கொண்டு செல்கிறதா? ஒரு ரூபாய் அரிசியும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிடலாம். ஆனால், முதலாளிகளிடம் அப்படிச் சான்றிதழ் பெற்றுவிட முடியாது. இந்தியத் தரகுமுதலாளிகள் சங்கத்தின் தமிழகக் கிளை 2010- இல் வழங்கியுள்ள ‘சாதகமான தமிழகம்’ என்ற சான்றிதழ், 2025-ஆம் ஆண்டுக்கு அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்குகளை நோக்கித்தான் தமிழகம் துரத்தப்படுகிறது என்பதற்கு நிரூபணமாக இருக்கிறது.
(தொடரும்)
புதிய ஜனநாயகம் இதழிலிருந்து…
நகரமயமாதல் என்பது தீமையானது என்ற கோணத்தில் மட்டுமே பார்ப்பது தேவையற்றது. நகரமயமாதல் என்பது தவிற்க முடியாதது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் போக்குவரத்து, குடிசைப்பகுதி மக்களின் உரிமை, சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
நகரமயமாதல் சரியா பிழையா என்பதல்ல கேள்வி. நகரமயமாதல் தன்னளவிலே தீயது என்பது கட்டுரையின் வாதமுமல்ல. கட்டுரை நகரமயமாதலின் நடைமுறை பற்றியது.
எந்தத் தேவையையும் நலன்களையும் கருத்திற் கொண்ட நகரமயமாதல் என்பதே கவனத்துகுரியது.
இந்தியாவில் கொலனியாட்சியின் தேவைகளின் விளைவகப் புகுத்தப் பட்ட முதலாளித்துவம் நிலவுடமையுடன் சமரசம் செய்து கொண்டது.
இப்போதைய நகரமயமாதல் முதலாளிய உலகமயமாக்கலின் ஒரு பகுதியாகக் காணப்பட வேண்டும்
அதன் விளைவாக உருவாகிப் பெருகும் சேரிகளும் வீடின்மையும் தீர்க்கப்பட வேண்டியவை. அதற்கு உலகமயமாக்கலின் எசமானர்களிடமோ முகவர்களிடமோ விடை இல்லை.
தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்பது என்பது அமெரிக்க வழக்கம்.ஐரோப்பாவில் அரசாங்கமே இதைக் கைகொள்கிறது.இதற்கு அமெரிக்காவின் முண்ணூறு ஆண்டுகால கலாச்சாரமில்லாத வரலாறே காரணம்./இந்த அறிக்கை முன்வைக்கும் இலக்குகளும், மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்த அது பரிந்துரைக்கும் வேகமும் சாத்தியமானவைதானா என்ற பரிசீலனையைக் காட்டிலும், இதுதான் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தரகு முதலாளி வர்க்கத்தின் உள்ளக்கிடக்கை என்பதை நாம் புரிந்து கொள்வதே முக்கியமானது./– இதுவே உண்மை!.
கலைஞர் கருணாநிதியின் குடும்பம்,”மானட மயிலாடதான்” லாயக்கு.அவர்களுக்கும் இந்தப் போக்குக்கும் சம்பந்தம் இல்லை!,”இந்த அலை” பணத்தை அள்ளிக் கொண்டு வந்து அவர்கள் வீட்டு வாசலில் கொட்டுகிறது,வாரி வாரி உள்ளே போடுகிறார்கள்,திராவிடமாவது,வெங்காயமாவாவது,”நக்குகிற நாய்க்கு செக்கென்ன,சிவலிங்கமென்ன”!.ஆனால் இந்தப் போக்கு தோல்வியில் முடிந்துக் கொண்டிருக்கிறது.இதற்கு “துபாயே உதாரணம்”.கலைஞர் குடும்பத்திற்கு எறிகிற வீட்டில் புடுங்கின வரை இலாபம்!.சீனா வேறு விஷயம்,அமெரிக்க முதலாளித்துவத்தின் பலகீனத்தை அவர்கள் சரியாக சுயநலமாக பயன் படுத்துகின்றனர்.அதற்கு கடுமையான உழைப்பும்,கலாச்சார பலமும் தேவை.இரண்டையும் அழிப்பதுதான்,மானாட மயிலாட மற்றும் இலவச கலர் டீவி!.இது நிச்சயமாக முட்டு சந்தில் போய் நிற்கும் என்று எதிர்வு கூறலாம்!.
