தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில், 10 ஆயிரம் வாக்குச் சாவடிகள் “வெப்காஸ்டிக்’ முறையில் படம் பிடிக்கப்பட்டு, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். இதைப் பார்ப்பதற்கு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ மூலம் படம் பிடிக்கப்படுகிறது.
கருணாநிதி குடும்பம், ஜெயலலிதா ஆகியோர் சார்ந்த வியாபார நிறுவனங்களிடையேயான போட்டியாக இத் தேர்தல் அமையும். முன்னெப்போதையும் விட தேர்தலைப் புறக்க்கணிக்கக் கோரும் அரசியல் பெருமளவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.