ஈழப் போராட்டம் குறித்த விமர்சனத்திலிருந்து அடுத்த நிலையை நோக்கிய நகர்வின் அடிப்படைகளை முன்வைக்கும் தோழர் காதரின் உரை இன்றைய சிக்கலான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தனது தொடர்ச்சியை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற நீண்ட தேடலுக்கான ஆரம்பப்புள்ளி எனக் கருதப்படும் இந்த உரை மக்கள் பற்றும் சமூக அக்கறையும் உடைய அனைவருக்கும் அவசியமானது.
காதர் நூல் பற்றிப் பேசியது நன்று.ஆயினும் ஐயரின் பதிவில் சேருமதியற்ற,அதாவது சாட்சியற்ற சத்தியசீலனின் மதிப்பெண்களில் முக்குளித்து போனது ஏன்?
Great. My friend B A. Cader .
Minister Athaullah said that Honourable Ranil Wickremasinghe relieved that guy. He honourably or not was not caught alive.
தோழர் காதர் அவர்களே,தங்களது குரலிலேயே கருத்தினைக் கேட்டமை மகிழ்வைத் தருகின்றது.. தாங்கள் கருத்துக்களை யதார்தமாக எடுத்துவைத்திருகின்றீர்கள். சரளமான பேச்சுவன்மை மேலும் தங்கள் பேச்சுக்கு வலு சேர்க்கின்றது..ஆனாலும் மேலும் ஒரு போராட்டம் பற்றியும்,அதற்கு முக்கியமாக ஆயுதத்தேவையும் பற்றிக் குறிப்பிடுகின்றீர்கள். ஈழம் பற்றிய கனவோடு இருந்தவர்களைவிட தங்களின் கருத்து மேலதிகமாக எதையும் தொடவில்லை. சுயநிர்ணய உரிமை பற்றியோ, முஸ்லிம்களின் போராட்ட இடைவெளி பற்றியோ,தார்மீககடமை பற்றியோ,தமிழர்களுக்காக இன்னும் அக்கறையோடு பேசுகிறநல்ல சிங்கள தேசியவாதிகளையோ தாங்கள் மூடிவிட முனைகின்றீர்கள். யாழில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை புலி யாழ்ப்பாணம் விட்டகன்ற பின்பும் கொண்டு வர எம்முயற்சியும் எடுக்காது பிழைபிழை என்றுகத்திகோண்டே கருத்தும் கட்டுரையும் கவிதையுமாய் விற்றுத் திரிந்தவர்களின் வெறும் வேதாந்தங்களே நம் முன் பெரும் பத்திரிகைக் காடாய் விரிந்து கிடக்கின்றது. பின்லேடனை மனுக்குலத்தின் மாபெரும் எதிரி என்கின்ற தாங்கள் தலிபான்களைத் தலைவர்களெனப் போற்றுவீர்களா? நீங்கள் புலிக்காகப் பரிந்துரைக்கின்ற காரணங்களை விடவும் பின்லேடனின் தாக்குதலுக்கு அதிக பட்சமான காரணங்களைப் பரிந்துரைக்கலாம். ஆனால் உண்மை என்பது ஒன்றே ஒன்று தான். அதன் காரணமும் ஒன்றே ஒன்று தான்.
காதர் அவர்களே, இந்துசமுத்திரப் பிராந்தியத்தினுள் இலங்கைப் பிரிவினையென்பது சாத்தியமாகுமா??என்கின்ற கேள்விக்கு யாரிடமும் வலுத்த வலுவான பதில்கள் இல்லை.மானிட அவலத்திற்காக நாடுகளைத் துண்டாக்கினால் இந்தியாவே எத்தனை துண்டாகும் என் கின்ற பயமும், கேள்விகளும் புதியவை அல்ல. ஈழப்பிடிவாதம், அல்லது பிடிமானம் என்பது தமிழ்மானிட அவலத்திற்கான கருப்பொருள் என்பதைவிடவும்,மேட்டிமைக்காரப் பேச்சுப் புலிகளின் பேசு பொருள் என்பதே சாலப்பொருந்தும். ஐயர் அவர்கள் ஒரு அர்ச்சகர் என்பதும் அவர்தன் சமூகக் கட்டுமானங்களை உதைத்தெறிந்துவிட்டு தேசிய விடுதலையோடு சங்கமிக்கின்ற துணிவு போற்றத்தக்கது எஙின்ற காதர் அவர்களின் வாதம் உன்னதமானது. பார்ப்பனருக்கு எதிரான புரட்சியே தலித் மக்கள் புரட்சியாகக் கணிக்கப்படுகிற அல்லது பேசப்படுகிற இன்நாட்களில் ஐயர் அவர்களது நூல் வெளி வந்திருப்பது தனிச் சிறப்பு. பேச்சுத் துடுப்பெடுத்தாடும் சீமான் தொடக்கம் நம்பிக்கை தருபவராகத் தெரிந்த ஆதவன் தீட்சண்யா வரை பார்ப்பனரைத் திட்டிதீர்ப்பதுதான் தலித் இயக்க வளர்ச்சியின் படிக்கல் என்றுநம்புகின்றார்கள், எழுதுகின்றார்கள்
சரியோ பிழையோ இது ஒருவரின் கருத்து. கருத்துகள் முட்டி மோதட்டும்.
I would like to meet this Cader, too, one day, soon.
I like to write in English only. Sri Lanka Police is hiring Tamils and Muslims locally for civil administration in the North and East. Janab Nuhuman of Kalmunai and formerly of University of Jaffna came to Batticalaoa Devanayagam Hall and gave a talk.
அது தானே பார்த்தேன் …. அதுகளை எங்கே இன்னும் காணோமே என்று…. வந்துட்டுதுகள் …. ஒன்டாக சேர்ந்து வந்துட்டுதுகள்…. லொள் … லொள்…. லொள்…. சொல் … சொல்.. லொள்.. லொள்..
Daily Mirror – United States Special Forces in Sri Lanka / Shri Lanka. Fort Stewart, Savannaugh, Georgia, USA. Rapid Deployment Force of Jimmy Carter.1981.
Civil Engineer Shamsihabdeen of Nintavur at Valdosta, Georgia, USA.