சி.டி. வெளியீடு,குத்துப்பாட்டு நிகழ்ச்சி ஆகியவற்றிற்கு ஒரு மாநில முதல்வர்,முகத்தில் எறியப்படும் “பில்லியன் டாலர்களுக்காக” உடல் உபாதைகளையும் பொறுத்துக் கொண்டு தள்ளாத வயதில் செல்கிறார் என்றால்,யாருடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற என்று புலப்படும்.இதற்கு திரவிட இயக்க வரலாறு புரிய வேண்டு.
ஜாதி அமைப்பை புரியாமல்,காலனித்துவ ஆதிக்கம்,கிருஸ்தவ மிஷ்னரி அழுத்தங்களால்,”சமூக நீதி” தேவைப்பட்டது.ராஜாராம் மோகன் ராய்,சுப்பிரமணிய பாரதியார்,இந்து பத்திரிக்கை ஆரம்பகால நிறுவனர்(மாமா ராம் அல்ல),போன்றோர்களால் அது முயற்சி செய்யப்பட்டது.ஆனால் தொழிற் புரட்சியால்,காலனித்துவ ஆதிக்கத்தின் சுரண்டலின் கீழ் இதை நியாயப்படுத்த முடியவில்லை.தொழிற் ப்ரட்சியின் “அமைப்பு ரீதியான கூலிகளாக” தலித்துக்களை கல்வியூட்டி?,அதற்கு “வெள்ளை தோல்” பிராமணர்களை(ஆரியர்?),வெள்ளாளர்களை” கங்காணிகளாக ஆக்குவதே வெற்றியளித்தது.இதுவே மாயாவதி,எஸ்.வி.சேகர் போன்றோரின் பிராமண – தலித் கூட்டு(கார்ப்பரேட் நிறுவன கொள்கை?).சிம்ஸன்,டி.வி.எஸ்.,எல் &டி. போன்றவை உதாரணங்கள்,இதில் கருப்புத் தோல் பிராமணர்கள் இல்லை.
இவர்கலைப் போலவே ஆனால் சிறிது நிறம் குறைவாக இருந்த ஜமிந்தார்களின் ஆதங்கமே திராவிட இயக்கம்.இவர்களிடையே உள்ள முரண்பாடுகளை தொழிற் புரட்சிக்கு சாதகமாக ஆக்க,சமூக நீதி தேடியவர்களை கம்யூனிஸ்டுகள் பக்க போகாமல் திசை திருப்ப,”ராஜ கோபால சாரியார்” கலைஞர் கருணாநிதியை வளர்த்து விட்டார்!.
“அருந்ததி ராய்” கூறியது போல்,இந்திய முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில்,”உடனடியாக செலுத்தக் கூடிய பில்லியன் டாலர்கள் பணப்பெட்டியுடனும்” மொட்டை தலையுடன்,விஸ்கியும்,”உயர்தர கார்ல் கேர்ல்ஸ் எனப்படும் எஸ்கார்ட் கேர்ல்ஸ்(விபச்சாரிகள்)” ஸுக்களின் டெலிபோன் எண்களுடன்,விருந்தினர் விடுதிகளில் தங்கியிருக்கும் “கார்ப்பரேட் முதலாளிகள்” தங்கள் நிகழ்ச்சி நிரலுக்காக ராஜாஜி போன்று கலைஞர் கருணாநிதியை “எஸ்கார்ட் கேர்ல்” லாக தேர்ந்தெடுத்துள்ளனர்.இதில் அடித்த ஜாக்பாட்டுக்கு தகுந்த மாதிரி,”திராவிடம்,உலகத்தமிழ்,தலித்தியம்,நிதி பில்லினேயர் குடும்பம்” போன்ற கொள்கைகளை? அள்ளி வீசுகிறார்,ஏதாவது “செட் ஆனால்” சரி என்று!.
மொட்டைத் தலையர்கள் வேக வேகமாக தொழிற்சாலைகள் துவங்கி,வேக வேகமாக வேலை வாங்கிக் கொண்டு,மிஞ்சிய சென்னை குப்பையை கடலில் வீசி விட்டு அடுத்த நாட்டுக்கு மாறி விடுவார்கள்.இதிலிருந்து சீனா தன்னை பாதுகத்துக் கொன்டு விட்டது ஆனால் இந்தியா?.
