விடுதலைப் புலிகளின் தற்கொலைப்போராளி ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த வல்வெட்டித்துறை நகரசபை பணியாளர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில்விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.
கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததையடுத்தே அவர் விடுதலைசெய்யப்பட் டிருக்கின்றார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் 48 வயதுடைய ஆறுமுகம் கனகரத்தினம். நகர சபையின் காவலாளியான இவர் 5 பிள் ளைகளின் தந்தையுமாவார். 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவருக்கு கொழும்பு மேல் நீதிமன்று 15 வருட சிறைத்தண்டனையை 2004ஆம் ஆண்டு வழங்கியது. இதையடுத்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் அவர் சார்பில் சட்டத்தரணி என். சிறிகாந்தா மேன் முறையீடு ஒன்றைச்செய்திருந்தார்.
இதையடுத்தே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை ரத்து செய்துள்ளதுடன் அவர் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வில்லை எனக் கூறி விடுதலை செய்துள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள ஆறுமுகம் கனகரத்தி னத்திற்கு இப்போது வயது 60 ஆகும் அவர் இப்போது ஓய்வு பெறும் நிலையையும் தாண்டிவிட்டார். குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி 12 வருடங்கள் சிறையில் இவர் தடுத்து வைக் கப்பட்டிருந்தது போன்று பல தமிழ் இளைஞர் யுவதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.