புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று நாளை –20.11.2009; 10 pm;– சன்றைஸ் வானொலியில் கருத்து விவாதம் ஒன்றையும் உரையாடல் ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற ஈழ ஆதரவுப் போராட்டங்களை இன்றுவரை விட்டுக்கொடுப்புக்களைக் கடந்து நிகழ்த்திவரும் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் இந்தியாவிலிருந்து உரையாடலில் கலந்துகொள்கிறார். பாலன் , சபா நாவலன் ஆகியோர் இந்நிகழ்வுகளை நெறிப்படுத்துவர். புதிய பரந்த உரையாடல் தளம் ஒன்றில் பரந்துபட்ட சமூக ஆர்வலர்களை இணைப்பதே, இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் புதியதிசைகளின் உடனடி இலக்கு என்று அதன் அமைப்பாளர்களில் ஒருவர் இனியொருவிற்குத் தெரிவித்தார்.
இதைப்படித்துவிட்டு பலர் என்னுடன் தொடர்புகொண்டு இது பற்றி விசாரித்து வருகின்றனர்.இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் புதிய திசைகள் என்ற அமைப்பிற்கும் மற்றும் அவ் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந் நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.ஒருவேளை பெயர்க்குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறேன்.இதனை விசாரித்து இனியொரு தீர்க்கும் என நம்புகிறேன்.
பாலன்,
ஒரு நூறு பேர் கொண்ட தமிழர்கள் கூட்டத்தில் பாலன் என்று சத்தம் போட்டுப்பாருங்கள் ஒரு குரலாவது பதில் தரும். பாலன், ஆயிரம் பாலன்கள் இருப்பார்கள் .
தோழர் பாலன் என்ற பெயரில் நீண்ட நாட்களாக நான் எழுதிவருவதாலும் “இனியொரு”வில் கூட இந்தப்பெயரில் கருத்துக்கள் எழுதியிருப்பதாலும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தோழர் பாலன் என்னையே குறிப்பதாக சிலர் கருதினர்.அவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு இது பற்றி கேட்ட பின்பே இந்த பெயர்க் குழப்பத்தை நான் புரிந்து கொண்டேன்.எனவே இதுபோன்று குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் “தோழர்பாலன்” நான் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிடப்படும் அமைப்புக்கும் எனக்கும் எந்த சம்பநதமும் இல்லை என்பதையும் தெரியப்படுத்துமுகமாக எனது கருத்தை பதிவு செய்தேன்.அதனை பிரசுரித்து விளக்கம் கொடுத்த இனியொருவுக்கு நன்றிகள்.
புலம் பெயர்ந்த தமிழர்களீடையே நமது நிலைப்பாடுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யோதயத்திற்கு நன்றி. மயில்.