இந்த மொட்டைத் தலையர்கள் குடித்து விட்டு மிச்சம் வைத்திருக்கும் எச்சில் விஸ்கியை வாயில் ஊற்றிக் கொண்டு அவன் விளையாடி விட்டு படுத்திருக்கும் “எஸ்கார்ட் கேர்ல்” லுக்கு “ஒரு ஷாட்” அடிப்பதற்கு சென்னைப் பக்கம் அலைந்துக் கொண்டிருப்பவர்கள்தான்,”புலி வியாபாரிகள்”!.இவர்களுக்கு சுக்கா வறுவல்,சால்னா சப்ளை செய்ய சில தலித்துக்கள் மார்தட்டிக் கொண்டு அலைகின்றனர்!.
கொட்டைப் பாக்குப் பருவம் தொடங்கி விட்டதா?
The prose exhibitted on CII is true one and it is expressing so many facts that are inexistant in the country as well as in india in some other states.It will not responding among the states wherei8n the commo n man is expecting more from the inedustrialists. Can it be possible
Who is industrialists?!.The first reasonable Indian industrialist was TATA steels.Now due to economic libaralisation,TATA is having debt over four Billion US$,and most of it’s shares were bought by Swedish white man’s company.This happens because TATA never invested in proper research projects like China.They only depended on European,particularly from Germay’s technology transformation(copy),don’t have any Indian individuality.They think they are Aryans?,they are same like Germans,dont need for individual thinking.But Germany never think like that – evident from jai hind Chenbagaraman’s murder by Adolf Hitler,and defeat of Nethaji? Subash Chandra bose.You are having some culture,you must express that,not showing “head to snake,and tail to fish”.India is having two ass.One is Manmohan singh showing to China,and one from Sonia showing to West,so that evaerybody can make “sodamy”!.now karunanidhi using this “Aryan card” surpass TATAs just to behave as broker for American or western corporate Giants,mst of them don’t like European sponsored Aryan? Indian industrialists!?…but everythin is shit..
இந்த தசாப்த்தத்தின் ஆரம்பத்தில் ஆந்திரமுதல்வராக தெலுங்குதேச சந்தரபாபுநாயுடு பதவி வகித்தபோது இதே மெக்கன்ஸி ( அப்போது செல்ஸி கிளிங்ரன் ஓர் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்) தான் நரகமயமாக்கல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியது. மெக்கன்ஸி யின் ஆலோசனையின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் கிராமியசிறுவிவசாயிகளும், சிறுவியாபரிகளும், சிறுகைத்தொழிலாளரும், பெரும் தொகையான தொழிலாரும் நிர்க்கதியானார்கள். பெருமுதலாளிகளின், தரகர்களின், நிலப்பிரபுக்களின், பெருவிவசாயிகளின் நலன்சார்ந்தே ஒவ்வொருமுடிவும் எடுக்கப்பட்டது. மென்பொருள், கணனித்துறை முக்கியப்படுத்தப்பட்டது. சிறுவிசாயிகளுக்கான அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட்டு, சிறுவியாபாரிகள் நுகர்வுவலு கிராமங்களில் குறைய தொடங்க,வாழ்வாதரங்களை இழந்து தெருவுக்கு வந்தார்கள். சுமார் ஆறுவருடங்களிற்கு முந்தைய கணிப்பின்படி தினந்தோறும் குறைந்தது இருநூற்றன்பது பேர் ஒருவழி பயணச்சீட்டுடன் பம்பாய்(மும்பாய்) மாநகரத்திற்கு வேலை தேடி சென்று இறங்கினார்கள். அந்த சந்திரபாபு நாயுடுவின் நகரமயமாக்கலில் சிறுவிவசாயிகளின் கிராமங்கள் அழிந்துபோயின. வறுமைக்கோட்டுக்கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் ஆபிரிக்காவின் தென்முனை நாடுகளுக்கு அடுத்த இடத்தை ஆந்திரா பிடித்துக்கொண்டது. கிராமங்களில் வறுமையினால் தற்கொலைசெய்துகொள்வோரின் எண்ணிக்கை பெருமளவால் அதிகரித்தது. கூடவே கணனித்துறை வளர்ச்சியடைந்தது. புதிய உயர்தரம்த்தியவர்க்கம் உருவாகியது. தரகுமுதலாளிகள் பெருத்தனர். கைதராபாத்தில் புதியதர பப்புகளும்,கிளப்புகளும், அங்காடிகளும் பெருகின. பின்னரான இரண்டுதேர்தல்களில் ச.நா வின் கட்சி தோல்வியுற்றது. மெக்கன்ஸி பிரித்தானியாவில் “றெயில் ராக்” கம்பனிக்கு வழங்கிய மட்டமான ஆலோசனையும் அதன் அடிப்படையில் கம்பனி கட்டுமான வேலைகளில் பண்த்தைசெலவிடாமல் பங்குலாபத்தை பிரித்துவழங்கியது. விழைவு பல ரெயில்வே விபத்துக்களுக்கு காரணமானதும், உயிரிழப்பு ஏற்பட்டதும், தொடர்ந்து தொழிற்சங்கங்களினதும், பயணிகளது அமைப்புகளினது வற்புறுத்தலாலும் பி.அரசு எடுத்த ந்டவடிக்கையால் கம்பனி திவாலானதும் அனைவ்ரும் அறிந்ததே. மெக்கன்ஸியினதும், பிறைஸ் வோட்டர்கவுஸ் கூப்பர்( இது உலகில் பெரிய நாலு கண்க்காய்வு நிறுவங்களில் ஒன்று) போன்றவற்றின் அரசியல் பலம், குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. பி.டபிள்யு.சி யின் வருடவ்ருமானம் சுமார் 15 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ். இலங்கையின் தெசியவருமானம் சுமார் 9 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ்.
//நகரமயமாதல் சரியா பிழையா என்பதல்ல கேள்வி. நகரமயமாதல் தன்னளவிலே தீயது என்பது கட்டுரையின் வாதமுமல்ல,// எந்தத் தேவையையும் நலன்களையும் கருத்திற் கொண்ட நகரமயமாதல் என்பதே கவனத்துகுரியது.என்று கருத்தெழுதியுள்ள நண்பருக்கும் மற்றும் சீனா தன்னைக்கப்பாற்றிக் கொண்டுவிட்டது என்று எழுதியுள்ள நண்பருக்கும்,இன்றைய செய்தியில் மற்றுமொரு சுரங்கம் சீனாவில் இடிந்ததால் பலர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது.
உண்மையில் நகரமயமாதல் தன்னளவில் தீயது என்ற வாதத்தை ஒப்புக்கொண்டாகவேண்டும்.
அவற்றைச் சார்ந்திருப்போர் வாழ்வு கேள்விக் குறியாய் குறுகிப் போயிற்றுஎன்பது மிகமிக உண்மையாகும்.. வேளாண்மை நிலங்கள்,மரங்கள்,விலங்குகள் எல்லாவற்றையும் விரைவாக எழுகின்ற கட்டிட நகர்கள் முற்றாக விழுங்கி விட்டன. விச வாயுக்களால் சிதறடிக்கப்பட்டு வான மண்டலத்தில் கவசமாக இருந்த ஓசோன்படலம் விலகிப் போவதால் சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் நமக்குப் புற்று நோயை ஏற்படுத்துகின்ற காரணியாக இருக்கிறது.பன்னாட்டு நிறுவகங்களும் உள்நாட்டு நிறுவகங்களுமாக போட்டி போட்டுக்கொண்டு கனிமச்சுரகங்களைத்தோண்டி நிலத்தைச் சீரழித்துச் சின்னாபின்னப் படுத்துகின்றன. பூமியின் கவசமாக இருந்த காடுகள் அழிக்கப் படுகிறது.தாவர வளர்ச்சி ஊக்குவிக்கப் படவில்லை. தரிசு நிலங்கள் அதிகரிக்கின்றன. புவி வெப்பமடைய துருவப் பனி உருகுகிறது. நீர் உயர்ந்து மண்ணரிப்பினால் நிலம் கொள்ளை போகின்றது. விவசாய நிலங்களுக்கு அதிகச் சத்தூட்டிக் கழிவுபொருட்டகளை உரமாக மாற்றிய நுண்ணுயிர்களும், மண்புழு,பூச்சிகள் மற்றும் பெயர் அறியா உயிரினங்கள் யாவும் செயற்கை இரசாயனப் பேய்களால் இல்லாதொழிக்கப் பட்டுவிட்டது. தாவரங்களிலும், மரங்களிலும் மகரந்தச் சேர்க்கை ஏற்படக் காரணமாயிருந்த வண்டுகளும் வண்ணாத்துப் பூச்சிகளும் விசக் கிருமிகளால் அழிந்து போனதால் மரங்கள் மலடாகின்றன.
இவைகளைப் பாதுகாக்க வேண்டிய உலகம் தழுவிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்கள் அல்லது நீங்கள் கூறுகிற கருணாநிதியின் அரசு தப்பித்து ஓடுவனவாகவும், வேலியே பயிர் மேய்வனவாகவும் மாறி சூழலை நாசம் செய்வதில் பங்கேற்றுப் பல்லிளிக்கிறார்கள்.
இது நிதர்சனமான உண்மை.இதற்குள் நீங்கள் எதையோ போட்டுக் குழப்புகின்றீர்கள். சரியென்றும் நீங்கள் சொல்லப்போவதில்லை,பிழையென்றும் சொல்லாவிட்டால் நீங்கள் சொல்லவருவது எதை.
மிஸ்டர் புடுங்கி,கிரேக்க நாட்டில் டாய்லட் பேப்பரை உபயோகிக்க முடியாது,ஏனென்றால் கழிவு நீரகற்றும் குழாய் சிறியது,அடைத்துக் கொள்ளும்.அதைவிட சிறியது சென்னை மாநகரத்தின் கழிவு நீர் கால்வாய்.இலவச கலர் டிவி முதலீடு இதற்கு செய்யப்பட்டதா?,குடிநீர் பிரச்சனைக்கு முதலீடு?.ஆனால் பெரிய ஓட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் சப்பளை,உற்பத்தி பொருள்களை கப்பலில் ஏற்ற சாலை,துறைமுக வசதி,ஜாதி அமைப்பை பயன்படுத்தி சுதேசி எண்ணத்துடன் கேள்வி கேட்கும் ஜாதிகளை இரண்டாம் முள்ளியவாய்க்காலுக்கு அனுப்பி,முன்பு காக்கி அரை டவுசரும் தோள்பட்டையில் பித்தளை பட்டியும் அணிந்த கூலித் தொழிலாளர்களுக்கு பேண்டும் சட்டையும் கழுத்தில் புகைப்பட அட்டையும் கொடுத்து அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு வேலை வாங்கினால் முதியோர் ஓய்வூதியம் உள்ளதா?.
இதைதான் நவ காலனித்துவம் என்பது!.
சென்னை நகரம் நவீன நகரமாவதால் சுற்றுப்புர சூழல் கெடாது.இது மக்கள் சார்ந்ததா என்பதே கேள்வி!.
மொட்டை தலையர்களிடம்(தனியார் ஆலோசனை நிறுவனங்கள்) செனையை எப்படி நவீனப்படுத்த வேண்டும் என்பதை விட்டு விட்டு அவர்களிடம் பணத்தை வாங்கி குடும்பத்துடன் “என்ஜாய்” பண்ணுவது எதை சாறும்!.?
“ஓசோன் படலம்” சென்னை நவீனப்படுவதால் கிழியாது,ஓசோன் படலம் கிழிவதற்கு உலகின் இருபது சதவிகித மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவும் அமெரிக்காவும்தான் காரணம்!….
அய்ரோப்பா ஓசோனில் ஓட்டை போடுவதை விட்டாயிற்றூ ஜேம்ஸ் அமெரிகா சைனாவைக் குற்றம் சாட்ட இந்தியா நசுக்கிடாமல் தொடர்கிறது.
பிடுங்கி,
தன்னளிவிலேயே தீயது என்று வைத்துக் கொள்ளுவோமே.
அதற்கான மற்று என்ன?
நகரமாதல் என்பது அடிமைச் சமூகக் காலத்திலேயே இருந்தது. உங்கள் தர்கத்தின் நீட்சி, மனிதர் நாகரிகம் அடைந்ததே தவறு என்ற முடிபிற் தான் கொன்டுபோய் விடும்.
சாத்தியமானவற்றின் பேரிலேயே சரி பிழைகள் பற்றி விவாதிக்க முடியும்.
இன்றய மாநகர உருவாக்கம் மனித இருப்பின் நெருக்கடிக்குக் காரணமானது ஏன் என்ற கேள்வி முக்கியமானதே ஒழிய வெறும் சரி பிழைகள் பற்றிய ஆன்ம விசாரமல்ல.
இங்கு மெத்தப்படித்த பலர் நேரடியாகச்சம்பந்தப்பட்டவர்கள் போல் விலாவாரியாக உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் கவர்ச்சியான சொல்லாடல் கொண்டு நியாயப்படுத்தி முடிவுக்கு வந்தேவிட்டனர் பாமரரான என்போன்றவர்களின் கருத்து எனது காது மூக்கு, கடி வாங்குவதற்கேதுவாகவும் அமைந்திட வாய்ப்புண்டு, இருந்தும் எனது கருத்து,நகரமயமாதல் உலகத்தில் நன்மையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது, வளர்ந்த நாடுகள் மக்கள் நலன்களை முதன்மையாகக்கொண்டு நகரமயமாக்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கின்றன. மக்களின் அடிப்படை மதிக்கப்படவேண்டும், அப்படியானால் அவை நன்மையையே தோற்றுவிக்கும் , ஆனால் இந்தியாவில் உருவாக்கப்படும் நகரமயமாக்கல் அரசியலை மையப்படுத்திய முதளாளித்துவ திணிப்பாகவே கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பெருத்த அரசியல் மாற்றமும் சரியான அரசியலறிவும் மக்களுக்கு சென்றடையாதவரை.அரசியல் சுயநலவாதிகளின் பை நிறைப்பாகவே நகரமயமாக்கலோ,வேறு வளர்ச்சித்திட்டங்களோ ஏமாற்ற அரசியலுடன் கலந்து காய் நகர்த்தப்படுகின்றன,
வல்லரசுகளின் ஆடுகளமாகவும் உலக ஒழுங்கு விதிகளின் தெற்காசிய வாசற்கதவாகவும் இலங்கை இன்று கருதப்படுகிறது.
மருதையன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் பொருந்தும். சில மேல்மட்ட அதிகாரங்கள் தீர்மானித்துத் தான் ஈழக் கொலைகளே நடந்தது. இப்போதும் கூட அதுதான் நடக்கிறது. என்ன அதை எல்லாம் எப்படி நடத்துவது என்பது மட்டும் ராஜபக்ச குடும்பம் தீர்மானிக்கிறது. அவர்கள் அவற்றை நடத்துவதற்கு பெற்றுக்கொள்ளும் கொமிசன் அல்லது சன்மானம் தான் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கொலைசெய்யும் சுதந்திரம்.
நல்லது.கலகத்தால் சிந்தனை பிறந்தால் மனித வாழ்வு உயர்வடையும். பிடுங்கியை புடுங்குவதாக நினைத்து தானே பிடுங்குப்பட்டு நிற்கிற JAMES FREDRICH அவர்களுக்கு நவகாலனித்துவத்துவத்திற்கு உதாரணம் காட்ட நீங்கள் எங்கும் போகத்தேவையில்லை.ஆங்கிலேயர் போயும் அவர்களின் பெயரைத்தாங்கி அவர்கள் எழுத்திலேயே தமிழ் இணையத்திலும் பின்பற்றும் தங்களின் எஜமான விசுவாசம் தான் நவகாலனித்துவம். மானிட சிந்தனையின் மகுடங்களாக கருதப்படும் அரிஸ்டோட்டலும்,பிளேட்டோவும் பிறந்த கிரேக்கத்தில் டாய்லட் பேப்பரின் பிரச்சனையை மட்டுமே பார்த்துவந்த உங்கள் சிந்தனை பெரிது.சென்னையில் ஓசோன் படலம் கிழியாது. அமெரிக்காவில்தான் கிழியும் என்ற மாயை உங்கள் மனதில் ஒட்டப்பட்டிருக்கிறது. எதற்கும் அமெரிக்காவை பிணக்காக்கி நீங்கள் தப்பித்துக் கொள்கிற தந்திரம் இது. இது உங்களுக்கு என்றில்லை எம்மண்ணின் புத்திரர்க்கு வாய்த்துள்ள பெரு நோய். அடுத்தவன் மேல் பழிபோட்டு தான் தப்புதல்.
முடிந்தால் கூவத்தை செண்ட் குப்பிகளால் நிரப்பி வருங்காலம் டாய்லட் பேப்பரால் துடைத்துக் கொள்ளும்.
தோழர் சிவாவிற்கு தங்களின் கருத்துக்கள் ஏற்புடையது என்றாலும்,
சரி பிழைகளை ஆராயாமல் எப்படி ஓர் முடிந்த முடிபிற்கு வருவது. இதைவிடவும் சரி என்று கூறி அந்தக்குறியீட்டையே சரித்துப்போட்டு விட்டு அதனைத் தான் சரியென்று வாதாடுபவர்கள் நாங்கள்.
நகரமயமாதலின் உச்சக் கட்டத்தை நியு யோர்க் நகரின் புருக்கிளின் பகுதியில் காணலாம். நவீன நகரமயமாக்கல் என்ற பெயரில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தவா;களின் வீடுகள்(தொடர் மாடிக் கட்டிடத்தில் உள்ள) அபரிக்கப்பட்டு செல்வந்தர்கள் வாழும் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. அவர்களின் சிறு கடைகள் தொழிலகங்கள் அகற்றப்பட்டுள்ளன. நகரின் தூரப் பகுதிகளுக்கு இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கல்வி இழந்து தொழில்இழந்து துயரத்தில் வாழகின்றனர் இப் பகுதி மக்கள். நாட்டின் சகல பகுதிகளும் அபிவிருத்தி பரவலாகவும் சமமாகவும் நடைபெறவேண்டும். எண்ணெய் வியாபாரிகள் மாற்றுச் சக்திகளை வரவேற்பதில்லை. இன்று உலக சக்தி வளம் இவர்களிடம் தான் தங்கியுள்ளது. அதே போன்று நகர நில பிரபுக்கள் அதி வேக நகரமயமாக்கல் மூலம் லாபம் சம்பாதிக் விரும்புகின்றார்கள்.
சிங்கப்பூரும் நகரமாய்த்தானே கிடக்குது சிதைந்தா போயிற்றூ?///
சிங்கப்பூர் நகரமாயில்லை. நரகமாகத்தான் உள்ளது. சிங்கப்பூர் என்ற வானுயர் கட்டிட நாட்டை கட்டியெழுப்பியோர் அங்கு குடிவந்த தொழிலாளிகளே. இவர்கள் மிக மோசமாக நடாத்தப்படுகின்றார்கள். வட அமெரிக்கா (கனடா-அமெரிக்கா) நிர்மாணிப்பின் பின்னால் சீன இந்திய இத்தாலிய தொழிலாளிகளின் பங்கு அதிகம். அவர்கள் மீண்டும் அந்த நாட்டினுள் வர விரும்பியபோது தலை வரி விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் இவற்றை மிஞ்சும் அளவிற்கு இந்த தொழிலாளர்களை நடாத்துகின்றது.
http://theonlinecitizen.com/2010/02/migrant-in-singapore-cinema/
http://www.yawningbread.org/arch_2009/yax-1014.htm
http://www.globalissues.org/news/2010/09/16/6962
http://ipsnews.net/news.asp?idnews=50302
1885 head tax
Main article: Head tax (Canada)
The Chinese Immigration Act of 1885 stipulated that all Chinese entering Canada would be subjected to a head tax of $50. The act was mostly to discourage the lower class Chinese from entering, since Canada still welcomed the rich Chinese merchants who could afford the head tax. After the Government of Canada realized that the $50 fee did not effectively eliminate Chinese from entering Canada, the government passed the Chinese Immigration Act of 1900 and 1903, increasing the tax to $100 and $500, respectively. In 1923, the government passed Chinese Immigration Act, 1923 which prohibited all Chinese from immigrating to Canada.
On 22 June 2006, the Prime Minister of Canada Stephen Harper delivered a message of redress for a head tax once applied to Chinese immigrants.[5] Survivors or their spouses will receive $20,000 CAD compensation.[5]
[edit] New Zealand
Main article: New Zealand head tax
The numbers of the Chinese immigration went from 20,000 a year to 8 people after the government-imposed “head tax”. New Zealand imposed a poll tax on Chinese immigrants during the 19th and early 20th centuries. The poll tax was effectively lifted in the 1930s following the invasion of China by Japan, and was finally repealed in 1944. Prime Minister Helen Clark offered New Zealand’s Chinese community an official apology for the poll tax on 12 February 2002.[
oru gramam nagaramayamathal enbathil theemai illai , aanal varappogum maatrangal nam india makkalukkum nam vaalkai nalangalukkum theengu vilaivikkatha vagaiyil amaithal vendum enbathu en sinthanai……….